Friday 8th of August 2025 - 05:33:27 AM
1970 களில் ரஷ்யாவை உளவு பார்த்த அமெரிக்க உளவுத்துறையின் ரோபோ தட்டான் பூச்சி
 1970 களில் ரஷ்யாவை உளவு பார்த்த அமெரிக்க உளவுத்துறையின் ரோபோ தட்டான் பூச்சி
Santhosh / 05 ஏப்ரல் 2025

1970-களின் உளவு அதிசயம்! ஒரு சின்ன தட்டான் பூச்சி, பறந்து பறந்து உங்க வீட்டு ஜன்னல் பக்கத்துல வந்து உட்காருது. “அட, பூச்சி தானே!”னு நீங்க நினைக்கிறீங்க.  ஆனா அது பூச்சி இல்ல, அது ஒரு ரோபோ, உள்ள மைக்ரோஃபோன் வச்சு உங்க பேச்ச ஒட்டு கேக்குற ஒரு உளவாளி! 

இது நம்ம ஊரு Science fiction படம் மாதிரி தெரியுதுல்ல? ஆனா 1970-கள்ல அமெரிக்காவோட உளவுத்துறை (Central Intelligence Agency) இப்படி ஒரு “ரோபோ தட்டான் பூச்சி”ய உருவாக்கி, உளவு பார்க்க முயற்சி பண்ணுச்சு. இதோட பெயர் “இன்செக்டோதொப்டர்”. இது ஒரு பைத்தியக்கார யோசனை , ஒரு சின்ன பறவையோட அளவுல, பறக்குற ரோபோவ உருவாக்கி, ரஷ்ய ஆளுங்க ரகசியமா பேசுறத கேக்கலாம்னு திட்டம் தீட்டினாங்க. ஆனா இது நம்ம ஊரு தட்டான் பூச்சி மாதிரி சும்மா பறந்து விளையாடுச்சா?  வாங்க, இந்த சுவாரஸ்யமான கதைய பாப்போம்.

எதுக்கு இந்த பிளான்?

1970-கள்ல அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில பனிப்போர் உச்சத்துல இருந்துச்சு. ரஷ்ய ஆளுங்க என்ன பேசுறாங்க, என்ன திட்டம் போடுறாங்கனு தெரிஞ்சுக்க உளவுத்துறைக்கு ஆர்வம். ஆனா அவங்க இடத்துக்கு ஆளுங்கள அனுப்ப முடியாது பிடிபட்டா பெரிய பிரச்சனை. அப்போ ஒரு ஒரு உளவாளி யோசிச்சான்: “ஏன் ஒரு பூச்சிய பயன்படுத்த கூடாது?” தட்டான் பூச்சி சின்னதா இருக்கு , அதனால யாரும் சந்தேகப்பட மாட்டாங்க, எங்க வேணா பறந்து போகும். நம்ம ஊருல தட்டான் பூச்சி தோட்டத்துல பறக்குற மாதிரி, இது ரஷ்ய தூதரகம் பக்கத்துல போயி உட்கார்ந்து பேச்ச கேக்கும்னு நினைச்சாங்க. இதுக்கு பேரு “ஆப்பரேஷன் இன்செக்டோதொப்டர்”னு வச்சாங்க

.தட்டான் பூச்சிய எப்படி ரோபோ ஆக்கினாங்க?

இது சும்மா ஒரு பொம்மை பூச்சி இல்ல , இதுக்கு பெரிய தொழில்நுட்பம், பெரிய செலவு ஆச்சு . முதல்ல ஒரு தேனீ வடிவில் ரோபோ பண்ணலாம்னு யோசிச்சாங்க, ஆனா அது  அது சரியா பறக்கல. பிறகு ஒரு உளவாளி “தட்டான் பூச்சி தான் சிறந்தது”னு சொன்னான். உளவுத்துறை ஆளுங்க ஒரு தட்டான் பூச்சி மாதிரி ரோபோவ உருவாக்கினாங்க , அதோட உடம்பு 6 சென்டிமீட்டர், சிறகு 9 சென்டிமீட்டர். உள்ள ஒரு சின்ன எஞ்சின் வச்சு, சிறகுகள மேல கீழ ஆட்டுனாங்க. இதுக்கு ஒரு மணி நேர ஆப்பரேஷன் பண்ணி, ஒரு சின்ன மைக்ரோஃபோன், ரேடியோ டிரான்ஸ்மிட்டர், ஆன்டென்னா எல்லாம் பொருத்தினாங்க. எஞ்சினுக்கு ஒரு திரவ எரிபொருள் வச்சாங்க.இப்போ இந்த தட்டான் பூச்சி ஒரு பறக்குற “ரெக்கார்டர்” மாதிரி ஆயிடுச்சு. இதுக்கு சுமார் 20 மில்லியன் டாலர் செலவு ஆச்சுனு சொல்றாங்க—நம்ம ஊரு காசுல கோடிக்கணக்கு!

எப்படி வேலை செஞ்சுது?

இந்த ரோபோ தட்டான் பூச்சிய நம்ம ஊரு ரிமோட் கார் மாதிரி பயன்படுத்துனாங்க ! இது 60 செகண்ட் பறக்கும், 200 மீட்டர் தூரம் போகும். ஆனா இதுக்கு லேண்டிங் கியர் இல்ல—பறந்து போயி எங்காவது மோதி உட்கார்ந்துடும். உளவுத்துறை ஆளுங்க நினைச்சாங்க, “இது ரஷ்ய ஆளுங்க பேசுறத ரெக்கார்ட் பண்ணி அனுப்பும்”னு. ஆனா இதுக்கு ஒரு பெரிய சிக்கல் இருந்துச்சு அது தான் காற்று!

முதல் சோதனை என்ன ஆச்சு?

எல்லாம் தயாரான பிறகு, உளவுத்துறை ஆளுங்க வாஷிங்டன் டி.சி-ல ஒரு  சோதனை பண்ணாங்க. ரஷ்ய தூதரகம் பக்கத்துல ரெண்டு ஆளுங்க பேசிட்டு இருந்தாங்க. ஒரு காரில் தட்டான் பூச்சிய எடுத்துட்டு வந்து, “போயி கேளு”னு விட்டாங்க. தட்டான் பூச்சி பறந்து சாலையை கடக்க ஆரம்பிச்சுது. ஆனா அடுத்த நிமிஷம்—படார்!! பலமான காற்று வீசி தட்டான் பூச்சி தடுமாறி போயி ஒரு மரத்துல மோதி விழுந்துச்சு

20 மில்லியன் டாலர், ஐந்து வருஷ உழைப்பு, எல்லாம் ஒரு நிமிஷத்துல தோத்து போச்சு…நம்ம ஊரு தட்டான் பூச்சிய பாத்திருக்கீங்களா—அது காற்றுல சுழலும், ஆனா தன் வழியில பறக்கும். ஆனா இந்த ரோபோ தட்டான் பூச்சிக்கு அந்த சுதந்திரம் இல்ல. 5 மைல் வேகத்துல கூட காற்று வீசுனா, அது தடுமாறிடுச்சு.

டிரண்டிங்
கப்பலில் கணவன், கட்டிலில் மனைவி. கன்னாபின்னா கள்ள காதல்கள். டயானே டௌன் 3
பொதுவானவை / 21 மே 2024
கப்பலில் கணவன், கட்டிலில் மனைவி. கன்னாபின்னா கள்ள காதல்கள். டயானே டௌன் 3

நேவியில் பணிபுரிந்த ஸ்டீவ் மாதக்கணக்கில் கடலில் கிடக்க, டயனே தன் பால்ய பலான ஆண் நண்பர்களுடன் கட்டிலி

22 டன் தங்கம் மற்றும் வெள்ளி. கடலுக்குள் புதையல் கப்பல். கண்டெடுக்கப்பட்டது எப்படி?
மர்மங்கள் / 05 ஜனவரி 2025
22 டன் தங்கம் மற்றும் வெள்ளி. கடலுக்குள் புதையல் கப்பல். கண்டெடுக்கப்பட்டது எப்படி?

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் மற்றும் மடெய்ரா தீவுகளுக்கு இடையிலான போர்ச்சுக்கல் கடற்

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
இங்கிலாந்தில் சூரியனை மறைக்க போகிறார்கள் விரைவில்
உலகம் / 11 மே 2025
இங்கிலாந்தில் சூரியனை மறைக்க போகிறார்கள் விரைவில்

பூமி குளிர்ச்சியாக காலநிலை மாற்றத்த தடுக்க “சூரிய ஒளி தடை” முயற்சி வெடிக்கப்போகுது. ஆனா உலகம் முழுக்

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி