நம் நண்பர்கள் யாராவது இரட்டையார்களாக இருந்தால் வேறுபடுத்தி பார்ப்பதே கஷ்டம். ஆனால் பஞ்சாபின் ஜலாந்தர் பகுதியில் உள்ள போலீஸ் டீ.ஏ.வி பள்ளி வித்தியாசமானது. சொன்னா நம்ப மாட்டீங்க. 46 ஜோடி இரட்டையர்கள், இரண்டு செட் மும்மூர்த்திகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே மாதிரியான தோற்றமுடையவர்கள்.
போலீஸ் டி. ஏ. வி பள்ளி 1996ஆம் ஆண்டு தொடங்கியது. ஆரம்பத்தில், 3 ஜோடி இரட்டையர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஐந்தே ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. தற்போது மொத்தம் 120 மாணவர்கள் இரட்டையர்கள். அனுமதிக்கப்பட்ட இரட்டையர்களில் 8 பேர் சகோதரிகள், 6 பேர் சகோதரர்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் சகோதர சகோதரிகள் என்று பள்ளியின் முதல்வர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாவது, குழப்பத்தைத் தவிர்க்க, இந்த மாணவர்கள் வெவ்வேறு பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் வெவ்வேறு ஆளுமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனாலும் சில நேரங்களில், இரட்டையர் என்பதால் வகுப்பில் வேறு குழந்தையை தவறுதலாக திட்டி விடுகிறோம் என்று கூறுகிறார்.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மாணவர்கள் வீட்டில் நடக்கும் சிறிய விஷயங்களை கூட பகிர்ந்து கொள்கிறார்கள். வீட்டில் பெற்றோர்கள் சில சமயங்களில் எங்களின் ஒருவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் போன்ற புகார்களை எங்களிடம் சொல்வார்கள் என்று ஆசிரியைகள் கூறுகின்றனர்.
சிறப்புக் கொள்கைகள் எதுவும் இல்லை என்றாலும், இந்த பள்ளி நகரத்தின் இரட்டையர்களுக்கான கல்வி மையமாக மாறியுள்ளது.20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே மாதிரியான தோற்றமுடையவர்கள் உள்ளனர். இதன் காரணமாக சில சமயங்களில், ஆசிரியர்களும் கூட மாணவர்களை கண்டுபிடிக்க தடுமாறுகிறார்கள். அவர்கள் மாணவர்களை வேறுபடுத்தி அடையாளம் கான்பது மிகக் கடினமாக உள்ளது.
உடல் ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல், பெரும்பாலும் ஒரே மாதிரியான நடத்தையைக் காட்டுகிறார்கள். இரண்டு இரட்டை சகோதரிகளில், இருவரும் கல்வியில் முதலிடம் பிடித்தவர்கள் என்று ஆசிரியர் ஷிவானி குறிப்பிட்டுள்ளார். "அவர்களின் பழக்கவழக்கங்கள் நடைமுறையில் ஒரே மாதிரியானவை" என்று கூறி பள்ளியின் மர்மத்தை மேலும் நீட்டித்துள்ளார்.
இரட்டையர்களுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் பெரும்பாலும் உயிரியல் ரீதியானவை, ஏனென்றால் ஒரு கருவுற்ற முட்டை இரண்டாகப் பிரிந்து, ஒரே மாதிரியான இரட்டையர்களை உருவாக்கும்போது அல்லது இரண்டு தனித்தனி முட்டைகள் வெவ்வேறு விந்தணுக்களால் கருவுறும்போது, ஒரே மாதிரியான இரட்டையர்களுக்கு வழிவகுக்கும்.