ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 22 வயது மாணவர் நவ்ஜித் சிங் சந்து என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த மற்ற இந்திய மாணவர்களை மெல்பெர்ன் நகர போலிசார் தேடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் ஹைரியானா மாநிலத்தை சேர்ந்த சில இந்திய மாணவர்கள் தனியாகவும் ஆஸ்திரேலிய நண்பர்களுடன் சேர்ந்தும் வாடகை வீடு எடுத்து தங்கி அங்கிருக்கும் கல்லூரியில் எம்.டெக் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். அவர்களில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நவ்ஜத் சிங் சந்து என்ற மாணவரும் ஒருவர்.
நவ்ஜத் சிங் சந்துவின் நண்பர் ஒருவர் தங்கியிருந்த வாடகை வீட்டில், நண்பர்களுக்குள் வாடகை தொகையை பங்கிட்டு கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, தனது நண்பரை அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு தன்னுடைய வீட்டில் வந்து தங்குமாறு அறிவுறுத்திய நவ்ஜத் சிங் சந்து, தனது காரில் நண்பரை அவரது பொருட்களுடன் பிக்-அப் செய்ய நண்பரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
நவ்ஜத் சிங் சந்து நண்பரின் வீட்டிற்கு சென்ற சமயம், அங்கிருந்த நண்பர்களுக்குள் மீண்டும் பிரச்சினை எழுத்துள்ளது. சிறிய வாய்தகராறு கைகலப்பாக மாற, தனது நண்பரையும் எதிர் தரப்பு மாணவர்களையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார் நவ்ஜத் சிங் சந்து. அப்பொழுது எதிர் தரப்பை சேர்ந்த அபிஜித் மற்றும் ராபின் கார்டன் என்ற இரண்டு மாணவர்கள் நவ்ஜத் சிங் சந்தை கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் நவ்ஜத் சிங் சந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், தாக்குதலுக்குள்ளான நவ்ஜத் சிங் சந்துவின் நண்பருக்கும் கத்து வெட்டு காயங்கள் ஏற்ப்பட்டுள்ளன. சம்பவம் பற்றி அருகில் இருந்த மற்ற மாணவர்கள் போலிசிற்கு தகவல் தெரிவித்தனர்.
போலிஸ் வரப்போவதை அறிந்த, நவ்ஜத் சிங் சந்துவை கொலை செய்த மாணவர்கள் அபிஜித் மற்றும் ராபின் கார்டன் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸ் நவ்ஜத் சிங் சந்துவின் நண்பரை மருத்துவமனையி சேர்த்தனர். தலைமறைவாக உள்ள அபிஜித் மற்றும் ராபின் கார்டன் இருவரையும் போலிஸ் தேடி வருகின்றனர்.
கொலை செய்த மாணவர்களில் ஒருவரான அபிஜித் ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்தவர்