டைனோசர் என்றாலே ஜுராசிக் பார்க் படத்தில் வரும் ராட்சத மிருகம் தான் ஞாபகத்திற்கு வரும். திரைப்படங்களில் இது போன்ற பிரம்மாண்ட மிருகங்களை பற்றி பார்க்காமல் இருந்திருந்தால் டைனோசர் போன்ற விலங்குகளை நம் அனைவரும் வெறும் கற்பனையில்தான் பார்த்திருக்க முடியும்.
தற்போது பிரிட்டனில் டைனோசர்களால் உருவான மிகப்பெரிய கால் தட பாதை கண்டறியப்பட்டுள்ளது. இது 166 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படி 166 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உண்டான கால் தடம் என்று நினைக்கும் போது அக்கால வருடத்தை கூட நம்மால் கணிக்க முடியாது.
இந்த டைனோசரின் கால் தடங்கள் ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள 'தேவார்ஸ்' குவாரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடித்த டைனோசர் கால் தடங்களில் இதுவே மிகப் பழமையானது ஆகும்.
இந்த கால் தடங்களை முதலில் கண்டறிந்தது யார் தெரியுமா? 2023 ஆம் ஆண்டு குவாரி தொழிலாளியான கேரி ஜான்சன் சாலை பணிகளுக்காக சுண்ணாம்பு கற்களை பிரித்தெடுக்கும் போது இந்த காலடித்தடங்களை கண்டுபிடித்தார்.
கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களின் கால் தடங்கல் சாதாரண டைனோசர்களை விட இரண்டு மடங்கு பெரியதாக இருந்ததாக பர்மிங்காம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த கால் தடங்கல் நீண்ட கழுத்து கொண்ட டைனோசர் வகையான செட்டியோசரஸ் மற்றும் சிறிய இறைச்சி உண்ணும் டைனோசர் வகைகளை சேர்ந்தது. கால்தடங்களின் பாதைகள் 150 மீ நீளம் (500 அடி) கொண்டவை.
வான்வழி ட்ரோன் புகைப்படங்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களை எடுத்துள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆக்ஸ்போர்ட் மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 100 தன்னார்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழுவாக சேர்ந்து 'தேவார்ஸ்' குவாரியில் ஒரு வாரம் அகழ்வாராய்ச்சி செய்து டைனோசர் கால் தடங்களை கண்டுபிடித்து அதனை புகைப்படமாக ஆவணப்படுத்தினர்.
கண்டுபிடிக்கப்பட்ட கால் தடங்கல் மெகலோசரஸ் மற்றும் தாவர வகை டைனோசர்களின் கால் தடங்கலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வகை டைனோசர்கள் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட்ஷையர் பகுதியின் வழியாக சென்றிருக்கலாம் என்று இந்த ஆதாரங்கள் கூறுகின்றன.
குவாரி பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு ஆராய்ச்சியாளர்கள் டைனோசர்களின் கால் தடத்தின் புகைப்படங்களை கைப்பற்றும் பணியில் ஈடுபட்டு, அவற்றை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த குவாரியின் ஒரு பகுதி மட்டுமே தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளதால் இன்னும் நீளமான கால்தடங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிர் புதைப்படிவவியல் நிபுணர் பேராசிரியர் எட்கர் கூறியது," இந்த கால்தடங்களின் அளவின் அடிப்படையில், நான் பார்த்த மிகவும் சுவாரஸ்யமான தடயங்களில் இதுவும் ஒன்று" என்கிறார்.
அகழ்வாராய்ச்சிகள் மேலும் தொடங்கினால் கூடுதலான தடங்கள் மற்றும் டைனோசர் வாழ்க்கை பற்றிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தும் விஷயங்களை கண்டறியலாம் என்று டாக்டர் எட்கர் தெரிவித்துள்ளார்.