Friday 8th of August 2025 - 05:37:47 AM
போலி மருத்துவர்களை உருவாக்கும் நீட் தேர்வு - சீமான் சீற்றம்.
போலி மருத்துவர்களை உருவாக்கும் நீட் தேர்வு - சீமான் சீற்றம்.
எல்லாளன் / 07 மே 2024

சென்னையில் இன்று(மே 7 2024) செய்தியாளர்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படம் தொடர்பான அந்த செய்தியாள்ர் சந்திப்பில், சமீபத்திய இளையராஜா - வைரமுத்து சர்ச்சையான இசையா - மொழியா என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், "பாடலா, இசையா எனக்கேட்டால் இரண்டும் முக்கியம் தான். மொழி உடல்; இசை உயிர். இரண்டையும் பிரிக்கக்கூடாது. இளையராஜா அவரது உரிமையைதான் கேட்கிறார். மற்றவர்களுக்கு உரிமையை தரக் கூடாது என அவர் கூறவில்லை. இளையராஜா - வைரமுத்து பிரச்னை தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைதான். படத்தை ஒருமுறை வாங்கியவர்கள் அந்த உரிமத்தை வாழ்நாள் முழுவது வைத்துக்கொள்வது சரியானது அல்ல." என கூறினார்.

நீட் தேர்வி பற்றிய கேள்விக்கு, "நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது. இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்க தனியார் நிறுவனம் எதற்கு?" என செய்தியாளார்களிடம் கேள்வியெழுப்பினார் சீமான். 

தொடர்ந்து பேசிய சீமான், "நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது. அதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம். இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்க தனியார் நிறுவனம் எதற்கு? நீட் தேர்வை நடத்த இந்தியாவில் நிறுவனங்கள் இல்லையா? ஏன் அமெரிக்க நிறுவனம் நீட் தேர்வு நடத்த வேண்டும்? வட இந்தியாவில் நீட் தேர்வு எழுத வருபவர்களிடம் காதணி, மூக்குத்தியை அகற்றச்சொல்வதில்லை. ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களின் காதணி போன்றவற்றை அகற்றச்சொல்கின்றனர்."  என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"சின்ன மூக்குத்தியில் கூட 'பிட்' அடிக்க வாய்ப்பு உண்டு என சொல்லி அவற்றை கழற்ற சொல்கிறார்கள்; ஆனால் அவ்வளவு பெரிய ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏமாற்று வேலைகள் செய்ய முடியாது எனவும் அவர்களே சொல்கின்றனர்." என சொல்லி தனது ட்ரேட் மார்க் சிரிப்புடன் விடை பெற்றார் சீமான்.

சொல்லுங்க தம்பிகளா, அண்ணன் சொல்வது சரியா?

டிரண்டிங்
அமெரிக்காவின் Bennington Triangle 80 ஆண்டுகளாக தீர்க்கப்படாத திகில் மர்மம்
மர்மங்கள் / 18 நவம்பர் 2024
அமெரிக்காவின் Bennington Triangle 80 ஆண்டுகளாக தீர்க்கப்படாத திகில் மர்மம்

பலர் மனதில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது. இப்பகுதி என்ன சொல்கிறது? அதன் மர்மம் என்ன? எதனால் இ

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி