கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியுள்ள நடிகர் தனுஷ் 'பா.பாண்டி' என்கின்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை அடுத்து அவர் இயக்கிய 'ராயன்' படம் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சுமார் 158 கோடி ரூபாயை வசூல் செய்தது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ராயன் படம் கோடிகளில் வசூல் செய்தாலும் பலரும் அப்படத்தின் மோசமான கதை களத்தை வைத்து சமூக வலைதளங்களில் கலாய்த்து வந்தனர்.
இருந்தும் தனது இயக்குனர் பணியில் இருந்து தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகர் தனுஷ், தான் அடுத்ததாக இயக்கும் தெலுங்கு மொழி திரைப்படமான "குபேரா" பட பணிகளை தொடங்கியுள்ளார். இதற்கிடையே சைக்கிள் கேப்பில் முழுக்க முழுக்க 2k கிட்ஸ்களை வைத்து ஒரு புது படம் ஒன்றை தயாரித்து வருகிறார். முற்றிலும் இளைஞர் பட்டாளங்களை வைத்து எடுத்துள்ள படத்திற்கு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படம் ஒரு காதல் கதையாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
இதில் 'லியோ' படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த மேத்யூ தாமஸ் உடன் நடிகர் வெங்கடேஷ் மேனன் இணைந்துள்ளார். மேலும் அனிக்கா சுரேந்திரன், ரம்யா ரங்கநாதன், பிரியா பிரகாஷ் வாரியார் ஹீரோயின்களாகவும் நடித்திருப்பதாக தெரியவந்துள்ளது. தனுஷ் இயக்கும் இப்படத்தில் தனது அக்கா விமலா கீதாவின் மகனை ஹீரோவாக்கியுள்ளார். விமலா கீதாவின் மூத்த மகனான பவிஷ் இப்படத்தில் புதுமுக நடிகராக நடித்திருக்கும் நிலையில் அப்படத்தின் பாடல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது தனுஷ் பாடிய 'ஏடி ஏடி..'என்ற லிரிக்கல் வீடியோவை யூடியூப் தளத்தில் வொண்டர்பார் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
அப்பாடலுக்கு தனுஷ் தனது அக்கா பையனான பவிஷிர்க்கு ரொமான்ஸ் சொல்லித் தரும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதில் எப்படி ரொமான்டிக்காக பார்க்க வேண்டும் என்று அனிகாவுடன் சேர்ந்து கற்றுக் கொடுத்துள்ளார் தனுஷ். தனுஷின் மகன் தான் இந்த படத்தின் ஹீரோவா என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு தனுஷின் அக்கா மகன் பவிஷும் அப்படியே ஸ்லிம்மாக மாமா தனுஷ் போலவே உள்ளார்.
புதுமுக நடிகர்களை வைத்து உருவாக்கப்படும் படம் என்பதால் தனுஷ் ரிஸ்க் எடுக்கிறாரா என்று நெடிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஃபர்ஸ்ட் சிங்கிளான கோல்டன் ஸ்பேரோ ஏற்கனவே வெளியாகி இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி வந்த நிலையில் இந்த 'ஏடிஏடி' பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.