கடந்த டிசம்பர் மாதம் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது ஜன்னல் கதவு வழியாக மர்மமான நபர்கள் சிலர் மேகக் கூட்டங்களின் மேல் நிற்பது போன்ற வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார். அது என்னவென்று தெரியாமல் மக்களும் விஞ்ஞானிகளும் குழப்பத்தில் உள்ளார்கள். ஒருவேளை ஏலியன்களாக இருக்குமோ என்றும் பலர் யூகித்து வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து விமானங்கள் விபத்துக்குள்ளாகிய சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது. 2024 ஆம் ஆண்டு விமான பயணிகளுக்கு ஒரு மோசமான ஆண்டாகவே இருந்துள்ளது. ஒரே மாதத்தில் நான்கு விமான விபத்துகள் பதிவாகின.
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று அஜர்பைஜானிலிருந்து ரஷ்யாவிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தான் என்ற இடத்தில் அவசரமாக தரையிறங்கும் போது விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்து தீ பிடித்ததில் பயணிகள் பலரும் உயிரிழந்து விட்டனர். அடுத்ததாக, டிசம்பர் 29 ஆம் தேதி பாங்காக்கில் இருந்து தென்கொரியாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சக்கரங்கள் திறக்கப்படாததால் பெரும் விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த 181 பேரில் 179 பேர் இறந்துள்ளனர்.
இந்த விமான விபத்துக்களுக்கான காரணங்கள் குறித்த கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலையில், தற்போது புதிய கேள்வி ஒன்று எழுந்திருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர், விமானத்தின் ஜன்னல் கதவு வழியாக மேகக் கூட்டங்களின் மேல், மனிதர்கள் போன்று சிலர் நின்று கொண்டிருப்பதை தனது ஸ்மார்ட்போனில் வீடியோ எடுத்திருந்தார். அதுவும் ஒன்று, இரண்டு நபர்கள் கிடையாது. ஆங்காங்கே இருவர், மூவர் என்று தனித்தனியாக நின்று கொண்டு ஏதோ செய்து கொண்டிருப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இது வெறும் கற்பனையாக இருந்தால், நின்று கொண்டிருப்பவர்களின் நிழலும் அருகே காணப்படுகிறது. அப்படி என்றால் யார் இவர்கள்?
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டது வேற்றுகிரகவாசிகளை பற்றி படிக்கும் வல்லுனர் 'மைரா மூர்'. வீடியோ வெளியிட்ட ஓரிரண்டு நாட்களிலேயே 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வீடியோவில் தெரியும் மர்ம நபர்கள் யார் என்பதுதான் தற்போது இருக்கும் பெரும் புதிர்.
யார் இந்த மர்ம நபர்கள்? ஏலியன்களா? அல்லது பேயா? ஏலியன்களாக இருந்தாலும் மேகக் கூட்டங்களின் மேல் நிற்பது சாத்தியமில்லாத ஒன்று. ஒரு சிலர் இதற்கான காரணங்களை கண்டுபிடித்து கொண்டு இருந்தாலும் வேறு சிலர் இந்த வீடியோவே பொய்யான ஒன்று என கூறி வருகின்றனர்.
நாசாவும் பல ஆண்டுகளாக ஏலியன்கள் பற்றிய ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், இன்னும் வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்பதற்கான ஆதாரப்பூர்வ முடிவு சொல்லாமல் இருக்கிறார்கள். முடிவுகள் வெளிவந்தால் பல மர்மமான நிகழ்வுகளுக்கும் விடை தெரியும்.