சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 16 வயது மகள் தனது கராத்தே மாஸ்டரான 27 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட 16 வயது பெண் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். "இந்த பொல்லாத உலகத்திலே, பிள்ளைக்கு பாதுகாப்பு இல்லையே" என சிந்தித்து செயலாற்றிய அந்த மாணவியின் பெற்றோர் அவரை தற்காப்பு பயிற்சி கற்றுக் கொள்ளச் சொல்லி பெரம்பூரில் இருந்த கராத்தே கிளாஸ் ஒன்றில் சேர்ந்து விட்டுள்ளனர்.
தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் அந்த மாணவி பள்ளி முடிந்ததும் நேராக கராத்தே கிளாஸ் சென்று தன் தற்காப்பு கலைகளை டெவலப் செய்த பின் வீட்டிற்கு திரும்புவார்.
கடந்த 17-ம் திகதி (அக்டோபர் 2024) காலை வழக்கம் போல் புறப்பட்டு சைக்கிளில் பள்ளிக்கு சென்று விட்டார் மாணவி. ஆனால், அவர் சென்ற சில மணி நேரங்களில், அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை, விடுமுறை எடுக்க என்ன காரணம் எனக் கேட்டு, பள்ளியிலிருந்து பெற்றோருக்கு SMS வந்துள்ளது. பதறிப்போன பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
மாணவியின் வகுப்பு தோழிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரித்ததில், காலையில் இருந்தே அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல் அறிந்த பெற்றோர் உடனடியாக திரு.வி.க நகர் போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்கள்.
வழக்கை பதிவு செய்த திரு.வி.க நகர் போலிஸ் தீவிரமாக மாணவியை தேடத் தொடங்கினார்கள். மாணவியின் செல்போன் டவரை ஆய்வு செய்ததில் செல்போன் தூத்துகுடி மாவட்டத்தில் ஒரு பகுதியில் சுற்றுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக தூத்துக்குடி சென்ற திரு.வி.க நகர் போலிஸ் செல்பொன் டவர் மற்றும் தூத்துக்குடி லோக்கல் போலிஸ் உதவியுடன் மணவி பதுங்கியிருந்த சரியான இடத்தை கண்டுபிடித்தனர்.
மாணவியின் இருப்பிடத்திற்கு விரைந்த போலிஸ் அங்கு அந்த மாணவியுடன் அவரது 27 வயது பெண் கராத்தே மாஸ்டரும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பொறுமையாக பேசி சமாதனப்படுத்தி இருவரையும் பூப்போல் பொத்தி பாதுகாத்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர் போலிஸ்.
அந்த மாணவி கராத்தே க்ளாஸில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே காதல் வயப்பட்டுவிட்டார் மாஸ்டர். ஒரு தலையாக இருந்த காதலை மெல்ல அந்த மாணவியிடம் சொல்லி தன் உணர்வுகள் எதிர்கால திட்டங்களை விளக்கி அந்த மாணவியிடம் காதலுக்கு க்ரீன் சிக்னல் வாங்கி விட்டார் அந்த பெண் கராத்தே மாஸ்டர். இன்னும் சில மாதங்களில் ஆணாக மாற முடிவு செய்த்துள்ள கராத்தே மாஸ்டர் அதற்குள் தங்கள் திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு மாணவியை தூத்துக்குடிக்கு அழைத்து வந்துள்ளார்.
இப்படியாக கராத்தே மாஸ்டர் கொடுத்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட அதிர்ச்சியுடன் அந்த மாணவியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். "ஆம் நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்" என தெரிவித்துள்ளார்.
குழப்பமடைந்த போலிஸ் மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்து சமாதனமாக பேசி அறிவுரை வழங்கி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், திரு.வி.க நகர் போலிஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட மாணவி காணாமல் போன வழக்கை செம்பியம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி "போக்சோ" வ்ழக்கு பதிவு செய்யப்பட்டு ஆணாக மாற திட்டமிட்டுள்ள பெண் கரத்தே மாஸ்டரிடம் விசாரணை நடந்து வருகிறது.