ஸ்லோவோக்கியா நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ துப்பாக்கி சூட்டிற்கு ஆளாகியுள்ளார். படுகாயமடைந்த ராபர்ட் பிகோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்லோவோக்கிய நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ, தலைநகர் பிரஸ்டில்லா நக்ருக்கு வட கிழக்கே உள்ள ஹேண்ட்லோவா என்ற இடத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேறார். அந்த நிகழ்ச்சிக்கு பின் அரங்கத்தை விட்டு வெளியே வந்த பிரதமர் ராபர்ட் பிகோவை குறி வைத்து மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார்.
அந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் படுகாயமடைந்த ராபர்ட் பிகோ அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
ஸ்லோவோக்கிய பிரதமர் ராபர்ட் பிகோ
அங்கிருந்த பாதுகப்பு அதிகாரிகள் மற்றும் போலிசார் ராபர்ட் பிகோவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
துப்பக்கி சூட்டை நிகழ்த்திய மர்ம நபரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்த மர்ம நபர் எதற்காக பிரதமர் ராபர்ட் பிகோவை கொலை செய்ய முயன்றார் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அந்த நபரை போலிசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராபர்ட் பிகோ தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரதமர் ராபர்ட் பிகோ மீதான கொலை முயற்சிக்கு, ஸ்லோவோக்கிய அதிபர் ஜூசானா கபூட்டோவா, பாராளுமன்ற துணை சபாநாயகர் லூபஸ் பலஹா உட்பட்ட பல ஸ்லோவோக்கிய அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்