Friday 8th of August 2025 - 05:30:18 AM
11 செ.மீ உயரமே கொண்ட உலகிலேயே மிகச்சிறிய குரங்கு.. எங்கு கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
11 செ.மீ உயரமே கொண்ட உலகிலேயே மிகச்சிறிய குரங்கு.. எங்கு கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
Kokila / 04 மே 2025

குரங்குகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. உலகில் உள்ள அனைத்து கண்டங்களிலும் நம்மால் குரங்குகளை காண முடியும். பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை இவைகளின் ஆயுட்காலம் உள்ளது. உலக அளவில் பார்த்தால் 264 குரங்கு வகைகள் உள்ளன. இதில் ஒரு சில குரங்குகளால் மட்டுமே நிறங்களை வேறுபடுத்தி பார்க்க முடியும். மனிதர்களைப் போலவே ஒவ்வொரு குரங்குக்கும் கைரேகைகள் வேறுபடுகின்றன.

பொதுவாக குரங்குகள் என்றாலே வேடிக்கை நிறைந்ததாக இருக்கும். மொட்டை மடியில் காயவைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது, மரத்திற்கு மரம் தாவுவது என நிறைய குறும்புத்தனங்களை செய்யும். இவைகள் வளர்ந்த பிறகு செய்யும் சேட்டைகளை நாம் ரசித்தாலும் குட்டியாக இருக்கும் போது தான் நமக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வேலை வளராமல் குட்டியாகவே இருந்து விட்டால் எவ்வளவு க்யூட் ஆக இருக்கும். அப்படி உண்மையிலேயே வளராமல் குட்டியாகவே இருக்கும் "செபுல்லா" குரங்கு இனம் தான் பிக்மி மார்மோசெட். இந்த குரங்கினை பற்றி பல வியக்க வைக்கும் விஷயங்கள் உள்ளன.

பிக்மி மார்மோசெட் என்ற குரங்கு இனம் உலகிலேயே மிகச் சிறிய குரங்கு வகையைச் சேர்ந்ததாகும். இது உங்கள் ஒரு விரலின் அளவு தான் இருக்கும். அப்படி என்றால் நினைத்துப் பாருங்கள் எவ்வளவு குட்டியாக, க்யூட்டாக இருக்கும் என்று. 

பிக்மி மார்மோசெட் குரங்கின் உடல்நீலம் 11 செண்டிமீட்டர் முதல் 16 சென்டிமீட்டர் வரையில் மட்டுமே இருக்கும். இருந்தும் கூட இவைகளால் 16 அடிக்கு மேல் குதிக்க முடியும். ஆனால் இந்த வகை குரங்குகளுக்கு வினோதமாக வாலின் நீளம் 17 செ.மீ இருந்து 20 செ.மீ வரை இருக்குமாம். உடல் நீளத்தை விட வாலின் நீளம் அதிகமாக உள்ளது. இந்த வகை குரங்குகள் பசுமையான மற்றும் தண்ணீர் நிறைந்துள்ள பகுதிகளில் வசிக்க அதிகம் விரும்புகின்றன. பெண் குரங்கானது வருடத்திற்கு இரண்டு முறை இரண்டு குட்டிகளை பிரசவிக்கின்றன. இவைகள் மேற்கு அமேசான், பிரேசில் மற்றும் கொலம்பியாவில் அதிகம் காணப்படுகின்றன. 

பார்ப்பதற்கு அடர்த்தியான ரோமங்களோடு தங்கம், பழுப்பு, சாம்பல், ஆரஞ்சு, மஞ்சள் நிற கலவையுடன் இருக்கும். மேலும் இந்த குரங்கு தன்னுடைய தலையை 120 டிகிரி வரை திருப்புமாம். ஆண் குரங்கின் எடை 140 கிராம் மற்றும் பெண் குரங்கு 120 கிராம் எடை கொண்டதாகும். சராசரியாக இவை 14 ஆண்டுகள் வரை வாழும். அதுவே மிருக காட்சி சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்கின்றனவாம். இதற்குக் காரணம், இவைகள் காட்டில் வசிக்கும்போது மரத்திற்கு மரம் தாவும் போது கீழே விழுந்து இறந்து விடுகின்றன.

பிக்மி மார்மோசெட் குரங்குகளுக்கு உணவே பூச்சிகள், புழுக்கள் மற்றும் பழ வகைகள் தான். சிலர் இதனை செல்லப்பிராணியாகவும் விரும்பி வளர்க்கின்றனர். ஆனால் மார்மோசெட் குரங்குகள் தனியாக வாழ்வதைவிட குடும்பமாக வாழ்வதையே விரும்புகின்றன. இதனால், தற்போது அமெரிக்காவில் இந்த குரங்கை செல்லப்பிராணியாக வளர்க்க ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளனர்.

டிரண்டிங்
tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
ஓசி பரோட்டாவிற்கு திகில் திட்டம். ஆடிப் போன தேனி மாவட்டம் அல்லி நகரம்
க்ரைம் / 11 டிசம்பர் 2024
ஓசி பரோட்டாவிற்கு திகில் திட்டம். ஆடிப் போன தேனி மாவட்டம் அல்லி நகரம்

நண்பர்கள் இருவரும் சில பல பரோட்டாக்களை உள்ளே தள்ளி வயிறு முட்ட சாப்பிட்ட பின், கடைசியாக சாப்பிட்டுக்

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி