Tuesday 23rd of September 2025 - 08:17:24 AM
கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி மக்களை புகைபிடிப்பது நல்லது என நம்பவைத்தன
கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி மக்களை புகைபிடிப்பது நல்லது என நம்பவைத்தன
Santhosh / 14 பிப்ரவரி 2025

20ஆம் நூற்றாண்டில் புகைபிடிப்பது ஒரு அழகிய பழக்கமாக, ஸ்டைலானதாக, நவீன கலாச்சாரத்துக்கேற்பதாக காணப்பட்டது. ஆனால் இதற்கு பின்னால் ஒரு பெரிய மோசடி இருந்தது. புகையிலை நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்க பொய் விளம்பரங்களை உருவாக்கி மக்களை மூளைச் சலவை செய்யத் தொடங்கின.

தங்களது தயாரிப்புகளை வெற்றிபெற செய்ய புகையிலை நிறுவனங்கள் புகைபிடிப்பதை ஆரோக்கியமானதாக, மன அழுத்தத்தைக் குறைக்கும் வழியாக மாற்றிக்காட்டின. இதற்காக அவர்கள் மருத்துவர்களையும், சினிமா நட்சத்திரங்களையும், பிரபல விளம்பர நிறுவனங்களையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றினர். 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் புகைபிடிப்பது மிகவும் அரிதாக  இருந்தது. ஆனால் புகையிலை நிறுவனங்கள் இதை ஒரு கடுமையான வியாபாரமாக மாற்றின. விளம்பரங்களில் புகைபிடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும், ஜீரணத்திற்கு உதவும், நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டது.

பிலிப் மோரிஸ், ஆர்.ஜே. ரெனால்ட்ஸ் மற்றும் லோரில்லார்ட் போன்ற புகையிலை நிறுவனங்கள், தங்கள் விற்பனையை அதிகரிக்க புகைபிடிப்பதை ஆரோக்கியமானதாக சொல்ல ஆரம்பித்தன. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிறந்த சிகரெட் என்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. தவறான மருத்துவ தகவல்களை கொடுத்து மக்களை நம்ப வைக்க முயன்றனர்.

ஜேம்ஸ் டீன், ஆட்ரி ஹெபர்ன் போன்ற பிரபலங்கள் புகைபிடிப்பதை உயர்ந்த அந்தஸ்தின் அடையாளமாக மாற்றினர். புகைபிடிப்பது , நவீன வாழ்க்கையின் அடையாளம் என மக்களிடம் நம்பிக்கை உருவாக்கப்பட்டது. மல்பரோ சிகரெட் நிறுவனமானது மல்பரோ மேன் என்கிற Cowboy கதாபாத்திரத்தை உருவாக்கி புகைபிடிப்பது ஆண்மையின் அடையாளம் எனப் பரப்பினர். இளைஞர்கள் அந்த Cowboy கதாபாத்திரத்தால் தூண்டப்பட்டனர். புகையிலை நிறுவனங்கள் பெண்களை இலக்காகக் கொண்டு “சுதந்திரமான பெண்களின் சிகரெட்” என்று விளம்பரங்களை வெளியிட்டனர்.

இந்த விளம்பரங்களில் புகைப்பிடிப்பதால் வரும் பின்விளைவுகளைப் பற்றி கம்பெனிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் அதை மறைத்தார்கள். புகைபிடிப்பு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் இருந்தும் பொய் தகவல்களை பரப்பினர். இதய நோய், உயர் ரத்த அழுத்தம், கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டபோதும் மறைத்தனர். மக்களை மூளைச்சலவை செய்து புகைப்பிடிப்பதை போதைப்பொருளாக மாறச்செய்தனர். 

புகைபிடிப்பு உலகளவில் கோடிக்கணக்கான உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளது. புகையிலை நிறுவனங்கள் செய்த பொய் விளம்பரங்கள் மக்களின் வாழ்க்கையை பாதித்து பல உயிர்களை கவர்ந்துள்ளன. புகைபிடிப்பின் பாதிப்பு இன்னும் குறையவில்லை. உலகளவில் பல நாடுகள் புகைபிடிப்பு தொடர்பான விளம்பரங்களை தடை செய்துள்ளன. இன்று புகைபிடிப்பின் உண்மையான பாதிப்பு உலகத்திற்குத் தெரிந்துவிட்டது. ஆனால் இந்த உண்மையை அறிய பல கோடிக்கணக்கான உயிர்கள் தீவிர பாதிப்புக்குள்ளாகி விட்டன. புகைபிடிப்பது ஒரு ஆபத்தான பழக்கம் என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். புகையிலை நிறுவனங்களின் மோசடி விளம்பரங்களால் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் இன்னும் முழுமையாக தீர்ந்துவிடவில்லை.

டிரண்டிங்
மகாத்மா காந்தியே ஆச்சரிய பட்ட சாந்தி தேவியின் பூர்வஜென்ம உண்மை சம்பவம்
மர்மங்கள் / 14 பிப்ரவரி 2025
மகாத்மா காந்தியே ஆச்சரிய பட்ட சாந்தி தேவியின் பூர்வஜென்ம உண்மை சம்பவம்

சாந்தி தேவியின் பூர்வஜென்ம நினைவுகள், மகாத்மா காந்தி உள்ளிட்ட பிரமுகர்களை ஆச்சரியப்படுத்தின. அவளது

இரு அணுகுண்டுகள் போட்டும் உயிரோடு தப்பிய ஒரே மனிதன் ட்ஸுடோமு யமாகுச்சியின் கதை
மர்மங்கள் / 16 ஏப்ரல் 2025
இரு அணுகுண்டுகள் போட்டும் உயிரோடு தப்பிய ஒரே மனிதன் ட்ஸுடோமு யமாகுச்சியின் கதை

ட்ஸுடோமு யமாகுச்சி, இரண்டாவது உலகப் போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வெடிப்புகளில் இருந்து

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி