அடால்ஃப் ஹிட்லர். பேரை கேட்டாலே ச்சும்மா அதிருதில்ல டைப்பில் ஹிட்லரின் அட்ராசிட்டிகள் பல வரலாற்று நூல்களில் வகை வகையாக விவரிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஹிட்லர் அட்ராசிட்டிகளில் அதிரடியான ஒரு சாம்பிள்தான் இது.
முதலாம் உலகப்போரில் ஜெர்மனை அடைந்த தோல்வியும், அதனால் கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி என இரண்டக பிளக்கப்பட்டு, தோல்வி அவமானத்தால் உலக நாடுகள் முன் கூனி குறுகி நின்ற ஒவ்வொரு ஜெர்மனியனின் வெறியையும் ஒட்டுமொத்தமாக தனக்குள் இறக்கி வெறி கொண்டு தன் வேட்டையை தொடங்கியவர் ஹிட்லர்.
ஜெர்மனியின் இந்த அவல நிலைக்கு காரணம் மொத்தமும் வேறு இனத்தவர்கள் முக்கியமாக யூதர்கள் ஜெர்மனியில், ஜெர்மனிய மக்களோடு கலந்து, ஜெர்மன் உப்பை தின்று விட்டு அவர்களுக்கே துரோகம் செய்கிறார்கள். யூதர்கள் உட்பட மற்ற இனத்தவர்கள் தங்கள் இனத்திற்கே விசுவாசமாக இருக்கிறார்கள். எப்படியிருந்தாலும் இனப் பாசம் மனிதனை விட்டு போவதில்லை. எனவே, ஜெர்மனிய ஆரிய இனத்தை பெருக்க வேண்டும். ஜெம்ரனிய ஆரிய இனமே ஜெர்மனுக்கு விசுவாசமாக இருக்கும் என முடிவு செய்தார் ஹிட்லர்.
லெபன்ஸ்போர்ன்.
தமிழில் சொன்னால், 'வாழ்க்கையின் நீரூற்று. தூய்மையான பச்சை ஜெர்மனிய ஆரிய குழந்தைகளை பெற்றெடுக்கும் திட்டத்திற்கு 'லெபன்ஸ்போர்ன்' என பெயரிட்டார் ஹிட்லர். பல தூய ஜெர்மனிய ஆரிய இன பெண்கள் அடையாளம் காணப்பட்டு லெபன்ஸ்போர்ன் திட்டத்தில் சேர்க்கப்பட்டார்கள்.
லெபன்ஸ்போர் திட்டத்தில் உள்ள பெண்களின் வேலை தூய ஜெர்மனிய ஆரிய இனப்பெருக்கம் மட்டுமே. அவர்களை கருத்தரிக்க வைப்பது 'ஷூட்ஸ் ஸ்டேஃபல்' சுருக்கமாக எஸ்.எஸ் என அழைக்கப்பட்ட ஹிட்லரின் ஸ்பெஷல் ராணுவ படையில் பணி புரியும் ஆண் அதிகாரிகளின் வேலை. இனப்பெருக்கம் என்றால், நேரடியாக சொன்னால் லெபஸ்போர்ன் திட்டத்தில் உள்ள பெண்களுடன் உடலுறவு கொண்டு அவர்களை கருத்தரிக்க வைப்பது எஸ்.எஸ் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை. இன்னொரு வகையில் சொன்னால், எஸ்.எஸ் படைகளில் உள்ள அதிகாரிகள்ல் வீரர்களுடன் உடலுறவு கொள்வதே லெபன்ஸ்போர்ன் பெண்களின் வேலை. வேலை என்பதை விட அதை அவர்கள் சேவையாக நினைத்து செய்தார்கள்.
'ஷீட்ஸ் ஸ்டேஃபல்' அதாவது எஸ்.எஸ் படை என்பது ஹிட்லரின் மெய்காவல் படையின் முதல் நிலை படை. கறுப்பு நிற சீருடையில் எப்பொழுதும் ஹிட்லரை சூழ்ந்து நடமாடிக் கொண்டிருந்த அந்த இறுக்கமான மூஞ்சி எஸ்.எஸ் படை வீரர்களை நீங்கள் ஹிட்லரின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பார்த்திருக்கலாம்.
