லைக்கா தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்த நிலையில், கிளைமேட் மோசமாக உள்ளதால், அசர்பைஜனில் இருந்து மொத்த படக்குழுவும் பேக்கப் செய்து சென்னை திரும்பி விட்டனர்.
அடுத்து எப்பொழுது விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என்பது புரியாத புதிராக உள்ளதால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சிம்புவின் 'AAA' புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பை உடனடியாக தொடங்க அஜித் உத்தரவிட்டுள்ளார்.
தலையின் உத்தரவை கேட்டது படக்குழு பரபரப்பாக படப்பிடிப்பை தொடங்கும் வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர். மே 5ம் திகதியில் இருந்து ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை தொடங்கும் திட்டத்துடன் வேலைகள் படு ஸ்பீடாக முடுக்கி விட்டுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
'குட் பேட் அக்லி' திரைப்படத்தில், பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளார். அஜித்திற்கு ஜோடியாக மீனா அல்லது சிம்ரன் நடிக்க உள்ளநிலையில், ஸ்ரீலீலா படத்தின் இன்னொரு இளம் ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அந்த, இன்னொரு இளம் ஹீரோ யார் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவிக்காத நிலையில், அது யாராக இருக்கும் என ரசிகர்களை தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர்.
படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸை மிகப்பெரும் தொகை ஒன்றிற்கு விற்று விட்டதாக மைத்ரி மூவி மேக்கர்ஸிற்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
பிரபல பார்ஸ் பிலிம்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் 22 கோடி ரூபாய்க்கு 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியுள்ளதாக கோடம்பாக்கத்தில் தகவல்கள் உலா வருகின்றன. அஜித்தின் திரைப்படங்களில் இதுதான் அதிகபட்ச ஓவர்சீஸ் பிஸினஸ் என்பது கூடுதல் தகவல்.