அமெரிக்காவின் வெர்மொன்ட் மாநிலத்தின் அழகிய பச்சை மலைகள், அடர்ந்த காடுகள், மற்றும் அமைதியான குடியிருப்புகள் உலகின் பலரையும் கவர்ந்துவிட்டன. ஆனால் இந்த அமைதியின் நடுவில், மர்மமும் திகிலும் கலந்த ஒரு இடம் உள்ளது அது தான் “Bennington Triangle”. இது வெறும் ஒரு இடம் அல்ல, இங்கு நடந்த மர்மங்களால் உலகம் முழுவதும் பேசப்படும் புதிர்களின் மையமாக மாறியுள்ளது. 1940 மற்றும் 1950-களில், இந்த பகுதியில் பலர் காணாமல் போய் உள்ளனர். பலர் மனதில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது. இப்பகுதி என்ன சொல்கிறது? அதன் மர்மம் என்ன? எதனால் இந்த மர்மம் தீர்க்க முடியவில்லை? இந்தக் கதையை நீங்கள் படிக்க ஆரம்பித்ததும் இதிலிருந்து விலகமாட்டீர்கள் !
மர்மமான பகுதி
Bennington Triangle என்பது வெர்மொன்ட் மாநிலத்தின் Glastenbury Mountain-ஐ சுற்றியுள்ள இடமாகும். இது Glastenbury, Woodford, Shaftsbury மற்றும் Bennington நகரங்களை இணைக்கும் பகுதி. இப்பகுதி, பழங்காலத்தில் பல பழங்குடிகளின் வசிப்பிடமாக இருந்தது. ஆனால், அவர்கள் கூட பிற்காலத்தில் இந்த இடத்தில் வசிப்பதை தவிர்த்தனர். சிலர் இது "ஆவிகள் உலவும் இடம்" எனவும் கூறுவர்.
காணாமல் போனவர்களின் நிலை
1945 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, 74 வயதுடைய அனுபவமிக்க வேட்டையாடுபவரான “Middie Rivers” Glastenbury மலைப்பகுதியில் வேட்டையாடச் சென்றபோது மாயமானார். அவரைக் கண்டுபிடிக்க நான்கு வாரங்களாக தேடுதல் நடந்தாலும், ஒரு துப்பாக்கி தோட்டாவை தவிர அவரின் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
அடுத்ததாக, 1946 டிசம்பர் 1 அன்று, 18 வயது கல்லூரி மாணவி “Paula Welden” Long Trail என்னும் (Trekking Road) பாதையில் நடந்து சென்றபோது மாயமானாள். ஆனால் அவளின் எந்த தடயமும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை .
68 வயதுடைய “James Tedford” Bennington நகருக்கு பேருந்தில் பயணித்தார். 1949 டிசம்பர் 1, அவர் பேருந்தில் இருந்தாலும், Bennington சென்றபோது அவர் மர்மமான முறையில் காணாமல் போனார். அவரின் Luggage அனைத்தும் பேருந்தில் இருந்தன, ஆனால் அவரை மட்டும் காணவில்லை. அந்த நிகழ்வு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
1950 அக்டோபர் 12 அன்று, 8 வயதுடைய “Paul Jepson” Glastenbury மலை அருகே தாயுடன் இருந்தபோது சில நிமிடங்களில் மாயமானான். அதே வருடம் அக்டோபர் 28 அன்று, 53 வயதுடைய “Frieda Langer” என்ற பெண் தனது உறவினருடன் Glastenbury மலைப்பகுதியில் நடைப்பயணம் செய்தபோது தவறி விழுந்தார். ஆறுமாதங்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்நிகழ்வுகள் அனைத்தும் Bennington Triangle-ன் தீர்க்க முடியாத முடிச்சுகளாக உள்ளன.
சதி கோட்பாடுகள்
இந்த பகுதி மிகவும் மர்மமாக உள்ளதால் , பல சதி கோட்பாடுகள் உருவாகின அவற்றில் சில
1) காட்டுக்குள் தொலைந்து போவது
இந்த Glastenburg மலை மிகவும் அடர்த்தியாக இருப்பதால், ஒருவர் எளிதில் தொலைந்து போவர்கள். காட்டு விலங்குகளின் நடமாட்டமும் அதிகம்.
2) சீரியல் கில்லர்
1940 பிற்பகுதியில் இந்த மலையில் “Serial killer” யாராவது இருந்து இருக்கலாம். அவனே கொலைகளை செய்து ஆதாரத்தை அழித்து இருக்கலாம் என்ற கருத்து நிலவினாலும் அதற்கு ஆதாரம் இல்லை.
3) சபிக்கபட்ட நிலம்
மேலும் இந்த மலை பூர்வகுடி மக்களால் சபிக்கப்பட்ட நிலம் என்று அழைக்கபடுகிறது. சில பூர்வகுடிகள் இங்கு சாத்தான் உள்ளதாக நினைத்து இங்கு வசிப்பதை தவிர்த்தனர்.
4) Time Portal
Sci-fi படங்களில் வருவது போல காணாமல் போனவர்கள் வேறொரு காலத்திற்கு சென்று இருக்கலாம் அல்லது “இரண்டாம் உலகம்” படத்தில் வருவது போன்று இன்னொரு Dimension க்கு சென்று இருக்கலாம்.
Bennington Triangle, இயற்கையின் அழகிற்குள் மறைந்து இருக்கும் ஒரு மர்மமான இடம். இது வெறும் கற்பனை அல்ல, பலர் உண்மையில் காணாமல் போன சம்பவங்கள் பற்றியதுதான். இந்தப் புதிர்களின் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன? யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.