Monday 23rd of December 2024 - 07:55:32 PM
"மது அடிமை" நடிகை ஊர்வசியின் கருப்பு பக்கங்கள்.
எல்லாளன் / 13 மே 2024

கலகலப்பான வெள்ளந்தி கேரக்டரா, கூப்பிடு ஊர்வசியை என கோலிவுட், டோலிவுட் மற்றும் மல்லுவுட் என அனைத்து வுட்டுகளிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பவர் நடிகை ஊர்வசி. கலகலப்பான வெள்ளந்தியாக அவ்வப்பொழுது சிடுசிடு கோபத்தை கொட்டி நடிப்பு வேரியேஷன்களால் அப்ளாஸ் அள்ளுவதில் நடிகை ஊர்வசி பலே கில்லாடி.கடுகு வெடிப்பது போல் படபடவென வந்து விழும் வேகமான டயலாக் டெலிவரிகள் ஊர்வசியின் ஸ்பெஷல் ப்ராபர்ட்டி.

10 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, வளர்ந்து ஹீரோயினாக வலம் வந்து, இன்று அம்மா ரோல்களில் கலக்கிக் கொண்டிருக்கும் ஊர்வசியின் பர்சனல் வாழ்க்கை, நாம் திரையில் பார்க்கும் கலகலப்பு ஊர்வசிக்கு அப்படியே நேர் எதிரானது. திடீர் காதல் திருமணம், கணவ்ருடன் பிரச்சினை, போதை, விவாகரத்து, மீண்டும் திருமணம் என சிலகாலம் ஊர்வசியின் வாழ்க்கை "எங்கே செல்லும் இந்த பாதை" என திக்கு தெரியாமல்  தடுமாறி திரிந்தது. ஆனால், அந்த சோதனைகளையெல்லாம் தனியொரு பெண்ணாக வென்று இன்று மீண்டும் திரைத் துறையில் அசைக்க முடியாத ஒரு அங்கீகாரத்தை பெற்று வீறுநடை போட்டு வருகிறார் ஊர்வசி.

கேரளா மாநிலம் கொல்லம் நகரில், பிரபல நடக நடிகர்களான வி.பி. நாயர் - விஜயலக்ஷ்மி தம்பதிகளுக்கு 1969ம-ம் ஆண்டு ஜனவரி 25-ம் திகதி பிறந்தார் ஊர்வசி. ஊர்வசியின் இரண்டு அக்காக்கள் கலாரஞ்சனி மற்றும் கல்பனா இருவரும் திரைதுறையில் பிரபலமான நடிகைகள். ஊர்வசியின் சகோதரர்கள் கமல் ராய் மற்றும் ப்ரின்ஸ் இருவரும் மலையாளத்தில் ஓரளவு பிரபலமான நடிகர்கள்.

மொத்த குடும்பமும் நடிப்பை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்ததால், ஊர்வசியும் தனது 10 வயதுதிலேயே குழந்தை நட்சத்திரமாக "கதிர்மண்டபம்" என்ற மலையாள திரைப்படம் மூலம் 1979-ம் ஆண்டு தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

தனது 13-வது வயதில் ஹீரோயினாக அறிமுகமானார் ஊர்வசி. "தொடரும் உறவு" என்ற தமிழ் திரைப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார் ஊர்வசி. 1983-ம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்த இந்த திரைப்படம் ஏதோ சில காரணங்களால் தாமதமாகி 1986-ம் ஆண்டு வெளியானது. 1983-ம் ஆண்டிலேயே "நினைவுகள் மறைவதில்லை" என்ற தமிழ் திரைப்பத்த்தில் நடித்தார் ஊர்வசி. என்ன காரணமோ தெரியவில்லை அந்த திரைப்படம் இன்றுவரை வெளிவரவில்லை.

தனது ஆரம்ப கல்வியை கேரளாவின் திருவனந்தபுரம் ஃபோர்ட் பெண்கள் மிஷன் ஹை ஸ்கூலில் படித்த ஊர்வசி, 5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை சென்னை, கோடம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் படித்தார். 

13 வயதிற்குள் பல மலையாள் திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டிருந்தாலும், கே. பாக்யராஜின் "முந்தானை முடிச்சு" திரைப்படம் ஊர்வசியின் திரைப்பயணத்தை அடுத்த கியருக்கு மாற்றி வேகமெடுக்க வைத்தது. அடுத்தடுத்து வெளியான "தாவணி கனவுகள்", "கொம்பேரி மூக்கன்" திரைப்படங்களால் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வர தொடங்கியதுடன், தெலுங்கு, கன்னடம் என மற்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகளை பெற்றார்.

1983-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை 16 வருடங்கள் படு பிஸியாக நடித்து வந்த ஊர்வசி, திடீரென திரைத்துறையில் இருந்து காணாமல் போனார். அதற்கு காரணம் அவரது காதல் திருமணம்.

2000-ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் ம்னோஜ் கே. ஜெயனை திருமணம் செய்தார் ஊர்வசி. 1991-ம் ஆண்டு முதல் ஊர்வசியும் மனோஜ் கே. ஜெயனும் பல மலையாள திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். "சாஞ்சாட்டம்", "மறுபுறம்",  "ஸ்நேகசகரம்", "வெங்களம்", "உட்சவமேளம்" என பல ஹிட் திரைப்படங்களில் இணைந்து நடித்த ஊர்வசியும் மனோஜ் கே. ஜெயனும் காதலித்து வந்தனர், பல வருட காதலுக்கு பின் 2000-ம் ஆண்டு மே 2-ம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மனோஜ் கே. ஜெயன் - ஊர்வசி

திருமணமான சில மாதங்களிலேயே ஊர்வசி மனோஜ் கே.ஜெயன் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கின. சிறு சிறு பிரச்சினைகள் வளர்ந்து பூதாகரமாக மாறி நிற்கும் பொழுது இருவருக்கும் 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேஜா லக்ஷ்மி என்ற மகள் பிறந்திருந்தார். குழந்தை பிறந்த பின் கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் முற்றி இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர்.

திருமணத்தை முன்னிட்டு தன் நடிப்பு தொழிலில் இருந்து விலகியிருந்தார் ஊர்வசி. இதனால், திரைத் துறை நட்பு வட்டத்தினருடனான ஊர்வசியின் தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, ஒரு கட்டத்தில் ஊர்வசி எங்கே என்று தெரியாமல் இருந்தனர் திரைதுறையினர். கணவர் மனோஜ் கே. ஜெயனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த ஊர்வசி நட்பு வட்டாரத்தினரின் தொடர்புகளும் இல்லாமல் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளானார். 

தனிமை, வெறுப்பு, மன அழுத்தம், கவலை அனைத்தையும் விரட்ட மதுவை நாடினார் ஊர்வசி. மது போதையில் இருக்கும் பொழுது கவலை, தனிமை, வெறுப்பு மன அழுத்தம் என எதுவும் அனைத்தையும் மறந்து நிம்மதியாக இருந்ததால், தொடர்ந்து மதுவின் துணையை நாட தொடங்கினார் ஊர்வசி. மது போதையில் தன்னை மறந்து நிம்மதியாக உறங்க தொடங்கினார் ஊர்வசி.

"புத்தி பேதலித்த போதையில் இப்போது உனக்கு ஒன்றும் புரியாது, காலையில் கண்விழி உன்னை கவனித்துக் கொள்கிறோம்" என தங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு ஊர்வசியின் கட்டிலுக்கு அருகிலேயே கொட்ட கொட்ட கண் விழித்து காத்திருந்தன தனிமை, வெறுப்பு, மன அழுத்த பிசாசுகள். 

காலையில் போதை தெளிந்து எழும் ஊர்வசியை, கட்டில் அருகிலேயே காத்திருக்கும் தனிமை, வெறுப்பு, மன அழுத்தம் என அனைத்து பூதங்களும் ஒன்று சேர்ந்து தங்கள் கோர பற்களை காட்டியபடி துரத்த தொடங்கும், அவற்றை எதிர்த்து தன்னை காத்துக் கொள்ள எந்த துணையும் இன்றி மீண்டும் மது என்ற மாபெரும் அரக்கனிடம் தன்னை கையளித்து விடுவார் ஊர்வசி. மது என்ற மாபெரும் அரக்கனை எதிர்க்க முடியாமல் தனிமை, வெறுப்பு, மன அழுத்த குட்டி பிசாசுகள் பொட்டி பாம்பாய் அடங்கி போய் விடுவார்கள். 

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மது அரக்கனிடம் தன்னை மொத்தமாக கையளித்து விட்டார் ஊர்வசி. அவன் இல்லாவிட்டால் அடுத்த நொடியே ஊர்வசியை நோக்கி படையெடுத்தன தனிமை, வெறுப்பு, மன அழுத்த பிசாசுகள். எனவே, 24 மணி நேரமும் மது அரக்கனின் மடியிலேயே அடைக்கலம் தேடிக் கொண்டிருந்தார் ஊர்வசி.

கிடைத்த சின்ன சின்ன பட வாய்ப்புகளும் ஊர்வசியின் மது பழக்கத்தால் கைவிட்டு போயின. ஒரு கட்டத்தில் மொத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல்,  ஊர்வசியின் நிலை என்னவென்று தெரியாத நிலைக்கு சென்றனர் திரை துறையினர். ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக கிசு கிசு ரேஞ்சில் ஊர்வசி "மது அடிமை" ஆன விவகாரம் படப்பிடிப்பு தளங்களிலும் சில மீடியாக்களிலும் பேசு பொருளாக இருந்தது. பலரும் அந்த விசயத்தை கிசுகிசுவாக பேசி கடந்து சென்ற நிலையில், ஊர்வசியின் நெருங்கிய நண்பர்களாக இருந்த சில நடிகைகள் ஊர்வசியை நேரில் சென்று சந்தித்து அதிர்ந்து போனார்கள். 

எவ்வளவு திறமையான் நடிகை இப்படி ஆகி விட்டாரே என கலங்கிய அந்த நட்பு நடிகைகள், ஊர்வசியை கொஞ்சம் கொஞ்சமாக மதுவின் பிடியில் இருந்து மீட்க முயன்றனர். 

ஊர்வசியின் பழைய திரைப்பட வீடியோக்களை போட்டு காட்டி, "ரியல் ஊர்வசியை பார்" என போதையின் பிடியில் இருந்த ஊர்வசியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வந்தனர். தனிமையின் பிடியில் இருந்த தப்பிக்க மதுவின் மடியை நாடிய ஊர்வசி, தன் தோழிகள் மூலம் தனிமையை துரத்த தொடங்கினார். மீண்டும் நடிக்கத் தொடங்கினால் வெறுப்பு, மன அழுத்தம் போன்ற மற்ற பிசாசுகளையும் விரட்டி விடலாம் என ந்ம்பிக்கை கொண்ட ஊர்வசி மீண்டும் நடிக்க முயற்சி செய்ய தொடங்கினார்.

ஆனால், அதற்குள் ஊர்வசி "போதை அடிமை" ஆகி விட்டர், இனி பாழைய ஊர்வசியை பார்க்க முடியாது, அவரை படப்பிடிப்பு தளங்களில் சமாளிப்பது கடினம். என திரைத்துறை சில்லறைகளி சிலரின் புறணி பேச்சுகளால் ஊர்வசிக்கு வாய்ப்பு கொடுக்க பல இயக்குநர்களும் தயங்கினர்.

பல போராட்டங்களுக்கு பின், பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் "அச்சுவிண்ட அம்மா" திரைப்படத்தில் நடித்தார் ஊர்வசி. 6 வருட நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் வெள்ளி திரையில் காலடி வைத்த ஊர்வசி தனது முதல் "கம்பேக்" திரைப்படத்திலேயே சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்று "I am Back" என ரசிகர்களுக்கு அழுத்தமாக ஒரு மெஸேஜை சொன்னார்.

அடுத்தடுத்து சரவெடிகளாக தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் ஊர்வசி. மீண்டும் ஊர்வசியை தேடி வாய்ப்புகள் குவியத் தொடங்கின. ஆனால், இந்தமுறை ஹீரோயினாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களாக. "எதுவாக இருந்தால் என்ன? எனக்கு நடிக்க வேண்டும். இழந்த என் வாழ்க்கையை மீட்க வேண்டும்." என மனதிற்குள் வெறி கொண்டு காத்திருந்த அந்த நடிப்பு அரக்கி, கிடைத்த சின்ன சின்ன ரோல்களை கூட தன் நடிப்பால் பெரிய ரோல்களாக மாற்றி வெற்றி பெற்றார்.

அதுவரை கிடப்பில் போட்டிருந்த தன் பர்சனல் லைஃப் பிரச்சினையை கோர்ட்டில் எதிர் கொண்டு தைரியமாக விவாகரத்து பெற்றார். 2008-ம் ஆண்டு மனோஜ் கே. ஜெயனுடனான தனது திருமணத்தை சட்டப்படி விவாகரத்து மூலம் முறித்துக் கொண்ட ஊர்வசி 2013-ம் ஆண்டு சிவபிரசாத் என்ற சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சிவபிரசாத் - ஊர்வசி தம்பதிகளுக்கு 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஷ்ஷான் பிரஜ்ஜாபதி என்ற மகன் பிறந்தார்.

இப்பொழுது இழந்த தன் வாழ்க்கையை மொத்தமாக மீட்டு மீண்டும் தன் வெற்றி திரைப்பயணத்தை தொடரும் ஊர்வசி இதுவரை 702 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடல்ம் என ஆல்மோஸ்ட் அனைத்து இந்திய மொழி திரைப்படங்களிலும் நடுத்துள்ள ஒரு சில நடிகைகளில் ஊர்வசி மிக முக்கியமானவர்.

ஒரு தேசிய விருது, 5 கேரள அரசின் சிறந்த நடிகைக்கான மாநில விருதுகளை பெற்றுள்ளார் ஊர்வசி. 1989, 1990, 1991 என தொடர்ந்து மூன்று வருடங்கள், சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசு விருது பெற்றவர் ஊர்வசி. 2 தமிழ்நாடு அரசு விருதுகள், 3 ப்லிம்பேர் விருதுகள், 5 ஆனந்த விகடன் விருதுகள், என ஊர்வசி வென்ற விருதுகளின் பட்டியல் மிக நீளமானது.

விரக்தியின் பிடியில் வீணாக வாழ்க்கையை தொலைத்துவிட்டு தடுமாறி நிற்கும் பலருக்கும், எப்படி மீண்டெழுந்து வந்து வாழ்க்கையை வெற்றி கொள்வது என்பதற்கு  ஊர்வசியின் வாழ்க்கை ஒரு சரியான எடுத்துக்காட்டு.

டிரண்டிங்
தோழியை கொன்று பிணத்தை சமைத்து தின்ற சைக்கோ - இஸ்ஸே ஸகாவா 1
க்ரைம் / 10 மே 2024
தோழியை கொன்று பிணத்தை சமைத்து தின்ற சைக்கோ - இஸ்ஸே ஸகாவா 1

16 வயது பால்கோவா மாதிரி இருக்கிறாள். இவளை தின்று விட்டால் போதும், நாமும் உயரமாகி, ஹார்ட்வெல்ட் மாதிர

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி