சென்னை: தீபாவளி தினத்தன்று அமிஞ்சிகரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கழிப்பறையில் பூட்டப்பட்டு, இறக்க விடப்பட்ட 15 வயது சிறுமியை சித்திரவதை செய்து கொலை செய்த வழக்கில் மேலும் நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
குடும்ப வறுமையின் காரணமாக 13 வயது கொண்ட சிறுமி வீட்டு வேலைக்காக வந்து சேர்ந்துள்ளார் .
நசியா (வயது 30) மற்றும் அவரது கணவர் முகமது நவாஸ்(வயது 36) ஆகிய தம்பதியினர் தனது குழந்தையை பாதுகாப்பதற்காக மட்டுமே அச்சிறுமியை வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.
வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்து வந்தது மட்டுமின்றி இத்தம்பதியினரின் வன்கொடுமைக்கும் ஆளாகினார். வேலை செய்ய மறுத்தால் உடம்பில் சிகரெட் மூலம் தீக்காயம் வைப்பது, சிறுமியின் கழுத்தை நெரிப்பது, இரும்பு பெட்டியில் சூடு வைப்பது, சரியாக உணவு கொடுக்காதது போன்ற பல்வேறு குற்றங்களை செய்துள்ளனர்.
நவாஸின் சகோதரி சீமா பேகம் (39), தம்பதியரின் நண்பர் லோகேஷ் (26), அவரது மனைவி ஜெயசக்தி (24) மற்றும் 40 வயதான வீட்டு உதவியாளர் மகேஸ்வரி ஆகியோரும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் ஒன்றாம் தேதி சென்னை காவல் நிலையத்திற்கு தனது வழக்கறிஞருடன் சென்ற நிஷாத், தனக்கு வேலை பார்த்த சிறுமி திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அந்த புகாரின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குளியலறையில் இருந்து அச்சிறுமியை பிணமாக மீட்டனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அச்சிறுமியின் உடலில் சிகரெட் சூடு வைத்த காயங்கள் இருந்ததும், கழுத்தைச் சுற்றி நிறைய காயங்களும் கண்டறியப்பட்டது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தம்பதியினரிடம் விசாரணை நடத்திய போது, நவாசின் நண்பர் லோகேஷ் மற்றும் அவரது மனைவி உடன் சேர்ந்து அச்சிறுமையை அடித்து துன்புறுத்தியதில் மயங்கி கீழே விழுந்துள்ளார். சிறிது நிமிடங்களில் சிறுமி உயிரிழந்ததை அறிந்து, செய்வதறியாமல் குளியலறையில் வைத்து பூட்டி உள்ளனர். துர்நாற்றம் வெளிவராமல் இருக்க வாசனை திரவியம் மற்றும் ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்தப் படுகொலையை மறைத்து சாதாரண மரணமாக சித்தரிக்க முயற்சித்த நிலையில் தனது வழக்கறிஞருடன் காவல் நிலையத்திற்கு வந்து வசமாக போலீசாரிடம் பிடிபட்டுவிட்டனர்.