தன் விலை மதிக்க முடியாத உயிருக்கு உத்ரவாதமாக இருக்கும் எஸ்.எஸ் படையினரை கிளுகிளுப்பான மகிழ்ச்சியில் வைத்திருப்பதால், அவர்கள் துரோகம் என்ற நினைப்பிற்கே போக மாட்டார்கள். அதே சமயம் வலிமையான் மாபெரும் தூய ஜெர்மனிய ஆரிய இனத்தை உருவாக்கி விடவும் முடியும். இதுதான் ஹிட்லரின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் திட்டம்.
எஸ்.எஸ் படையின் தலைவராக இருந்தவர் ஹிம்லர். ஹிம்லரின் குதர்க்க மூளையில் உருவான திட்டம்தான் இந்த லெபன்ஸ்போர்ன் திட்டம். தன் திட்டத்தை ஹிம்லர் ஹிட்லரிடம் சொன்ன அடுத்த நொடியே அப்ரூவல் கொடுத்து விட்டார் ஹிட்லர். ஹிட்லரின் நிழலாகவும் அவ்வப்பொழுது மூளையாகவும் செயல்பட்டவர் ஹிம்லர்.
அந்த காலகட்டத்தில், ஜெர்மனிய இன பிறப்பு விகிதம் பெரும் சரிவை கண்டிருந்தது, போர் அதனால் ஏற்பட்ட பொருளாதர சிக்கல்கள், வேலையின்மை, நிம்மதியின்மை என ஜெர்மனிய மக்கள் நிம்மதியான வாழ்க்கையை இழந்திருந்த கால கட்டம், இனப்பெருக்கம் பற்றி சிந்திக்க மூளைக்கு நேரமில்லாமல் இருந்த கொடூர பசியின் பொற்காலம். துவண்டு கிடந்த ஜெர்மனிய இனப்பெருக்கத்தை தூக்கி நிறுத்த ஹிட்லர் - ஹிம்லர் அண்ட் கோ-வின் திட்டம் விரைந்து செயல் படுத்தப்பட்டது.
ஒரு எஸ்.எஸ் படை வீரன் குறைந்தபட்சம் நான்கு குழந்தைகளை இனப்பெருக்கம் செய்ய வேண்டும். அதற்கு மேல் கணக்கை அதிகரிப்பது அவரவர் திறமை. லெபன்ஸ்போர்ன் திட்டத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு அதன் பெற்றோர்கள் உரிமை கோர முடியாது. அந்த குழந்தைகள் ஜெர்மன் நாட்டின் சொத்துக்கள். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அரசே செய்யும். அவர்கள் வளர்ந்து ஜெர்மன் நலனிற்காக ஜெர்மனிய தலைவர் ஹிட்லரின் கட்டளைகளுக்கு விசுவாசமாக கடமையாற்ற வேண்டும்.
லெபன்ஸ்போர்ன் திட்டத்தில் பிறந்த குழந்தையுடன் ஹிட்லர்.
லெபன்ஸ்போர்ன் திட்டத்தில் பணியாற்ற தூய ஜெர்மனிய ஆரிய இன பெண்களை தேர்ந்தெடுக்க ஒரு குழு ரகசியமாக செயல்பட்டது. சில பல உடல் தகுதிகள், குடும்ப பின்ணனி என தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணின் ஹிஸ்ட்ரியை அலசி ஆராய்ந்த பின், ஹிட்லரின் ராஜ விசுவாசிகளில் யாரேனும் ஒருவர் அந்த பெண்களை ரகசியமாக அணுகி லெபன்ஸ்போர் திட்டம் பற்றியும், ஹிட்லரின் இலக்கு பற்றியும், ஹிட்லருக்கு ஜெர்மனிய மக்கள் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் விளக்கமாக கிளாஸ் எடுப்பார்கள். அன்றைய ஒட்டு மொத்த ஜெர்மனிய மக்களும் ஹிட்லர் தங்களை மீட்க வந்த மீட்பர் என்றே நம்பினார்கள். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தங்களின் காட்பாதர் ஹிட்லருக்காக ஒரு குழந்தையை பெற்றுக் கொடுப்பதை புண்ணியமாக நினைத்து அதில் இணைந்தார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள், ஜெர்மனியர்களுக்கே உரித்தான பொன்னிற முடி, நீல நிறக் கண்கள், வலிமையான நீண்ட கால்கள், வலுவான கைகள், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு வசதியான அகலமான் இடுப்பு எலும்புக்கட்டு என, லெபன்ஸ்போர்ன் திட்டத்திற்கு தேவையான பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கிறதா என பார்த்து பார்த்தே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பெரும்பாலும் 20 வயதிற்குட்பட்ட இளம் பெண்களையே தேர்ந்தெடுத்தார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பெண், லெபன்ஸ்போர்ன் திட்டத்தில் சேர ஒப்புதல் வழங்கிய பின், அவளிடம் அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்துகள் பெறப்படும். அதன் பின் லெபன்ஸ்போர்ன் திட்டத்தின் சம்பிரதாயங்களை எஸ்.எஸ் படை வீரர்களும் மருத்துவர்களும் பார்த்துக் கொள்வார்கள்.
