அமெரிக்காவின் பென்சில்வெனியா மாஹாணத்தை சேர்ந்த ஹீதர் பிரஸ்டி என்ற 41 வயது நர்ஸ், தன்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் பலருக்கு அளவிற்கதிகமான இன்சுலின் மற்றும் விஷ ஊசிகளை செலுத்தி கொலை செய்த வழக்கில் 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாஹாணத்தில் தனியார் மருத்துவமனையி ஒன்றில் பணியாற்றி வந்தவர் 41 வயது ஹீதர் பிரஸ்டி. இவரது கண்காணிப்பில் இருந்த இரண்டு நோயாளிகள் இறந்தது தொடர்பாக கடந்த ஆண்டு (2023 மே மாதம்) போலிசாரால் விசாரணனைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையில் ஹீதர் பிரஸ்டி தன்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் 22 பேருக்கு அளவுக்கதிகமான இன்சுலின் மருந்துடன் விஷ ஊசிகளை செலுத்தி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2020ம் ஆண்டு முதல் தான் பணியாற்றிய பல்வேறு மருத்துவமனைகளில் இவ்வாறு விஷ மற்றும் அதிக அளவிலான இன்சுலின் ஊசிகளை போட்டு நோயாளிகளை கொலை செய்துள்ளார் ஹீதர் பிரஸ்டி. ஹீதர் பிரஸ்டியால் இன்சுலின் ஊசி செலுத்தி கொலை செய்யப்பட்டவர்களில் சிலருக்கு இன்சுலின் ஊசியின் தேவையே இருந்திருக்கவில்லை.
கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் நோயாளிகளுக்கு அளவுக்கதிகமான இன்சுலின் மற்றும் விஷ ஊசிகளை செலுத்தியதாக, விசாரணையின் போது நீதி மன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஹீதர் பிரஸ்டி.
பென்சில்வேனியா மாஹாணம் பட்லர் நீதிமன்றத்தில் நடபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஹீதர் பிரஸ்டிக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.