திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை என்ற ஊரில் ஒரு இளம் பெண்ணுக்காக இரண்டு பெருசுகள் செய்த அதிரடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், "யாருடா இந்த பொண்ணு?" என அக்கம் பக்கத்தினரை வாயடைக்க வைத்துள்ளது.
குஜிலியம்பாறை சேர்வைகாரன்பட்டியில் ரங்கசாமி என்ற 72 வயது முதியவர் (!) தனியாக வசிந்து வந்தார். மனைவி இறந்து விட்ட நிலையில் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் முடித்து அவர்கள் கோவையில் வசித்து வரும் நிலையில் ரங்கசாமி மட்டும் தனியாக சேர்வைகாரன்பட்டியில் வசித்து வந்தார்.
கடந்த 2 -ம் திகதி (அக்டோபர் 2024) முதல் ரங்கசாமி தனது பிள்ளைகளை தொடர்பு கொள்ளாமல் இருக்க, அவரது மகன் யுவராஜா (40 வயது) தந்தை ரங்கசாமியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். ஆனால், அப்பா ரங்கசாமியை யாரும் 2-ம் திகதிக்கு பின் பார்க்கவில்லை என சொல்ல அதிர்ச்சியடைந்த யுவராஜா 17-ம் திகதி குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். ரங்கசாமியின் 'அதிரிபுதிரி ஆட்டங்கள்' பற்றி தெரிந்திராத போலிஸ், புகாரின் அடிப்படையில் முதியவர் ரங்கசாமியை தேடத் தொடங்கினார்கள்.
குஜிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருபவர் 64 வயதான முதியவர் கோவிந்தராஜ். கடந்த 20-ம் திகதி காலை பாளையம் கிராம நிர்வாக அதிகாரி (VAO) கலையரசியின் அலுவலகத்திற்கு சென்ற கோவிந்தராஜ், முதியவர் ரங்கசாமி தனது நண்பர்தான் என்றும், தான் அவரை கொலை செய்து உடலை எரித்து விட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்தார்.
கோவிந்தராஜின் குமுறலை கேட்டு பதறிப்போன VAO கலையரசி குஜிலியம்பாறை போலிசாருக்கு தகவல் சொல்ல, கோவிந்தராஜை கொத்தாக தூக்கிச் சென்ற போலிஸ் முறைப்படி விசாரணை செய்தார்கள்.
பண்ணக்காரன்பட்டி கிராமத்தில் தனது தோட்டத்து வீட்டில் மகன் வடிவேல் குமார் மற்றும் மருமகள் ஈஸ்வரியுடன் வசித்து வந்துள்ளார் கோவிந்தராஜ். என்ன மாயமோ மந்திரமோ மருமகள் ஈஸ்வரியை மயக்கி தன் ஆசை வலையில் மடக்கிப் போட்டார் கோவிந்தராஜ். ஈஸ்வரியும் கோவிந்தராஜும் இணைந்து இன்பலோகத்தில் பறந்து திரிந்து கொண்டிருந்த போது வில்லனாக வந்து சேர்ந்தார் ரங்கசாமி.
கோவிந்தராஜின் நீண்டகால நண்பர்தான் ரங்கசாமி. தன் நண்பேண்டா கோவிந்தராஜை பார்த்து அளவளாவிச் செல்ல அடிக்கடி கோவிந்தராஜின் தோட்டத்து வீட்டிற்கு வந்து சென்ற ரங்கசாமியின் ரசனை ஈஸ்வரி மேல் திரும்பியுள்ளது. மெல்ல தன் காதலை(!) ஈஸ்வரியிடம் சொல்லி ஓகே செய்த ரங்கசாமி, அடிக்கடி கோவிந்தராஜுக்கு தெரியாமல் தோட்டத்து வீட்டில் ஈஸ்வரியுடன் இன்னிசைக் கச்சேரி நடத்தியுள்ளார்.
சத்தமில்லாமல் நடந்த கச்சோரி சிலபல நாட்களில் உச்சகட்டத்தை அடைந்து, சத்தம் மெல்ல கோவிந்தராஜின் காதுகளை எட்டியது. எனக்கு மட்டுமோ நீ சொந்தமானவள் என்ற காதல் பொஸஸிவ்னெஸால் ஈஸ்வரியிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார் கோவிந்தராஜ்.
கோவிந்தராஜின் லவ் டார்ச்சர் தாங்க முடியாத ஈஸ்வரி என்னென்னமோ சொல்லி தன் கணவன் மற்றும் குழைந்தைகளை சம்மதிக்க வைத்து உடன் அழைத்துச் சென்று ரங்கசாமியின் வீட்டில் நிரந்தரமாக வாழத் தொடங்கினார்.
தனக்கே தனக்கான காதலி ஈஸ்வரியை கள்ளத்தனமாக கவர்ந்து சென்று விட்ட கயவன் ரங்கசாமியை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என மனதிற்குள் கருவிக் கொண்டிருந்தார் கோவிந்தராஜ். அதற்கான நாளும் வந்தது.
சம்பவத்தன்று, ஈஸ்வரி யாருக்கு சொந்தம் என பேசி முடிவு செய்யலாம் எனக்கூறி, பேச்சுவார்த்தைக்காக ரங்கசாமியை தனது தோட்டத்து வீட்டிற்கு அழைத்துள்ளார் கோவிந்தராஜ். இருவருக்கும் மட்டும் தனிமையில் நடந்த அதி தீவிர பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் உச்சத்த எட்டி கைகலப்பாக மாற, ரெண்டு பெருசும் கோமணத்தை வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் குதித்துள்ளனர்.
மோதலின் உச்சகட்டத்தில் அருகில் இருந்த சிமெண்ட் தூண் ஒன்றில் ரங்கசாமியின் தலையை மோதியுள்ளார் கோவிந்தராஜ். காலம் போன காலத்தில் காலாவதியாகி, இப்போவா அப்போவா என இழுத்துக் கொண்டிருந்த பெருசு ரங்கசாமியின் வீக்கான மண்டை சிமெண்ட் தூணில் பட்டதும் சிதைந்து, சிவலோக பதவியடைந்தார் ரங்கசாமி.
"என் புனிதமான காதலுக்காக எதையும் செய்வேன்" என்ற மன உறுதியோடு, மரணமடைந்த தன் நண்பன் ரங்கசாமியைன் டெட்பாடியை சாக்கு பையில் மூட்டை கட்டி எடுத்துச் சென்று, அருகிலிருந்த வரட்டாறு ஓடைக் கரையில் வைத்து எரித்து ரங்கசாமியின் ஈமக்கிரியையை முடித்து விட்டார் கோவிந்தராஜ்.
கோவிந்தராஜின் காதல் வெறியாட்டத்தைக் கேட்ட போலிஸார் "சிறப்பு" என வாழ்த்தாத குறையாக வாக்குமூலத்தை எழுதி வாங்கிக் கொண்டு வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்கள்.
ஒருவர் மரணம், இன்னொருவர் சிறை என இரண்டு பெருசுகளின் வாழ்க்கையை மொத்தமாக முடித்து ஊர் மானத்தை காத்த மஹராசி ஈஸ்வரி, எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி வருகிறார்கள் "குஜிலி"லியம்பாறை மக்கள்.