அப்பா வைகோவை போலவே ஓவர் எமோஷனலாகவும் மதில் மேல் பூனை கதையாகவும் அரசியல் செய்தி கொண்டிருக்கும் வாரிசு அரசியல்வாதி துரை வைகோவை, ஆரம்பத்தில் இருந்தே ஒரு வித அச்சத்தோடும் ஐயத்தோடுமே மேல் திமுக தலமை அனுசரித்து வந்தது. இப்பொழுது துரை வைகோ பற்றி சுற்றி சுழன்றடிக்கும் ஒரு செய்தியால், திமுக தலமை கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.
திமுக-விற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கேரளா மாநிலத்தில் பாஜக-வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டிருத்த பொழுது, ம.தி.மு.க. முதன்மை செயலர் துரைவைகோ போனில் பேசியதாக ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் உலாவி வருகின்றது. இந்த தகவல் அண்ணா அறிவாலய தலைமைகளை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதுடன், துரை வைகோ மேல் அழுத்தமான சந்தேக பர்வையை வீச வைத்துள்ளது.
இது குறித்து அரசியல் வட்டாரங்களில் உலாவும் தகவல்: திருச்சியில், திமுக கூட்டணி சார்பாக தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டார் துரை வைகோ. 'உயிரே போனாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன்' என, திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பல அமைச்சர்கள் முன்னிலையில் துரை வைகோ ஒவர் எமோஷனில் அழுது புலம்பினார். ஆயினும், கூட்டணி தர்மத்தை மதித்து துரை வைகோவிற்காக அல்லும் பகலும் அயராது உழைத்து தேர்தல் பணியாற்றினார்கள் உடன் பிறப்புகள். திருச்சியில் துரை வைகோவின் வெற்றி உறுதி என உளவுத்துறை தகவல்களும் திமுக தலைமையை மகிழ்ச்சி கொள்ள செய்திருந்தது.
இந்த நிலையில்தான் 'அண்ணாமலையுடன் துரை வைகோ போனில் பேசினார்' என்ற அடிபொலி அதிரடி தகவல் பரவி திமுக தலைமைக்கு திகிலை கொடுத்துள்ளது.
திருச்சியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட துரை வைகோ மறுத்தது, அண்ணாமலையுடனான தற்போதைய போன் பேச்சு தகவல் இரண்டையும் முடிச்சிட்டுப் பார்த்தே திமுக தலைமை, மொத்தமாகா துரை வைகோ என்ன திட்டம் போடுகிறார் என ஓரளுவிற்கு கணிக்க தொடங்கியுள்ளது. ஆனால், அண்ணன் அண்ணாமலை நட்பு ரீதியில் அனைவருடனும் அன்பாக பழகுபவர், அந்த அடிப்படையில் துரை வைகோவுடன் செல்போனில் பேசியிருக்கலாம் என, அண்ணாமலையின் அணுகுமுறைக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் பாஜக வட்டாரம் அப்படியே துரை வைகோவும் நட்பு அடிப்படையிலேயே அண்ணாமலையுடன் பேசியிருப்பார் என, துரை வைகோவின் அரசியல் நேர்மைக்கும் சேர்த்து சர்டிபிகேட் கொடுக்கிறார்கள்.