இங்கிலாந்து தலைநகர் லண்டனில், தெருவில் நடமாடிக் கொண்டிருந்த பொதுமக்களை வாளால் தாக்கிய 36 வயது நபரை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த நபரின் வெறிச் செயலால் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
லண்டனின் வடகிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் திடீரென புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டி வந்திருந்த பெரிய வாளால் அந்த வீட்டில் வசித்தவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதாக போலிஸ் கன்றோல் ரூமிற்கு தகவல் வந்திருந்தது. இதனையடுத்து பாதுகப்பு படைகள், மற்றும் முதலுதவி ஆம்புலன்சுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர் போலிஸ்.
சம்பவ இடத்தில், கையில் வாளுடன் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த 36 வயது நபரை போலிஸார் பிடிக்க முயன்ற பொழுது, அந்த நபர் போலிஸார் மேல் தாக்குதல் நடத்தினார், இதில் போலிஸார் சிலர் காயமடைந்தனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின் அந்த மர்ம நபரை சுர்றி வளைத்து கைது செய்த போலிஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Police and emergency services are in Hainault at a serious incident in which a man with a sword has been arrested.
Read and share our latest update below.
We do not believe there is any ongoing threat to the wider community - this incident does not appear to be terror-related. pic.twitter.com/M2ljxeBu32
இந்த பரபரப்பு சம்பவத்தால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு சிறிது நேரம் மக்களிடம் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆயினும் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என தெரிவித்துள்ளார் கிரேட்டர் லண்டன் நகர டெப்டி அஸிஸ்டண்ட் கமிஷ்னர் அடே அடேல்கன்.