சேலம் ஸ்டீல் ப்ளாண்ட் (இரும்பாலை) பகுதி ஓம் சக்தி நகரில் கணவன் - மனைவி இருவரும் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கிடைத்துள்ள ஆரம்பக் கட்ட தகவல்கள்.
சேலம் ஸ்டீல் ப்ளாண்ட் (இரும்பாலை) பகுதியை சேர்ந்த ஓம் சக்தி நகரில் வசித்து வந்தவர் நாச்சிமுத்து. 75 வயதாகும் நாச்சிமுத்து மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நாச்சிமுத்து தன்னுடைய 65 வயது மனைவி ஜெகதாம்பாளுடன் ஓம் சக்தி நகரில் தனியாக வசித்து வந்தார்.
இன்று (மே 9-ம் திகதி 2024). அதிகாலை முதலே நாச்சிமுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதை கவனித்த அப்பம்பக்கத்தினர் ஸ்டீல் ப்ளாண்ட் போலிசிற்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த ஸ்டீல் ப்ளாண்ட் போலிசார் ஓம் சக்தி நகருக்கு விரைந்து, நாச்சிமுத்துவின் வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.
வீட்டிற்குள் நாச்சிமுத்துவும் அவரது மனைவி ஜெகதாம்பாளும் அழுகிய நிலையில் சடலமாக இறந்து கிடந்துள்ளனர்.
ஆரம்ப கட்ட போலிஸ் விசாரணையில், கணவன் - மனைவி இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என சதேகம் எழுந்துள்ளது. இந்த மரண சம்பவ குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்டீல் ப்ளாண்ட் போலிசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாச்சிமுத்து - ஜெகதாம்பாள் தம்பதியின் உறவினர்கள் மற்றும் வாரிசுகள் குறித்தும், தம்பதிகளின் மரணத்தின் பின்னணி காரணம் குறித்தும் ஸ்டீல் ப்ளாண்ட் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
வயோதிக காலத்தில் கணவன் - மனைவி இருவரும் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் சேலம் ஸ்டீல் ப்ளாண்ட் பகுதியில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.