இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடகி சைந்தவி தம்பதிகள் இருவரும் தாங்கள் தங்கள் திருமண பந்தத்திலிருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளனர்.
2013-ம் ஆண்டு ஜூன் 27-ம் திகதி, தங்கள் 5 வருட காதல் வாழ்க்கையின் அடுத்த கட்டமான இல்வாழ்க்கையில் இணைந்த இசையமைப்பளர் ஜி.வி பிரகாஷ் பாடகி சைந்தவி தம்பதியின் 11 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளது.
இருவரும் தங்கள் விவாகரத்து குறித்து தங்கள் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ள நிலையில், வழக்கம் போல் பல ஆர்வக் கோளாறுகள் "அண்ணா எங்களுக்காக சேர்ந்து வழுங்கள்", "அண்ணி தயவு செய்து அண்ணனை விட்டு போகாதீர்கள்" என ஏதோ தங்கள் வீட்டில் இனி அடுப்பெரியாது ரேஞ்சிற்கு இரண்டு நாட்களாக சாப்பிடாமல் தூங்காமல் கதறியழுது கமெண்டில் தங்கள் மன குமுறல்களை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.
இன்னும் பல அதி மேதாவி அதிக பிரசங்கிகள், ஜி.வி. பிரகாஷிற்கும் சைந்தவிக்கும் கவுன்சிலிங் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் பலர் யார் மேல் தவறு என பழைய சம்பவங்களை கிளறி சமூக வலைதளங்களில் நீயா? நானா? நடத்தி வருகின்றனர்.
ஆனால், விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு விட்டு உருப்படியான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த ஜி.வி. பிரகாசிற்கு இந்த சமூக வலைதள ஆர்வக் கோளாறுகளால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது போல் இருக்கிறது.
கடுப்பான ஜி.வி. பிரகாஷ், "ஏண்டா எனக்கு பக்கெட் தூக்கிட்டு திரியுறீங்க?" ரேஞ்சுக்கு ஒரு பதிவை தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை படித்த பிறகாவது திருந்தி தொலைங்கடா அதிக பிரசங்கி பயலுகளா. உங்களால் மொத்த தமிழ் சமூக மாண்பையும் மதிப்பையும் திருமண வாழ்க்கையை சரியாக வாழ முடியாதவர்களெல்லாம் கேள்வி கேட்கும் நிலமை உருவாகியுள்ளது.