Saturday 19th of April 2025 - 08:01:44 AM
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கேரி கிரிஸ்டன்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கேரி கிரிஸ்டன்
எல்லாளன் / 29 ஏப்ரல் 2024

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்களாக, முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரும், பயிற்சியாளராக இந்தியாவிற்கு 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று கொடுத்த கேரி கிர்ஸ்டன், நியமிக்கப்பட்டுள்ளார்.

2023ம் ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி படு தோல்வியடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த, தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், அணி இயக்குநர் மிக்கி ஆர்தர், கேப்டன் பாபர் ஆசம் உள்ளிட்டோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். 50 ஓவர் மர்றும் 20 ஓவர் அணிகளின் புதிய கேப்டனாக பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதி நியமிக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம், ஷாகீன் ஷா அப்ரிதி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் பாபர் அசாம் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். டெஸ்ட் அணிக்கு ஷான் மசூது தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து வருகிறார்.

2024ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள,  'டி-20' உலக கோப்பை தொடரை எப்படியும் வெல்ல வேண்டும் என நினைக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,  அணியின் 'டி-20' மற்றும் ஒருநாள் அணிகளுக்கான புதிய தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டனை நியமித்துள்ளனர்.

2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்திய அணியின் தலமை பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை இந்தியவிற்கு வென்று கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது தலமை பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து  'நம்பர்-1' இடத்தை தக்க வைத்திருந்தது.

தற்போது நடைபெற்று வரும் (2024) ஐ.பி.எல்., தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை ஆலோசகர், பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வரிகிறார் கிர்ஸ்டன். 2024 மே 22ம் திகதி இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி, நான்கு 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் தலமை பயிற்சியாளர் பணியை கேரி கிர்ஸ்டன் தொடங்க உள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேஸன் கில்லஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து சசக்ஸ் கவுன்டி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நல்ல அனுபவம் பெற்றவர் கில்லெஸ்பி.  டி-20, ஒருநாள், மற்றும் டெஸ்ட், என மூன்று வித கிரிக்கெட்டுக்கும் துணை பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' அசார் மொஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பயிற்சியாளர்களுக்கான ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முடிவு செய்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

டிரண்டிங்
சினிமா / 10 ஜனவரி 2025
"கோலிவுட்ல எனக்கு எதிரா ஒரு கும்பல் இருக்கு" ஓப்பனாக உடைத்த சிவகார்த்திகேயன்

அஜித், ரஜினிகாந்த் வரிசையில் சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
65 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை தீர்க்கப்படாமல் இருக்கும் Dyatlov Pass மர்மம்
மர்மங்கள் / 17 நவம்பர் 2024
65 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை தீர்க்கப்படாமல் இருக்கும் Dyatlov Pass மர்மம்

அவர்களுக்கு பலமான காயம் ஏற்பட்டு இறந்தனர். அதில் ஒருவருக்கு மண்டை ஓடு உட்புறமாக உடைந்தது, இருவருக்க

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி