பல வித்தியாசமான விசித்திர சம்பவங்கள் வட இந்தியாவில் அரிதாக நடந்து பேசு பொருளாகவும் மீம் மெட்டீரியலாகவும் இணையதளங்களில் வலம் வருவது உண்டு. அதிலும் பொருளாதாரம், கல்வியறிவு, வேலைவாய்ப்புகள் என பல அடிப்படை தேவைகளில் மிகவும் பின்தங்கிய பீகார் போன்ற மாநிலங்களில் கடத்தல், படுகொலைகள், கள்ளத் தொடர்பு கதைகள் என சமூக சீர்கேட்டு செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிர்ச்சி சம்பவங்களை போன்றே அடிக்கடி கிச்சுகிச்சு சம்பவங்களும் வட இந்தியாவில் நடப்பதுண்டு, அப்படி ஒரு அதிர்ச்சி கிச்சுகிச்சு சம்பவம்தான் இப்பொழுது பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் அரங்கேரியுள்ளது.
பீகாரி மாநிலம் பங்கா மாவட்டத்தில் உள்ள சாத்ரபல் என்ற சிறிய பஞ்சாயத்தில் நடந்த ஒரு சம்பவம் இப்பொழுது இந்தியா முழுவதும் பேசு பொருளாகி தேசிய கவனத்தை கவர்ந்துள்ளது. சாத்ரபல் பஞ்சாயத்தில் வசித்து வந்தனர் தில்லேஷ்வர்- கீதா தேவி தம்பதியினர். இவர்களின் மகளை அதே பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த ஆண்டு சிக்கந்தரின் மனைவி அதாவது தில்லேஷ்வர் - கீதா தேவியின் மகள் இறந்துவிட்டார். மனைவியை இழந்து மன உளைச்சலில் இருந்த சிக்கந்தர் தனது மாமனார் தில்லேஷ்வர் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
மனைவி இல்லாத மருமகன் சிக்கந்தரை மாமியார் கீதா தேவி அன்போடும் பாசத்தோடும் பொறுப்பாக கவனித்து வந்துள்ளார். மாமியார் கவனிப்பில் மதி மயங்கிய சிக்கந்தர், எப்படியோ மாமியார் கீதா தேவியை மயக்கி, அதிரிபுதிரியாக அடுத்த கட்ட நிலைக்கு உறவினை எடுத்து சென்றுள்ளார். மாமானார் தில்லேஷ்வர் வீட்டில் இல்லாத நேரங்கலில் மருமகன் சிக்கந்தரும் மாமியார் கீதா தேவியும் தில்லானா பாடி ஆட்டம் போட்டு, அக்கம் பக்கத்தினரின் கவனத்தை பெற்று விட்டார்கள்.
ஓரளுவுக்குதான் பொறுமை என பொங்கிய பக்கத்து வீட்டுகாரர்கள், தில்லேஷ்வரிடம் சிக்கந்தர் மற்றும் கீதா தேவியின் தில்லானா விஷயத்தை வத்தை வைத்து விட்டார்கள். அக்கம் பக்கத்தினர் சொன்னாலும், அன்பு மனைவி கீதா தேவி மற்றும் மருமகன் சிக்கந்தர் மேல் இருந்த நம்பிக்கையில் தில்லேஷ்வர் பொறுமை காத்து வந்தார். தில்லேஷ்வரின் பொறுமையை எருமையாக கூட மதிக்காத சிக்கந்தர் - கீதா தேவி இருவரும் தொடர்ந்து தில்லானா பாடி ஆடி வர, ஒரு நாள் வசமாக தில்லேஷ்வரிடம் கையும் களவுமாக சிக்கி விட்டார்கள்.
வளர்ச்சியடையாத கிராமங்களின் வழக்கப்படி, சுத்துப்பட்டு 18 பட்டி பஞ்சாயத்தையும் கூட்டிய தில்லேஷ்வர், பஞ்சாயத்து பெருசுகள் முன் சிக்கந்தர் - கீதா தேவியின் சில்மிஷ சேட்டைகளை சொல்லி பொங்கி அழுது விட்டார். விசாரித்து ப்பார்த்ததில் சிக்கந்தர் - கீதா தேவியின் கள்ளகாதாலை ஒரு காவிய காதல் ரேஞ்சில் ஒத்துக் கொண்டார்கள் சிக்கந்தர் - கீதா தேவி ஜோடி.
கீதா தேவியுடன் என்ன கடுப்பில் அவ்வளவு நாளும் வாழ்ந்து வந்தாரோ தெரியவில்லை. கள்ள காதலை ஒத்துக் கொண்ட அடுத்த நிமிடமே, 'மேட்டர் ஓவர், வாழ்ந்த்துகள்' என சிக்கந்தர் - கீதா தேவி ஜோடிக்கு பஞ்சாயத்தார் முன்னிலையிலேயே திருமணத்தை நடத்தி முடித்து, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் மாமனார் தில்லேஷ்வர்.
பதட்டத்தில் பதறிய பஞ்சாயத்தார், என்ன செய்வது என தெரியாமல் தடுமாற, சிலர் எப்படி இந்த திருமணத்தை அனுமதிப்பது என பொங்கி போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
யார் என்ன சொன்னால் என்ன? வாழப்போவது சிக்கந்தரும் கீதா தேவியும்தான். இனிமேலாவது சிக்கந்தர் வேறு கீதா தேவியையும், கீதா தேவி இன்னொரு சிக்கந்தரையும் தேடாமல், கடைசிவரை ஒன்றாக தில்லானா பாடி ஆடி சந்தோஷமாக வாழ்ந்தால் சரி.