Monday 23rd of December 2024 - 07:16:51 PM
வைரலாகும் ரம்யா பாண்டியனின் ஹனிமூன் புகைப்படம்.
வைரலாகும் ரம்யா பாண்டியனின் ஹனிமூன் புகைப்படம்.
Kokila / 12 நவம்பர் 2024

ரம்யா பாண்டியன் நடித்த படங்கள் ஹிட்டோ இல்லையோ இவங்க மொட்டை மாடி போட்டோ சூட் செம வைரல். பிரபல நடிகை ரம்யா பாண்டியனின் திருமணம் நவம்பர் மாதம், முதல் வாரத்தில் ரிஷிகேஷில் நடைபெற்றது. தனது பெங்களூரு காதலனான லவ்வல் தவானை கரம் பிடித்தார். 

மறைந்த இயக்குனர் துரை பாண்டியனின் மகளான இவர் 2015 ஆம் ஆண்டு 'டம்மி டப்பாசு' படத்தின் மூலம் தனது திரை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். 'ஜோக்கர்', 'ஆண் தேவதை', 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' மற்றும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' ரம்யா பாண்டியனின் சில படங்கள் ஆகும். 

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் புடவை மற்றும் மாடர்ன் டிரஸ்ஸில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து, ரசிகர்களை கவர்ந்து வந்தார். அதன் பிறகு பிக் பாஸ் சென்ற ரம்யா பாண்டியன் பிரபலமாகி இருந்தாலும் பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை.

கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியின் போது ரம்யா பாண்டியனுக்கும் லவ்வல் தவானுக்கும் இடையில் காதல் கதை தொடங்கியது. சரி, யார் இந்த லவ்வல் தவான்? இவர் மிகவும் பிரபலமான யோகா பயிற்சியாளர்.பெங்களூரில் உள்ள "ஆர்ட் ஆப் லிவிங்" என்ற அறக்கட்டளையின் கீழ் பல வருடங்களாக யோகா ஆசிரியராக உள்ளார்.

காதலியிடம் 'என்னை திருமணம் செய்து கொள்கிறாயா' என்று கேட்பது தான் வழக்கம். ஆனால் லவ்வர் தவான் நேரடியாக சென்னையில் உள்ள ரம்யபாண்டியனின் வீட்டிற்கு சென்று அவரது அம்மாவிடம் 'உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்' என்று கேட்டுள்ளார்.

இவர்களின் காதலை இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியின் ஓரத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில், தனது ஹனிமூன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை திரையுலக நடிகர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் அருள்நிதி, ரியாஸ் கான், ரியோ, அஸ்வின் குமார் போன்ற பலரும் வருகை தந்தனர்.

திருமண விழாவில் 'குக் வித் கோமாளியில்' பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு கலந்து கொண்டனர். வெங்கடேஷ் பட் விஜய் தொலைக்காட்சியில் இருந்து சன் டிவிக்கு சென்ற நிலையில் இருவருக்குள்ளும் நடந்த சண்டை, மனஸ்தாபம் பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. தற்போது அந்த பனிப்போர் விலகி, இருவரும் உணவு பரிமாறிக்கொண்டு ' நாங்கள் எப்போதுமே நல்ல ஃபிரண்ட்ஸ்' என்று கூறி அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த திருமண விழாவிற்கு சமையல் கேட்டரிங் மாதம்பட்டி ரங்கராஜ் வழங்கியுள்ளார். விதவிதமான சமையல், இனிப்பு, காரம் மற்றும் சாட் வகையில் 'ஃயூஷன்' செய்து அசத்தியுள்ளார். ரம்யா பாண்டியனின் திருமண வரவேற்பு முழுவதும் 'சினி உலகம்' யூட்டியூப் சேனல் வெளியிட்டது.

டிரண்டிங்
நோயாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை; நர்ஸுக்கு 760 ஆண்டு சிறை.
உலகம் / 08 மே 2024
நோயாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை; நர்ஸுக்கு 760 ஆண்டு சிறை.

கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் நோயாளிகளுக்கு அளவுக்கதிகமான இன்சுலின் மற்றும் விஷ ஊசிகளை

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
கஞ்சா வழக்கில் - சவுக்கு சங்கர். விபத்தில் சிக்கிய கார். சவுக்கு சங்கருக்கு என்ன ஆனது?
க்ரைம் / 05 மே 2024
கஞ்சா வழக்கில் - சவுக்கு சங்கர். விபத்தில் சிக்கிய கார். சவுக்கு சங்கருக்கு என்ன ஆனது?

ஹேய் நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்... என அடிக்கடி சிறைக்கு சென்று வரும்  பிரபல அரசியல் வ

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி