Monday 23rd of December 2024 - 03:31:19 PM
'பிட்டு' பட நடிகையுடன் ஜல்சா. சிக்கலில் டொனால்ட் டிரம்ப்.
'பிட்டு' பட நடிகையுடன் ஜல்சா. சிக்கலில் டொனால்ட் டிரம்ப்.
Rajamani / 08 மே 2024

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதிபர் போட்டியில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ள டொனால்ட் டிரம்ப் மீது நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்மி டேனியலின் குற்றச்சாட்டுகள் டொனால்ட் டிரம்பின் அதிபர் கனவை சிதைத்து விடுமோ என்ற சந்தேகம் அமெரிக்க மக்களிடம் மட்டுமின்றி அமெரிக்க அரசியலை உற்று கவனிக்கும் மற்ற நாட்டு மக்களிடமும் எழுந்துள்ளது.

2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போதே டொனால்ட் டிரம்ப் பல பெண்களுடன் உறவு வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் லெப்ட் ஹேண்டில் டீல் செய்து, அபார வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக வெள்ளை மாளிகையில் வலது காலை வைத்தார் டொனால்ட் டிரம்ப். ஆனால், அது பழைய கதை. அப்பொழுது வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே இருந்தன. எந்த பெண்ணும் நேரடியாக டொனால்ட் டிரம்ப் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டார் என பொதுவெளியில் பேசவில்லை.

ஆனால், இப்பொழுது டொனால்ட் டிரம் தன்னுடன் உடலுறவு கொண்டார் என பகிரங்கமாக, அதுவும் நீதி மன்றத்தில் வாக்குமூலமாக கொடுத்துள்ளார் ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற நடிகை.

நடிகை என்றவுடன் ஹாலிவுட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார் லெவல் நடிகையாக நினைத்து விட வேண்டாம். ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு 'பப்பி ஷேம்' பட நடிகை. நீலப் பட நடிகையையும் விட்டு வைக்க மாட்டியாப்பா நீ? என அமெரிக்கா தாண்டி அண்டார்டிகா வரை மக்கள் டொனால்ட் டிரம்பை நினைத்து கைகொட்டி சிரிக்கிறார்கள்.

டொனால்ட் டிரம்புடனான தனது உறவு குறித்து ஸ்டார்மி டேனியல் கடந்த பல வருடங்களாகவே பல பேட்டிகள் கொடுத்திருந்தார். 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது கூட ஸ்டார்மி டேனியல்ஸின் பேட்டிகள் லேசான பரபரப்பை உண்டாக்கினாலும், ஸ்டார்மி டேனியலின் தொழில் அவர் மேல் மக்களை நம்பிக்கை கொள்ள விடாமல் தடுத்து விட்டது. எனவே டொனால்ட் டிரம்பின் வெற்றியை ஸ்டார்மி டேனியல்ஸின் குற்றச்சாட்டுகளால் தடுக்க முடியவில்லை.

ஆனால் இப்பொழுது, பஞ்சாயத்து நியூயார்க்கின் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருவதால், ஸ்டார்மி டேனியல்ஸின் வாக்குமூலங்கள் அமெரிக்க மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்த வழக்கு விசாரணையின் போது டொனால்ட் டிரம்பும் நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். 

அப்போது நீதி மன்றத்தில் ஆஜரான ஸாடார்மி டேனியல்ஸ், டொனால்ட் டிரம்புடனான உறவு குறித்து பொதுவெளியில் பேசாமல் இருக்க தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். மேலும், ஹோட்டல் ஒன்றில் டொனால்ட் டிரம்பை தனிமையில் சந்தித்து குறித்தும் வெளிப்படையாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

டிவி தொடர் ஒன்றில் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்து, தன்னுடன் டொனால்ட் டிரம்ப் உடலுறவில் ஈடுபட்டதாகவும் ஸ்டார்மி டேனியல்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டார்மி டேனியல்ஸின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இப்படி பொய் சொல்லி நடிகைகளை ஏமாற்றும் டொனால்ட் டிரம்ப்பையா அதிபராக வைத்திருந்தீர்கள் என ஒட்டு மொத்த உலகமும் அமெரிக்காவை பார்த்து கைகொட்டி சிரித்து விடும். எனவே, டொனால்ட் டிரம்பால் அவமானப்பட அமெரிக்க மக்கள் தயாராக இருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம். 

ஆக, குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது சந்தேகமே.

டிரண்டிங்
tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி