ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்ட் மாகாணத்தில் ஆய்வகம் ஒன்றில் குப்பிகளில் இருந்த சுமார் 323 கொடிய வைரஸ் கிருமிகள் தொலைந்து போனதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. என்னடா அசால்டா ஏதோ மிட்டாய் தொலைந்தது போல சொல்றீங்களே என்று உலகமே தற்போது மிரண்டு போய் உள்ளது. ஏற்கனவே 2020இல் கொரோனா வைரஸ் சீன நாட்டு ஆய்வகத்தில் இருந்து தொலைந்து நாட்டையே உலுக்கி விட்டது. ஒரு வைரஸ் கிருமி வெளிவந்ததற்கே இயல்பு நிலைக்கு திரும்ப பல வருடங்கள் ஆகிய நிலையில் தற்போது 300-க்கும் மேற்பட்ட வைரஸ் கிருமிகள் தொற்று ஏற்படுத்தினால் மொத்த உலகமே அழிந்து போக வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஆய்வகத்தில் காணாமல் போன வைரஸ்களில் பல கொரோனாவை விட 15 மடங்கு கொடியது. லிஸ்ஸா வைரஸ், ஹென்ட்ரா வைரஸ் மற்றும் ஹாண்டா வைரஸ் உள்ளிட்ட கொடூர வைரஸ்களின் 323 குப்பிகள் குயின்ஸ்லாந்தின் பொது சுகாதார வைராலஜி ஆய்வகத்திலிருந்து, 2021 ஆம் ஆண்டு காணாமல் போனது. ஆனால் ஆஸ்திரேலியா அரசு டிசம்பர் 2024 இல் தான் உலகிற்கு அறிவித்தது.
இந்த வைரஸ் மாதிரிகள் தொலைந்தது தற்செயலா அல்லது தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் வைரஸோடு சுற்றியது போல் யாராவது பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்களா என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை. உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்கான விசாரணையை உடனடியாக தொடங்குமாறு பொது சுகாதார துறையிடம் ஆஸ்திரேலியா அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
ஹென்ரா மற்றும் லிஸ்ஸா வைரஸ்களின் பாதிப்பு மனித உடலையே செயலிழக்கவைக்கும் அளவிற்கு கொடியது. ஹென்ரா வைரஸ் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் வைரஸ்களில் ஒன்று. இது முதலில் வௌவால்கள் மூலம் குதிரைகளுக்கு தொற்று ஏற்படுத்தியது. தொற்று ஏற்பட்ட குதிரைகளோடு இணக்கமாக மனிதர்கள் பழகும் போது அவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்றிவிடுகிறது. இது காய்ச்சல் மற்றும் தலைவலியில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மூளையைச் சென்றடைந்து உயிரையே கொன்றுவிடும். இதுவரை மொத்தமாக ஏழு மனிதர்களுக்கு மட்டுமே 2010 ஆம் ஆண்டில் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் குதிரைகளுக்கு மருத்துவம் பார்த்த கால்நடை மருத்துவர் உட்பட மூன்று பேரின் உயிரை காவு வாங்கியது.
அடுத்ததாக லிஸ்ஸா வைரஸ் ரேபிசை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களின் குழு என்று சொல்லலாம். 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் குயின்ஸ் லேண்ட் பகுதியில் தான் லிஸ்ஸா வைரஸ் மூலம் மூன்று பேர் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு இன்று வரை யாரும் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்ட வரலாறு இல்லை.
சரி, அப்படி என்றால் இதற்கு முன்பு வைரஸ்கள் தொலைந்து போய் உள்ளதா என்பதை பற்றி வரலாற்றை புரட்டிப் பார்த்தால்,1721 ஆம் ஆண்டு பெரியம்மை நோய் மொத்த உலகையே உலுக்கிவிட்டது. 80 ஆம் நூற்றாண்டுகளின் முடிவில் சுமார் 30 கோடி பேரை இந்த வைரஸ் கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 1977 ஆம் ஆண்டு இந்த வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
இது போன்ற ஆய்வகங்களில் இருந்து வைரஸ்கள் கசிய சரியான பாதுகாப்பு முறைகளை ஆய்வாளர்கள் பின்பற்றாதது தான் காரணம் என்று கூறுகின்றனர். தைவானில் ஒரு முறை ஆய்வாளர் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. விசாரணையில் அவர் பாதுகாப்பு உபகரணங்களை சரியாக பயன்படுத்தாமல் அந்த வைரஸை சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்பு தான் நோய் தொற்றுக்கு காரணம் என தெரிந்தது. இது போன்ற சிலர் செய்யும் தவறுகள் தான் எதிர்காலத்தில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்துகிறது. கொரனா வைரஸ்கள் போன்று!!!