நீங்கள் உங்கள் கார் டேங்கில் எரிபொருள் நிரப்பும் போது அல்லது பரிமாற்ற விகிதங்களை பார்க்கும் போது, உலகில் நடந்துகொண்டு உள்ள சில முக்கிய ஒப்பந்தங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நீங்கள் யாரும் அறிவதில்லை. பெட்ரோ-டாலர் ஒப்பந்தம் என்ற இந்த ஒரு ஒப்பந்தம், உலக நிதி அமைப்பின் அடிப்படை அலகாக பங்கு வகிக்கிறது. இது, எரிபொருள் விற்பனைக்கு அமெரிக்க டாலர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஒப்பந்தமாகும். ஆனால், தற்போது, பிரிக்ஸ் பே என்ற புதிய கட்டமைப்பை BRICS நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த புதிய கட்டமைப்பு, உலக நிதி நிலையை மாற்றும் திறன் கொண்டதாக இருக்கலாம் .
பெட்ரோ-டாலர் ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்
1970களில் உருவான பெட்ரோ-டாலர் ஒப்பந்தம், அரபு நாடுகளின் எரிபொருள் விற்பனையை அமெரிக்க டாலருடன் மட்டுமே கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக, உலகின் பல நாடுகள் எரிபொருள் வாங்கும் போது, டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த ஒப்பந்தம், உலகளாவிய நிதி அமைப்பில் அமெரிக்க டாலருக்கு முக்கிய இடத்தை வழங்கியது. அதாவது, எங்கு எரிபொருள் வர்த்தகம் நடந்தாலும், அதில் டாலர் தான் தேவைப்படும் என்பதால், டாலர் உலகின் பல நாடுகளில் இன்றியமையா இடத்தில் உள்ளது. ஆகையால் அமெரிக்கா உலகளவில் பொருளாதார சக்தியாக நிலவுகிறது. எனவே, இந்த பெட்ரோடாலர் ஒப்பந்தம், உலகின் பொருளாதார நிலையை பிரதானமாகக் கட்டுப்படுத்தும் முக்கிய கருவியாக உள்ளது . ஆனால் கடந்த ஜூன் மாதம் இந்த 50 ஆண்டு கால ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது.
பிரிக்ஸ் பேவின் உருவாக்கம்
இந்த சூழலில், BRICS நாடுகள் - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் தென்னாப்பிரிக்கா - இணைந்து பிரிக்ஸ் பே என்ற புதிய கட்டமைப்பை உருவாக்கின. இதன் நோக்கம், அமெரிக்க டாலரை தவிர்த்து, உள்ளூர் நாணயங்களில் பரிமாற்றங்களைச் செய்வது. இது, குறிப்பாக, கிரிப்டோ கரன்சிகளைப் பயன்படுத்தி வர்த்தகத்தை எளிதாக்கவும், புதிய நிதி முறைகளை உருவாக்கவும் உதவுகிறது. இந்த செயல்பாடு SWIFT முறையை சார்ந்து இருக்காது . அதனால் மேற்கத்திய நாடுகளால் இதனை கட்டுபடுத்த இயலாது.
எதிர்கால சிக்கல்கள்
பிரிக்ஸ் பே என்பது ஒரு புதிய பணமுறை மட்டுமல்ல. இது உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால், நாடுகள் பல BRICSPAY மூலம் பரிமாற்றங்களைச் செய்யலாம். பிரிக்ஸ் பேவை பயன்படுத்துவதன் மூலம், பல நாடுகள் அமெரிக்க டாலரின் மீது குறைந்த தேவையை உருவாக்க முடியும். இதன் மூலம், எரிபொருள் விலைகள் மற்றும் வர்த்தகத்தில் டாலரின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. இப்புதிய பணமுறை உலக பொருளாதாரத்திற்கு எப்படி பாதிப்பு அளிக்க முடியும் என்பது ஒரு முக்கிய கேள்வி. டாலரின் மதிப்பு குறைந்தால், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் வரும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால், பல நாடுகள் வருங்கால முன்னெச்சரிக்கையாக தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கியுள்ளன. எனவே, பிரிக்ஸ் பே எதிர்காலத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கும் முக்கிய கருவியாக இருக்கிறது.