பேய், பிசாசு, ஆவி போன்றே உலகை மிரட்டி திகிலூட்டும் விடயங்களில் ஒன்று சீரியல் கில்லர்கள். ஏலியன், பறக்கும் தட்டுகள் என கலர் கலராக கதைகளை விடும் அமெரிக்காவில் சீரியல் கில்லர் கதைகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை. அதவற்றில் பல சீரியல் கில்லர்களின் கதைகள் கற்பனை கதைகளை விட அதிபயங்கமாக நம் ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு கொடூரமானவை. அப்படிப்பட்ட சீரியல் கில்லர் கதைகளில் ஒன்றுதான் இது.
2001ம் ஆண்டு முதல் கடந்த 23 ஆண்டுகளில் குறைந்தது 51 பெண்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவின் சிக்காகோ நகரின் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த இந்த படுகொலைகளில் கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களும் கருப்பின பெண்களாவர். கொலை செய்யப்பட்ட பெண்கள் 18 முதல் 58 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மேலும், அனைத்து பெண்களும் விபச்சாரம் சார்த்த செக்ஸ் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். அனைத்து பெண்களும் பெரும்பாலும் ஒரே மாதிரி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தனர். எனவே அனைத்து கொலைகளையும் செய்தது ஒரு சீரியல் கொலைகாரன் என முடிவு செய்தனர் சிகாகோ போலிஸ்.
கழுத்தை நெரித்து கொலை செய்து, ஆடைகள் முழுதும் கழட்டப்பட்ட நிர்வாண உடல்களை பாழடைந்த பில்டிங்குகள், குப்பை மேடுகள், என ஆள் நடமாட்டமற்ற இடங்களில் குழி தோண்டி புதைத்து விட்டிருந்தான் அந்த சீரியல் கொலைகாரன்.
எந்த துப்பும் கிடைக்காத இந்த சீரியல் கொலைகளை பற்றி தனிப்படை அமைத்து விசாரிக்க தொடங்கிய சிகாகோ போலிஸ், அதுவரை அவர்களால் தீர்ப்ப முடியாமல் கிடப்பில் கிடந்த 20 வழக்குகளுக்கான ஆதாரங்களை கைப்பற்றி 13 கொலைகாரர்களை கைது செய்தார்கள்.
ஆனால், சிகாகோ தொடர் கொலைகளில் சம்மந்தப்பட்ட சீரியல் கில்லரை போலிசால் பிடிக்க முடியவில்லை. எப்படியோ கிடப்பில் கிடந்த 20 கோல்ட் கேஸை முடித்த திருப்தியிலும், கையில் சிக்காமல் கண்கட்டி வித்தை காட்டிக் கொண்டிருந்த அந்த சீரியல் கில்லர் மேல் இருந்த கோபத்திலும், மேலும் வெறி கொண்டு அந்த சீரியல் கில்லரை தேடினார்கள் சிகாகோ போலிஸ்.
50 கொலைகளில் பெரும்பாலானவை சிகாகோவின் தெற்கு மற்று மேற்கு பகுதியை சேர்ந்த மூன்று மாவட்டங்களான வாஷிங்டன் பார்க் மற்றும் கார்பீல்ட் பார்க் பகுதிகளிலேயே நடந்திருந்தன.
இந்த பகுதிகள் வன்முறை, போதை மருந்து கடத்தல், கொலைகள், கொள்ளை, விபச்சாரம் என, மொத்த மூன்றாம் தர வேலைகளையும் குத்தகைக்கு எடுத்து வெற்றிகரமாக நடத்தி வந்து கொண்டிருந்தன.
2018ம் ஆண்டு, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் "தீர்க்கப்படாத கொலை வழக்குகள் கணக்கெடுப்பு" என்ற செயல்பாட்டின் மூலம், சிகாகோ படு கொலைகளை செய்த கொலைகாரன் அல்லது கொலைகாரர்கள் யார் என்ற கேள்வி சிகாகோ போலிஸிடம் எழுப்பப்பட்டது.
இறந்த பெண்களின் உறவினர்கள் நண்பர்கள் என பலரின் அழுத்தத்தால், இந்த மர்ம கொலை வழக்கு பற்றி தாங்கள் அதுவரை கண்டு பிடித்த விடயங்களை பொது வெளியில் பகிர வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர் சிகாகோ போலிஸ்.
"சிகாகோ நகர சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற 51 கருப்பின பெண்களின் மர்ம கொலைகள் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை போன்று தோன்றினாலும், அனைத்து கொலைகலும் ஒரே நபரால் நிகழ்த்தப்பட்டவை என உறுதியாக சொல்வதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அதே போல் இந்த தீர்க்கப்படாத 51 மர்ம கொலை வழக்குகளில் ஒன்றில் கூட கொலைகாரனை பிடிக்கும் சாத்தியமுள்ள ஆதாரமோ துப்போ இதுவரை கிடைக்கவில்லை." இப்படி தங்கள் விளக்கத்தை கூறி மண்டையை சொறிந்தது சிகாகோ போலிஸ்.
ஆனால், யார்? எதற்கு? எப்படி? ஏன்? செய்தார்கள் என அனைத்து உண்மைகளையும் தெரிந்த அந்த 51 கருப்பின பெண்களின் ஆவிகளும், என்றாவது ஒருநாள் இந்த போலிஸ் அவனை அல்லது அந்த கொலைகாரர்களை பிடித்தே தீரும் என்ற நம்பிக்கையில் சிகாகோ நகரை சுற்று வலம் வந்து கொண்டுதான் இருக்கும்.