அசிந்தியா சிவலிங்கம். இவர் கோவையில் பிறந்து, அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாஹாணத்தில் உள்ள பிரிஸ்டன் பல்கலைகழகத்தில் 'சர்வதேச வளர்ச்சியில் பொது விவகாரங்கள்' பிரிவில் முதுகலை பட்டம் படித்து வருகிறார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை சர்வதே கவனம் பெற்றுள்ள நிலையில், பிரிஸ்டன் பல்கலை கழக வளாகத்திற்குள், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிராகவும், போராட்டம் நடத்திய மாணவர்களில் அசிந்தியா சிவலிங்கம் மற்றும் ஹசன் சயீத் என்ற இரண்டு மாணவர்களை நியூ ஜெர்ஸி போலிஸ் கைது செய்துள்ளனர்.
பாலஸ்தீனத்தை ஆதரித்து இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக, பல்கலை கழக வளாகத்திற்குள் மாணவர்களை ஒன்று திரட்டி, கூடாரங்களை அமைத்திருந்த அசிந்தியா சிவலிங்கம் மற்றும் ஹசன் சயீத் இருவரையும் கைது செய்ததுடன், அந்த கூடாரங்களை காலி செய்து அங்குள்ள பொருட்களை அகற்றுமாறு போலிஸார் உத்தரவிட்டனர். மாணவர்களின் கைதிற்கு மற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அசிந்தியா சிவலிங்கம் மற்றும் ஹசன் சயீத் இருவரையும் பல்கலை கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதித்ததுடன், இருவரின் மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிஸ்டன் பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அசிந்தியா சிவலிங்கம் கோவையில் பிறந்தாலும் சிறுவயது முதல் அமெரிக்காவின்ன் ஓஹியோ மாஆணம் கொலம்பஸ் நகரில் வசித்து வருகிறார். ஒஹியோ மாஹாண பல்கலை கழகத்தில் 'உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில்' இளங்கலை ப்ட்டம் பெற்றவர் அசிந்தியா சிவலிங்கம்.