ஒரு திருமணத்தில் மிக முக்கியமானது நேர்மை மட்டுமே. நேர்மை இல்லை எனில் அந்த உறவு விரைவாக நொறுங்கி விடும். இருப்பினும் ஒரு சிலர் அந்த திருமண பந்தத்தை புறக்கணித்து வாழ்க்கையின் பிற அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.
சீனாவில் சியாஜுன் என்ற நபர், ஒரு மனைவி மற்றும் நான்கு காதலியுடன் ஒரே ஃப்ளாட்டில் வசித்து வந்துள்ளார். சியாஜுனின் தந்தை கட்டுமானத் துறையில் பணிபுரிந்தார், அவரது தாயார் குளியலறை உதவியாளராக இருந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த சியாஜுன் சிறிய வயதிலிருந்தே கடும் வறுமையில் வளர்ந்து வந்தார்.
பணக்கார இளைஞர்களை பார்க்கும் பொழுது, தனக்கு மட்டும் ஏன் இந்த ஏழ்மை நிலை என ஏக்கத்துடன் வளர்ந்த சியாஜுன், தனது வாழ்க்கையை மாற்றியமைத்து வறுமையிலிருந்து தப்பிக்க விரும்பினார். தனக்கு அறிமுகமானவர்களிடம் தன்னை ஒரு பணக்கார பிஸினஸ் மேன் குடும்பத்தின் வாரிசு என பொய் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு, ஒரு போலியான வாழ்க்கையை வாழத்தொடங்கினார்.
பல பெண்களுடன் பேசுவது, பழகுவது, தன்னை பணக்கார பின்புலமாக சித்தரித்துக் கொள்வது போன்று பல்வேறு லீலைகளை செய்து வந்துள்ளார். ஒரு பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அந்தப் பெண் கர்ப்பமான பிறகு சியாஜுனின் உண்மை பொருளாதார நிலை வெளிச்சத்திற்கு வந்தது. இதை அறிந்த அவரது மனைவி விவாகரத்து செய்யாமல் சியாஜுனை பொடனியில் ரெண்டு போட்டு வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.
நடுத்தெருவிற்கு வந்தும் திருந்தாத சியாஜுன் தனது பணக்கார போலி லீலைகளை தொடர்ந்து வந்தார். ஆன்லைனில் ஒரு பெண்ணுடன் பழகி மீண்டும் தனது பணக்கார கதையை ஆரம்பித்தார். தனது வீட்டை சீரமைக்க வேண்டும் என பொய் சொல்லி ஆன்லைன் சாட்டிங்கில் தன்னிடம் பேசிய பல பெண்களிடம் லட்சங்களில் பணம் பறித்துள்ளார். இப்பணத்தை வைத்து மற்ற பெண்களுக்கு ஆடம்பர பரிசுகளை அளிப்பது போன்று தன்னை ஒரு தொழிலதிபராக சித்தரித்துக் கொண்டார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, அந்த நபர் அதே தில்லாலங்கடி தந்திரங்களை பயன்படுத்தி மற்றொரு பெண்ணைக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது. பெண்களிடம் 16.5 லட்சம் கடன் வாங்கியதாக புகார் எழுந்தது. மேலும், அவர் தனது காதலியை தன்னை வீட்டை விட்டு துரத்திய முன்னாள் கர்ப்பிணி மனைவி வாழ்ந்து வந்த ஃப்ளாடிலேயே ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்தார்.
கல்லூரியில் படித்து வந்த இரண்டு இளம் பெண்கள் மற்றும் அதே ஃப்ளாட்டில் வசித்து வந்த நர்ஸ் உட்பட மொத்தம் நான்கு பெண்களை தன் ஜெகஜால் காதல் வலையில் சிக்க வைத்த சிராஜுன், டிசைன் டிசைன்கள்ஆக பொய் பித்தலாட்டங்களை செய்து அவர்களிடம் இருந்து முறையே 1.7 லட்சம், 1.18 லட்சம் மற்றும் 94,000 ரூபாய்களை ஏமாற்றி வாங்கியுள்ளார்.
அப்பெண்களில் ஒருவர் தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட போது, சியாஜுன் தன்னிடம் இருந்த கள்ள நோட்டுகளை கொடுத்து அந்த பெண்ணின் பிரச்சினையை அப்போதைக்கு முடித்து விட்டு நிம்மதியடைந்தார். சில நாட்களில் சியாஜுன் கொத்த்த அத்தனையும் கள்ள நோட்டுகள் என்பதை கண்டறிந்த அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அதன் பிறகே சியாஜுனின் அனைத்து லீலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வந்தது.
காவல்துறை நடத்திய விசாரணையில், சியாஜுன் ஒரே குடியிருப்பில் தனது மனைவி மற்றும் நான்கு காதலிகளுடன் கடந்த நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரது மனைவியும், முதல் காதலியும் ஒரே கட்டிடத்தில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை வாக்கிங் கூட ஒன்றாக அழைத்து சென்று நெருங்கிய தோழிகளாக பழகியுள்ளனர். ஆனால் இருவருக்கும் ஒரே கணவர் இருப்பதை அவர்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்பொழுது, சியாஜுனுக்கு நீதிமன்றம் 9.5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து, 14 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழந்த பணத்தை திரும்பக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.