தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒட்டு மொத்த இந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார், உலக நாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாஸன். சித்தார்த், தனுஷ், என பலருடன் கிசுகிசுக்கப்பட்ட ஸ்ருதிஹாஸன், கடந்த நான்கு வருடங்களாக பிரபல ஓவிய கலைஞர் சாந்தனு ஹசரிகாவுடன் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் லைஃப் வாழ்ந்து வந்தார். என்ன பிரச்சினையோ? எவன் செய்த சூனியமோ! ஸ்ருதி ஹாஸன் - சாந்தனு ஹசரிகா ஜோடி பிரிந்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சமூக வலைதளங்களில் ஸ்ருதி - சாந்தனு இருவரும் ஒருவரை ஒருவர் 'அன்பாலோ' செய்துள்ளனர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்திருந்த சாந்தனு ஹசரிகாவுடன் தான் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் ஸ்ருதி ஹாஸன் நீக்கி விட்டாராம். விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஸ்ருதிஹாசன் வற்புறுத்தியதால், தற்போது திருமணம் பற்றிய ஐடியா இல்லாமல் இருந்த சாந்தனு ஸ்ருதிஹாஸனை பிரிந்து விட்டதாக பாலிவுட் பட்சிகள் சொல்லுகின்றன.
சாந்தனு ஹசரிகாவிற்கு முன், லண்டனை சேர்ந்த பிரபல இசை கலைஞர் மைக்கேல் கோர்ர்சல் என்பருடன் 2017 -18ம் ஆண்டுகளில் காதலில் இருந்தார் ஸ்ருதி. சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு மைக்கேலை அழைத்து வந்து அப்பா கமலஹாஸனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ருதிஹாஸன். 2019ம் ஆண்டு மைக்கேல் கோர்சலை பிரிந்தார் ஸ்ருதிஹாஸன். அதன் பின் சாந்தனு ஹசரிகாவுடன் நான்கு வருடங்கள் லவ்விக் கொண்டிருந்த ஸ்ருதி, இப்பொழுது 'ச்ச்சீ... ச்ச்சீ.... இந்த பழமும் புளித்து விட்டது போல்' சாந்தனுவுடனான காதலுக்கு எண்ட் கார்டு போட்டுள்ளார்.