1. டார்டிகிரேட் (tardigrade):
ஒரு மிகப்பெரிய சிறுகோல் பூமியை தாக்கினால் என்ன ஆகும்? பில்லியன் டன் பாறைகள் வெடித்து சிதறி அதன் துகள்கள் காற்றில் பரவி மாசுபட்டு, மொத்த சூரிய ஒளியும் மறைக்கப்பட்டு, பூமியே பாலைவனம் போல் காட்சி அளிக்கும் அல்லவா. உயிரினங்களின் பலி எண்ணிக்கை எண்ணில் அடங்காது இருக்கும். அப்பேற்பட்ட சூழ்நிலையிலும் கூட உயிர் பிழைக்க முடிகின்ற ஒரே உயிரினம் தான் நீர்க்கரடி என்றழைக்கப்படும் டார்டிகிரேட்.
.webp)
நீர்வாழ் உயிரினங்களிலேயே விசித்திரமான ஒரு உயிரினம் இந்த நீர்க்கரடி டார்டிகிரேட். கடலின் அடியிலும், பனி உறைந்து கிடக்கும் இடங்களிலும் வாழ்கின்ற ஒரு மிக மிகச் சிறிய உயிரினம். இவ்வினத்தை ஜெர்மனி விலங்கியல் நிபுணர் ஜோஹன் ஆகஸ்ட் எப்பிராயீம் சீயோசி என்பவரால் 1773 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
டார்டிகிரேட்கள் மொத்தம் 8 கால்களை உடையவை. ஒவ்வொரு டார்டிகிரேட் கால்களிலும் நான்கு முதல் எட்டு நகங்கள் வரை இருக்கும். இந்தக் கால்களைக் கொண்டு டார்டிகிரேட் நடந்து வரும் காட்சி காட்டுப் பகுதியில் வாழும் கரடி நடப்பது போலவே இருக்கும். அதனால்தான் நீர் கரடி என்ற பெயரை பெற்றது.
டார்டிகிரேட்கள் (tardigrade) மைக்ரோ மீட்டர் அளவில் காணப்படுகின்றன. இவை வெறும் 0.04 அங்குலங்கள் (1 மில்லிமீட்டர்) நீளம் (அல்லது அதற்கும் குறைவானது) கொண்டவை. இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மிகச் சிறிய தோற்றத்துடன் இருப்பதால் நுண்ணோக்கி (microscope) உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும்.
டைனோசர்களுக்கு சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே டார்டிகிரேட்ஸ் இந்த பூமியில் 600 மில்லியன் ஆண்டுகளாக உயிர் வாழ்கின்றன.
உணவும், நீரும் அனைத்து உயிரினங்களுக்கும் அவசியம். மில்லி மீட்டர் நீளத்தில் இருந்தாலும் டார்டிகிரேட்களின் கடினத்தன்மையை கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த உயிரினங்கள் எவ்வளவு காலம் வாழ முடியும் தெரியுமா?
டார்டிகிரேட்ஸ் எக்ஸ்ட்ரிமோஃபில்ஸ் (extremophiles) என்று அழைக்கப்படும் விலங்குகளின் உயரடுக்கு வகையைச் சேர்ந்தவை. இவைகளால் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ஆற்றல் கொண்டவை.
டார்டிகிரேட்கள் முழுமையான பூஜ்ஜியம் அல்லது கொதிநிலைக்கு மேல் குளிர்ந்த வெப்பநிலையிலும், கடலின் ஆழமான அகழிகளை விட ஆறு மடங்கு அழுத்தத்திலும், விண்வெளியின் வெற்றிடத்திலும் கூட வாழ முடியும்.
இவை பூமியில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. பெரும்பாலானவை ஆற்று கற்களை அலங்கரிக்கும் பாசி போன்ற ஈரமான வாழ்விடங்களில் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிகின்றன.
காற்றோட்டமே இல்லாத வெற்றிடத்திலும் டார்டிகிரேட் உயிர் வாழும் என்பதால் இவைகளுக்கு சாவே கிடையாதா என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். உடம்பில் உள்ள நீர்ச்சத்து ஒரு சதவீதத்திற்குக் கீழ் குறையும்போது மட்டுமே இவை மரணமடைகின்றன. மொத்தத்தில் டார்டிகிரேட் ஒரு முற்றிலும் மாறுபட்ட, விசித்திரமான விலங்கு தான் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
2. கடல் ஆமைகள் (Turtle):
முதலில் கடல் ஆமைகளின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? மனிதர்களைப் போலவே 70 முதல் 80 வருடங்களுக்கு மேல் கடல் ஆமைகள் வாழும் திறன் உடையது. மேலும், ஒரே நேரத்தில் 100 முதல் 125 முட்டைகளை இடும் வல்லமை பெற்றது.
.webp)
டைனோசர்கள் இருந்த காலத்தில் இருந்தே சுமார் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதல் இந்த கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. அப்படி என்றால் எவ்வளவு பழமையான உயிரினமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இருந்தும் இவைகளிடம் காலப்போக்கில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
மனிதர்களின் கைரேகையை போலவே ஆமையின் முகத்தில் உள்ள வடிவம் தனித்துவமானது. அவை ஒவ்வொரு ஆமைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை குறிக்கிறது. பொதுவாக ஆமைகள் கடலோர மண்ணில் புதைந்து முட்டைகளிடும். அக்கடல் மண்ணின் வெப்பநிலைக்கு ஏற்பவே அதன் பாலினம் முடிவு செய்யப்படுகிறது.
விஞ்ஞானிகளும் கடல் ஆமைகளின் வாழ்க்கையில் நிகழும் மர்மங்களை ஆராய்ச்சி மூலம் வெளிக்கொண்டு வர பல வருடங்களாக முயன்று வருகின்றனர்.
கடல் ஆமைகளின் உறுப்புகள் காலப்போக்கில் உடைவதில்லை என்று ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. மனிதர்கள் மற்றும் நோய்களை தவிர்க்க முடிந்தால் ஆமைகள் பல நூறு ஆண்டுகள் கூட வாழ முடியும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.
ஆனால் தற்போது கடல் ஆமைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. கடல் நீர் மாசுபடுதல் காரணமாக ஆமைகள் கடலோரங்களில் செத்து ஒதுங்குகின்றன. மனிதர்களும் சில நேரங்களில் ஆமைகளின் முட்டையை சேகரித்து அதில் ஆம்லெட் போட்டு ருசி பார்க்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் நீடித்தால் ஆமைகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகிவிடும்.