பாலி தீவில் அமலா பால் தனது குழந்தை மற்றும் கணவருடன் ஜாலியாக விடுமுறைக் கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படங்கள் சாமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திருமணத்திற்கு முன் இதே பாலி தீவிற்கு சுற்றுலா சென்ற அமலா பால் நீச்சல் உடையில் கடற்கரை மற்றும் மலைகளில் சுற்றி கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ஆரவார ஆதரவைப் பெற்றார்.
"ஆடுஜீவிதம்" திரைப்படத்திற்கு பின் குழந்தை பெற்றுக் கொண்ட அமலா பால், தனது ஆண் குழந்தைக்கு 'இலை' என பெயர் சூட்டியுள்ளார். குழந்தை இலை மற்றும் கணவர் ஜெகத் தேசாயுடன் பாலி தீவிற்கு சென்றுள்ள அமலா பால் அங்கு நீச்சல் உடையில் குடும்பத்துடன் கடற்கரையை விசிட் அடித்த தருணங்களை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார்.
குழைந்தை இலையை அமலா பால் தூக்கிச் செல்வதையும் கடற்கரையில் கணவர் மற்றும் குழந்தையுடன் அமர்ந்து பொழுது போக்குவதையும் புகைப்படங்களாக பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கமெண்டுகளையும் லைக்குகளையும் அள்ளித் தெளித்து வருகின்றனர்.