முதலில் சில மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும். மருத்துவ பரிசோதனைகளின் முடிவில் அந்த பெண் பக்க ஒரிஜினல் ஜெர்மனிய ஆரிய பெண் என்பதும், எந்த வகையிலும் எந்த சூழ்நிலையிலும் யூத ரத்தம் ஹில்ட்கார்ட்டின் உடலில் கலந்திருக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்படும். பின் அவளுக்கான இனப்பெருக்க துணையை எஸ்.எஸ் படையில் இருந்து தேர்ந்தெடுக்க அந்த பெண் அழைத்து செல்லப்படுவாள்.
அணி அணியாக பிரிக்கப்பட்ட பெண்கள் எஸ்.எஸ் படையின் கட்டுப்பாட்டில் ஜெர்மனியின் பல பகுதிகளில் ரகசியமாக இயங்கி வரும் சிறப்பு பங்களாக்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அனைத்து பெண்களும் தங்கள் உண்மையான பெயரை மறைத்து விட்டு போலியான பெயர்களில் அங்கு தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.
அந்த எஸ்.எஸ் படையின் சிறப்பு பங்களாக்கள், பெயரளவிற்கு பங்களா இல்லை. திரையரங்கம், விளையாட்டரங்கம், நூலகம், உலகின் மிக சிறந்த உணவுகள், பணிகளை செய்ய பல வேலையாட்கள், என அங்கு தங்க வைக்கப்பட்ட ஜெர்மனிய ஆரிய பெண்களுக்கு சொர்க்கம் என்றால் என்னவென்று டெமோ காட்டப்பட்டது.
லெபன்ஸ்போர்ன் பங்களா
ஒரு வாரம். அந்த பங்களாவில் எஸ்.எஸ் படை வீரர்களுடன் இணைந்து குழு விளையாட்டு, திரைப்படங்கள் பார்ப்பது, இன்னும் பல வகைகளில் அந்த பெண்கள் தங்களுக்கு பிடித்த இனப்பெருக்க துணையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஒரு பெண் தான் விரும்பும் துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது, அவளது தலை முடியின் நிறமும் அவள் தேர்ந்தெடுக்கும் ஆணின் கண்களின் கருவிழி நிறமும் ஒன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டார்கள். அங்கிருந்த எஸ்.எஸ் படை ஆண்களின் எந்த உண்மையான விவரங்களும் அந்த பெண்களுக்கு தெரியப்படுத்தப் படவில்லை.
ஒவ்வொரு பெண்ணும் தங்களின் மாதவிடாய் முடிந்த பத்தாவது நாள், அவள் விரும்பிய ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். இதை வெறும் உடலுறவு என நினைக்காமல் ஹிட்லருக்கு செய்யும் மாபெரும் சேவையாக நினைத்தே அனைத்து பெண்களும் ஆண்களும் இதில் ஈடுபட்டார்கள். இதை அவர்கள் மிக பெருமையாக கௌரவமாக நினைத்தார்கள்.
பெண்கள் கருவுறும் வரை மாறி மாறி தாங்கள் விரும்பிய ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். எஸ்.எஸ் படை வீரர்களும் சளைக்காமல் அவர்களை விரும்பிய பெண்களை எல்லாம் திருப்திபடுத்திக் கொண்டிருந்தார்கள்.
பெண் கருவுற்றதும், மருத்துவ பரிசோதனைகள் மூலம் கருத்தரிப்பு உறுதி செய்யப்படும். பின்னர், அந்த பெண் அந்த பங்களாவில் இருந்த மகப்பேறு இல்லத்திற்கு மாற்றம் செய்யப்படுவார்.
