Monday 23rd of December 2024 - 07:00:31 PM
மது போதை, கூகுள் மேப், 7 பேர் வாழ்க்கையில் விளையாடிய வட மாநில பெண். சென்னை அசோக் நகர் பரபரப்பு.
மது போதை, கூகுள் மேப், 7 பேர் வாழ்க்கையில் விளையாடிய வட மாநில பெண். சென்னை அசோக் நகர் பரபரப்பு.
Rajamani / 13 மே 2024

சென்னை. அகோக் நகர் 10வது தெருவில், நேற்று (மே 12-ம் திகதி) அதிகாலை 4 மணியளவில் பெண் ஒருவர் மது போதையில் காரை ஓட்டி வந்து தெருவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மேல் காரை ஏற்றியதால்  7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்ட்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் வைஷாலி. 41 வயதாகும் வைஷாலி சென்னையில் தங்கியிருந்து பணி புரிந்து வருகிறார். நேற்று (மே 12-ம் திகதி) அதிகாலை 4 மணிக்கு அசோக் நகரில் உள்ள தந்து உறவினர் ஒருவரின் வீட்டிற்கு செல்வதற்காக காரில் பயணம் செய்தார் வைஷாலி.

சென்னைக்கு புதிது என்பதால், வைஷாலி கூகுள் மேப்பில் தனது உறவினர் வீட்டு முகவரிக்கு வழி பார்த்தபடி காரை ஓட்டிச் சென்றுள்ளார் வைஷாலி. 

அசோக் நகர் 10வது தெரு வழியாக ரூட்டை காட்டிய கூகுள் மேப்பை நம்பி அந்த தெருவில் காரை செலுத்தியுள்ளார் வைஷாலி.  ஆனால், துயரம். அங்கே தெருவில் சில பொது மக்கள் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களை கவனிக்காத வைஷாலி காரை ஓட்டிச் செல்ல, கார் அங்கு தெருவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மேல் மோதி, அதில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடிந்தவர்களில் 4 பேர் பெண்கள்.

காரில் அடி பட்டவர்களின் அலறல் சத்தம் கேட்டதும், தனது காரால் விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்ட வைஷாலி காரை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். விபத்தை நேரில் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பலர் வைஷாலியின் காரை துரத்தி சென்றுள்ளனர். ஆனால், அவர்களிடமிருது தப்பி விடலாம் என்ற நம்பிக்கையில் வேகமாக காரை ஓட்டிச் சென்ற வைஷாலிக்கு அந்த தெரு ஒரு முட்டு சந்து என்பது தெரியாமல் இருந்ததுதான் சோகம்.

கூகுள் மேப்பை நம்பி காரை விரட்டி சென்ற வைஷாலி முட்டு சந்து முனையில் மாட்டி எந்த பக்கம்? எப்படி? தப்பிச் செல்வது என தெரியாமல் காரில் அமர்ந்தபடி விழிபுதுங்கி யோசித்துக் கொண்டிருக்க, பின்னால் விரட்டி வந்த பொது மக்கள் காரை சுற்றி வளைத்து வைஷாலியை பிடித்தனர்.

காருக்குள் இருந்த வைஷாலிக்கு தமிழ் சுத்தமாக தெரியவில்லை. மற்றும், அவர் மது போதையில் இருந்ததால், சென்னை போக்குவரத்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, போலிசார் ச்ம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, விபத்தை ஏற்படுத்திய வைஷாலியை கைது செய்தனர்.

அசோக் நகர் 10வது தெருவை சேர்ந்தவர் சரிதா (38 வயது). நேற்று முன்தினம் மாலை, சரிதாவின் வீட்டில் ஒரு விஷேஷ நிகழ்ச்சி நடந்துள்ளது. எனவே, வெளியூரிகளில் இருந்து சரிதாவின் உறவினர்கள் பலரும் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். விஷேஷ நிகழ்ச்சி முடிந்து, மறுநாள் சொந்த ஊர்களுக்கு திரும்பலம் என்ற முடிவில், அன்று இரவி சரிதாவின் வீட்டிற்கு வெளியில் இருந்த முற்றத்தில் படுத்து உறங்கியுள்ளனர் சில உறவினர்கள்.

அப்படி உறங்கிய சரிதாவின் உறவினர்கள் மேல் தான் வைஷாலி காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். விபத்தில் சரிதா மற்றும் அவரது உறவினர் பிள்ளை நாயகி ஆகியோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்ப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் உட்பட காயமடைந்த மற்ற ஐந்து பேரும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் விவரம்: சரிதா (38 வயது), தில்லை நாயகி (40 வயது), ஜோதி (65 வயது), கௌதம் (25 வயது), நிஷா (12 வயது).

விபத்தை ஏற்படுத்திய வைஷாலியை கைது செய்த போலிஸ் விசாரணையில், வைஷாலி மது போதையில் இருந்தது, கூகுள் மேப்பை பார்த்து தனது காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து வைஷாலி மேல் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தகவல் அறிந்த வைஷாலியின் உறவினர் வந்து தமிழ் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த வைஷாலி பற்றிய விவரங்களை போலிசாரிடம் தெரிவித்தார்.

டிரண்டிங்
நீல கண் மனிதர்கள். மிரட்டும் இந்தோனேசியா மர்மத்தீவு.
மர்மங்கள் / 05 நவம்பர் 2024
நீல கண் மனிதர்கள். மிரட்டும் இந்தோனேசியா மர்மத்தீவு.

இது மெலனின் பாதிப்பால் உங்கள் தோல், முடி மற்றும் கண்களின் நிறத்தை (நிறமி) பாதிக்கும் ஒரு மரபணு நிலை

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி