'வின்னர்', 'ஆளவந்தான்' போன்ற ஏராளமான தமிழ் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் ரியாஸ் கான். இவரும் நடிகை உமா ரியாஸ் காணும் கலப்பு திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும். இவர்களது மூத்த மகனான ஷாரிக் ஹாசன், மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் இரண்டாம் சீசனில் அறிமுகமாகி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அதையடுத்து 'பென்சில்', 'டான்' போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலியான மரியா ஜெனிபரை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்.
மரியா ஜெனிஃபர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். இவருக்கு சாரா என்ற ஒன்பது வயது பெண் குழந்தையும் உண்டு. இந்நிலையில் ஜெனிபர் மற்றும் ஷாரிக் ஜிம் சென்ற போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக கூறியுள்ளனர்.
இவர்களின் காதல் கதை குறித்து யூடியூப் வலைதளங்களில் பேட்டி அளித்து வரும் நிலையில் மரியா கூறியதாவது, "நான் ஒரு சிங்கிள் மதரா என் பொண்ண ரொம்ப வருஷமா வளர்த்திட்டு இருக்கேன். எனக்கு இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளும் விருப்பம் வந்ததே இல்லை. ஷாரிக் வந்த பிறகு தான் என் வாழ்க்கையில் நான் என்னென்ன மிஸ் செய்தேன் என்று புரிய வந்தது. என்னை திருமணம் செய்பவர் என் மகளை நன்றாக பார்த்துக் கொள்பவராக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்."
மேலும் மரியா பேசுகையில் திருமணத்திற்குப் பிறகு ஷாரிக் ஒரு சிறந்த அப்பாவாக உள்ளதையும், மகள் சாரா மிகவும் தைரியமாக இருப்பதாகவும் கூறினார். ஷாரிக் தனது அப்பா மற்றும் மகள் சாராவிற்கு இடையில் நல்ல ஒரு பந்தம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
உமாரி ரியாஸ் கான் இது குறித்து பேசியதாவது, "ஷாரிக் ஒரு மெச்சூர் ஆன பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதே மாதிரி மரியா, ஷாரிக்கிற்கு ஏற்ற பொருத்தமான பெண்."
இந்த ஜோடி இணையத்தில் அடுத்தடுத்து பேட்டிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தங்களது வாழ்க்கையில் நண்பர்களோ குடும்பத்தினரோ எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதையும் ஷாரிக் மற்றும் மரியா தெளிவாக கூறியுள்ளனர்.