உங்கள் முகத்திற்கு நீங்கள் செய்யும் மேக்கப் உங்கள் உடலுக்கு எமனாக இருக்கும் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா. ஆம் 20 ஆம் நூற்றாண்டு வரை மக்கள் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை மேக்கப் செய்ய பயன்படுத்தினர். இன்று நவீன மருத்துவம் வளர்ந்ததால் அந்த பிரச்சனை அவ்வளவாக இல்லை. ஈயம் கலந்த பவுடர் முதல் பாதரசம் கலந்த பவுடர் வரை உயிரை கொல்லும் பொருள்களை பழங்கால மக்கள் தீங்கு என்று தெரியாமலே பயன்படுத்தினர். அதைப் பற்றி இங்கு காண்போம்
.
பழங்கால எகிப்திய நாகரிகத்தில் அழகு என்பது ஆடம்பரத்தின் குறியீடு . அவர்கள் “Kohl” என்ற Eyeliner ஐ கண் இமைகளுக்கு பயன்படுத்தினர். என்னதான் இது கண் இமைகளை சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்தாலும் எதிர்பாராவிதமாக அந்த அழகு சாதன பொருள் ஈயத்தால் செய்யபட்டு இருந்தது . அது அதிகம் பயன்படுத்தினால் தோல் கேன்சர் ஐ வர வைக்கும்.
அப்படியே இடைக்கால ஐரோப்பாவிற்கு செல்லலாம் . அங்கு அவர்களின் தோல் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று “Venetian Ceruse” என்ற ஈயமும் வினிகரும் கலந்த கலவையை முகத்தில் தடவினர்.இதனால் முடியுதிர்வு , பக்கவாதம் போன்ற பல பக்கவிளைவு ஏற்பட்டு இறந்தனர்.
இங்கிலாந்தின் அப்போதைய மகாராணி விக்டோரியா காலத்தில் , பலர் ஆர்சனிக் என்ற வேதி பொருளை அழகு சாதன க்ரீம் ஆக பயன்படுத்தி Cancer வந்து இறந்தனர். மேலும் சில இடங்களில் பாதரசமும் பயன்படுத்தினர்.
இதை விட கொடுமையான ஒன்று இருக்கும் என்றால் ரேடியம் போன்ற அணுகதிர்வீச்சு பொருளை அழகுக்கு பயன்படுத்தியது தான். 1900 களில் ரேடியம் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது பலர் இது தோல்களை அழகாக்கும் என்று எண்ணினர் . 1911 இல் “Helen Cavendish” என்ற அழகு சாதன நிபுணர் ரேடியம் தொடர்பான அழகு சாதன பொருளை உருவாக்கினார். ஆனால் அது கேன்சர்க்கு வழி வகுத்தது . இன்று நவீன அறிவியல் வளர்ந்ததால் அத்தகைய தீங்கு இல்லை. இந்த மாதிரி உயிரை கொல்லும் அழகு சிகிச்சைகள் இப்போது வேண்டுமென்றால் நம்ப முடியாததாக தோன்றலாம் ஆனால் ஒரு காலத்தில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தினர்.