லாவோஸ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர் செங் சைஃபன். அமெரிக்காவின் ஓரேகன் மாஹாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரில் வசித்து வரும் செங் சைஃபன் கடந்து எட்டு வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு கீமோ தெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்னும் எத்தனை நாட்கள் உயிர் வாழ முடியும் என தெரியாமல், தனது குழந்தைகள் மற்றும் மனைவியின் எதிர்காலம் பற்றி கவலையுடன் காலத்தை கடத்தி வந்த செங் சைஃபனுக்கு திடீர் அதிர்ஷ்டமாக லாட்டரியில் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.
தொடர்ந்து பல வருடங்களாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்டிருந்த செங் சைஃபனின் லாட்டரி மோகத்திற்கு மனைவி டுவான் பெனுவும் ஆதரவாக இருந்துள்ளார். பல வருடங்களாக லாட்ட்டரி சீட்டு வாங்கி வருவதலா, எந்த எண்ணிற்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என கணக்கிட்டு பார்த்த காகிதங்கள் பண்டல் பண்டல்களாக செங் சைஃபனின் படுக்கையறையில் கிடக்கின்றன. அப்படி கணக்கிட்டு பார்த்து வாங்கிய லாட்டரி சீட்டு ஒன்றின் மூலம்தான் செங் சைஃபனுகு 1.3 பில்லியம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 7ம் திகதி, தன் மனைவி மற்றும் தோழி லைசா சோவுடன் சேர்ந்து, எந்த எண்ணிற்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என தன் பழைய அனுபவங்களை வைத்து கணக்கிட்டு சில குறிப்பிட்ட எண்களை கொண்ட பவர்பால் நிறுவன லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார் செங் சைஃபன். அதில் ஒரு லாட்டரிக்குதான் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. எனவே, தனக்கு உதவியாக இருந்த மனைவி டுவான் பெனுக்கு 25 சதவீதத்தையும், தோழி லைசா சோவிற்கு 50 சதவீதத்தையும் கொடுக்கபோவதாக சொல்லியுள்ளார் செங் சைஃபன்.
பல வருடங்களாக லாட்டரி சீட்டுகளை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு கனவுகளுடன் கவலையில் தூக்கம் வரமால் படுத்து புரண்டு கொண்டிருந்த செங் சைஃபனின் வாழ்க்கை ஒரே நாளில் ஒட்டு மொத்தமாக மாறி விட்டது.
"நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருந்தேன். என் குழந்தைகள் மிக சிறியவர்கள். இன்னும் எத்தனை நாட்கள் நான் வாழ்வேன் என தெரியாது, என் காலத்திற்கு பின் என் குழந்தைகள் மற்றும் மனைவி எவ்வளவு கஷ்டப் படபோகிறார்கள் என நினைத்து நித்தம் கண்ணீர் வடித்தேன். என் மன்றாட்டுகள் கடவுளை எட்டி விட்டன. இனி எனக்கு கவலையில்லை. எனக்கு உடல் நிலை மிக மோசமாக உள்ளது. எனவே, சிறந்த சிகிச்சை எடுக்க இப்பொழுது எனக்கு பணம் கிடைத்துள்ளது. என் காலத்திற்கு பின் என் குழந்தைகள் வசதியாக வாழ முடியும். நான் இருக்கும் வரை குழந்தைகளை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ள முடியும்" இப்படி உற்சாகத்தில் பேசும் செங் சைஃபன் முதலில் ஒரு சொந்த வீடு வாங்கும் திட்டத்தில் உள்ளார்.
செங் சைஃபன் வென்ற பரிசு தொகை 1.3 பில்லியனுக்கான காசோலையை, ஏப்ரல் 10ம் திகதி லாட்டரி சீட்டு உரிமையாளர்கள் செங் சைஃபனுக்கு வழங்கினார்கள்.
தனக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது என நம்பும் செங் சைஃபன் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்வேன் என சொல்லியுள்ளார்.
1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 10,000 கோடி. அமெரிக்க லாட்டரி வரலாற்றில் செங் சைஃபன் வென்றுள்ள இந்த 1.3 பில்லியன் டாலர் என்பது நான்காவது பெரிய தொகையாகும்.