குழந்தை பெற்ற பின் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தாய் குழந்தைக்கு பாலூட்டி தன் அரவணைப்பில் குழந்தையை வைத்திருக்க அனுமதிக்கப்படுவாள். அதன் பின், அந்த குழந்தை தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறப்பு எஸ்.எஸ் முகாமிற்கு அனுப்பப்பட்டு விடும். அவ்வளவுதான் அதன் பின் அந்த குழந்தை ஜெர்மன் நாட்டின் சொத்து. ஹிட்லரின் விசுவாசி.
குழந்தையை பிரித்த பின், அந்த தூய ஜெர்மனிய ஆரிய இன பெண் விரும்பினாள் மீண்டும் தன் பிள்ளை பெறும் சேவையை தொடரலாம் அல்லது தன் வீட்டிற்கு புறப்படலாம்.
லெபன்ஸ்போர் திட்டத்தின் மீலம் குறைந்தது 20 கோடி ஜெர்மனிய ஆரிய குழந்தைகளை பெற்றெடுத்து விட்டால், அவர்களை வைத்து இந்த உலகத்தை தனது காலடிக்குள் கொண்டு வந்து விடலாம் என ஹிட்லர் திட்டமிட்டார். ஆனால், இவ்வளவு குழந்தைகளை பெற்றெடுக்க ஜெர்மனியில் இருந்த பெண்கள் போதவில்லை. எனவே, தூய ஆரிய இன பெண்களை தேடி உலகின் பல மூலைகளுக்கு ரகசியமாக படையெடுத்தனர் ஹிட்லரின் ரகசிய விசுவாசிகள். தூய ஆரிய இனப் பெண்கல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை ஜெர்மனிக்கு கடத்தி வர ஒரு சிறப்பு நாஜி படையே செயல்பட்டது.
குறிப்பாக, முதலாம் உலகப் போர் காரணமாக ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐரோப்பாவின் மற்ற நாடுகளில் வாழ்ந்து வந்த ஜெர்மனிய பெண்களை குறி வைத்து இந்த படை தேடுதல் வேட்டையை நடத்தியது. ஒரிஜினல் ஜெர்மனிய ஆரிய இன பெண்களை தேடி இந்தியாவிற்கு கூட ரகசியமாக ஒரு நாஜி டீமை அனுப்பியிருந்தார் ஹிட்லர்.
ஆனால், நாஜி படைகளால் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் ஆரிய இன பெண்களை கண்டுபிடித்து ஜெர்மனிக்கு கொண்டு சொல்ல முடியவில்லை.
20 கோடி ஜெர்மனியர்களை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட லெபன்ஸ்போர்ன் திட்டத்தின் மூலம் வெறும் 12 ஆயிரம் குழந்தைகளையே உருவாக்க முடிந்தது. ஜெர்மனி ஹிட்லரின் கை விரலசைவில் கட்டுண்டு கிடந்த 12 ஆண்டுகளில் (1933 முதல் 1945 வரை) சுமார் 20 ஆயிரம் தூய ஜெர்மனிய ஆரிய இன குழந்தைகள் லெபன்ஸ்போர்ன் திட்டத்தின் கீழ் பிறந்ததாக கணக்கிடப்பட்டது.
அந்த 12 ஆயிரம் குழந்தைகளும், எஸ்.எஸ் படையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு ஹிட்லரின் கட்டளைகளுக்கு எப்படி செயலாற்ற வேண்டும் என பயிற்றுவிக்கப் பட்டனர். 1945ம் ஆண்டு இரண்டாம் உலக போர்ல் ஹிட்லர் தோற்று ஜெர்மனியை ரஷ்யா கைப்பற்றியபொழுது, இந்த குழந்தைகளுளுக்கு அதிகபட்சம் 12 வயதுதான் இருக்கும்.
அநாதைகளாக நின்ற அந்த 12 ஆயிரம் குழந்தைகளில் சில் ஆயிரம் பச்சை குழந்தைகளும் இருந்தார்கள். தந்தை யார்? தாய் யார்? என தெரியாமல் சுற்றி வளைத்த ரஷ்ய ராணுவத்தின் மொழி புரியாமல் தத்தளித்த அந்த குழந்தைகளில் பலர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்கள். பலர் அநாதைகளாக ஜெர்மன் தெருக்களில் சுற்றி திரிந்து இறந்து போனார்கள்.