ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மீறி, யாருக்கும் தெரியாமல் இருட்டுகளிலும் சந்து பொந்துகளிலும் சில்மிஷ சேட்டைகள் செய்யவே "அச்சச்சோ! இது பெரிய தப்பாச்சே!!!" என நம்மூர் மக்கள் பயந்து நடுங்கின்றனர். ஆனால், இது எல்லாம் ஒரு மேட்டரா ரேஞ்சில், பாரினில் பல பலான மேட்டர்களை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்கிறார்கள் அந்த ஊர் மக்கள். அப்படி ஒரு சில்மிஷ சேட்டைதான் இது.
கரீபியன் கடலில் உள்ள நாடு ஜமைக்கா. நமக்கு எளிதில் புரியும் படி சொல்ல வேண்டுமென்றால், வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் ஒன்றுதான் ஜமைக்கா. உலகில் மிகப் பிரபலமான சுற்றுலா தீவுகளில் கரீபியனும் ஒன்று. இந்த தீவில்தான் விநோதமாக ஒரு திருமணத்தை நடத்தியுள்ளனர் ஹெடோனிசம் ரிசார்ட் என்ற ஹோட்டல் நிர்வாகத்தினர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனாடா, பிரான்ஸ் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 29 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் ஹெடோனிசம் ரிசார்ட்டினர்.
"அடடா! நல்ல விஷயமாச்சே... நாம்மூரில் நடக்காத இலவச திருமணமங்களா?" என நீங்கள் கடந்து போனால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. பொறுங்கள் திருமணத்தை விட அது நடந்த விதம்தான் 'அச்சச்சோ... பப்பி ஷேம்!!' வகையறா. ஆம், அந்த 29 ஜோடிகளும் திருமண நிகழ்ச்சியில் நிர்வாணமாக கலந்து கொண்டனர். அதோடு முடிச்சாங்களா? இல்லை, திருமணத்திற்கு வாழ்த்த வந்திருந்த விருந்தினர்கள் உறவினர்களும் அதே 'பப்பி ஷேம்' ஸ்டைலில் அம்மணக்கட்டையாக வந்து மணமக்களை ஆசீர்வாதம் செய்துள்ளனர்.
இந்த கண்ணியம் மிகு கல்யாணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தவர், புளோரிடா யுனிவர்சல் லைஃப் சர்ச்சை சேர்ந்த ரெவரெண்ட் ஃபிராங்க் என்ற பாதிரியார்.
முதன் முதலில் 2001-ம் ஆண்டு 8 ஜோடிகளுக்கு இந்த 'பப்பி ஷேம்' கல்யாணத்தை செய்து வைத்த ஹெடோனிசம் ரிசார்ட்டினர், அதற்கடுத்தடுத்த வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆகி, 2003-ம் ஆண்டு அதிகபட்ச அட்ராசிட்டியாக 29 'பப்பி ஷேம்' கப்புள்களுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.
21 வருடங்களுக்கு முன் நடந்த இந்த 'பப்பி ஷேம்' சம்பவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வரலான நிலையில், அந்த சம்பவம்(!) பற்றிய தகவல்களும் நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
ஜமைக்கா தீவின் ரன் அவே என்ற இடத்தில் உள்ளது ஹெடோனிசம் ரிசார்ட். இந்த திருமணம் நடந்த இடம் பற்றிய தகவல் கிடைத்ததும் உள்ளூர் மக்களிடம் ஹெடோனிசம் ரிசார்ட்டிற்கு பெரும் எதிர்ப்பு கிளம்புயுள்ளது.
இதைப் பற்றியெல்லாம் சிறிதும் சட்டை செய்யாத ஹெடோனிசம் ரிசார்ட் நிர்வாகம், "எங்கள் ரிசார்ட் விருந்தினர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் மகிழ்ச்சிக்காக இதை செய்தோம். எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தான்" என பல்லிளித்ததோடு நிற்காமல், "கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது" என ஒரு டைப்பான தத்துவத்தை சொல்லி கண்ணடிக்கிறது.
"என்னமோ போங்கடா... வாழுறீங்க..." என கதறும் நைண்டீஸ் கிட்ஸ்கள்தான் பாவம்.