அமெரிக்கா. சிகாகோ நகரில் தங்கி படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் கடந்த 2-ம் திததி (மே மாதம்) முதல் காணாமல் போயுள்ளார். இதுவரை அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் அவரது பெற்றோர் கவலையில் தவித்து வரும் நிலையில், அந்த மாணவரை எப்படியும் கண்டு பிடித்து விடுவோம் என சிகாகோ போலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாதை சேர்ந்தவர் 25 வயதான ரூபேஷ் சந்திர சிண்டாகிண்டி. அமெரிகாவின் சிகாகோ நகரில் உள்ள விஸ்கான்சின் என்ற இடத்தில் இயங்கிவரும் கான்கார்டியோ பலகலைக் கழகத்தில் படித்து வந்தார். கடந்த 2-ம் திகதி (மே மாதம்) ஹைதராபாத்தில் உள்ள அவரது தந்தையுடன் செல்போனில் பேசியுள்ளார் ரூபேஷ் சந்திரா. அதன் பின் அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை.
அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் உள்ளது, கல்லூரி நிர்வாகம், நண்பர்கள், மற்றும் உறவினர்கள் என யாருடனும் 2-ம் திகதிக்கு பின் ரூபேஷ் சந்திரா தொடர்பு கொள்ளவில்லை மற்றும் நேரில் சந்திக்கவும் இல்லை என தெரிய வந்துள்ளது.
மகனை காணவில்லை என்ற கவலையில் ரூபேஷ் சந்திராவின் பெற்றோர் இந்திய மத்திய அரசிடம் தங்கள் மகனை கண்டுபிடித்து தருவதில் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூபேஷ் சந்திரா மாயமான புகார் குறித்து விசாரித்து வரும் சிகாகோ நகர் போலிசார், ரூபேஷ் சந்திராவை குறித்து ஏதேனும் விவரம் தெரிந்தால் சிகாகோ போலிசிற்கு தகவல் தெரிவிக்கும்படி பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிகாகோ நகர இந்திய தூதரக அதிகாரிகள், ரூபேஷ் சந்திரா காணாமல் போயுள்ள சம்பவம் கவலை அளிப்பதாகவும், அவர் விரைவில் நலமுடன் கண்டுபிடிக்கப்படுவார் எனவும், நம்பிக்கை தெரிவுத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 7-ம் திகதி முதல், ஓஹியோ மாஹாணத்தில் உள்ள க்ளவ்லாண்ட் யுனிவர்சிட்டியில் ஐடி மாஸ்டர் டிகிரி படித்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த முஹம்மத் அப்துல் அராபத் என்ற மாணவர் மாயமாக காணாமல் போனார். முஹம்மத் அப்துல் அராபத்தை போலிஸ் தேடி வந்த நிலையில், அவர் காணாமல் போய் பத்தாவது நாள் அராபத்தின் தந்தை முஹம்மது சலீமிற்கு போன் செய்த மர்ம நபர்கள், தாங்கள் அராபத்தை கடத்தி வைத்திருப்பதாகவும், 1200 அமெரிக்க டாலர்கள் கொடுத்தால் அராபத்தை விட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர். ஆனால், அந்த மிரட்டல் போன்கால் போலியானது என கண்டுபிடித்த போலிஸ், தொடர்ந்து அராபத்தை தேடி வந்தனர்.
ஆனால், போலிசால் அராபத்தை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில், ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கொலை செய்யப்பட்ட அராபத்தின் உடல் ஓஹியோ நகருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அராபத்திற்கு என்ன நடந்தது என ஒஹியோ நகர போலிசார் இன்னும் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த மாதம் (ஏப்ரல்), ஒஹியோ மாஹாணம் க்ளவ்லேண்ட் பகுதியில், உமா சத்ய சாய் என்ற இந்திய மாணவி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது மரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் (2024) பிப்ரவரி மாதம், சிகாகோ நகரில் சையட மஸஹீர் அலி என்ற இந்திய மணவர் சில மர்ம நபர்களால் கொடூர தாக்குதலுக்கு உள்ளானார். அந்த மர்ம நபர்களை போலிஸார் இன்னும் தேடி வருகின்றன்.
அமெரிக்காவில் தொடர்ந்து இந்திய மாண்வர்களுக்கு ஏற்பட்டு வரும் ஏற்கத்தகாத சம்பவங்கள் குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் கவலை தெரிவித்ததுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.