Monday 23rd of December 2024 - 03:16:43 PM
உசார் மக்களே! அடுத்தடுத்து ஆன்லைன் மோசடிகள். சென்னையில் தொடரும் அதிரடி கைதுகள்.
உசார் மக்களே! அடுத்தடுத்து ஆன்லைன் மோசடிகள். சென்னையில் தொடரும் அதிரடி கைதுகள்.
Rajamani / 09 மே 2024

ஆன்லைனில் கொடுக்கப்படும் டாஸ்க்களை முடித்தால் பணம் கொடுக்கப்படும் என்ற ஆசை வார்த்தைகள் கூறி பல லட்சங்கள் மோசடி செய்த கும்பலை சென்னையில் சைபர் க்ரைம் போலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் அருண். இவரது செல்போனிற்கு வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய ஆன்லைன் வேலை இருப்பதாகவும், வேலை செய்ய விரும்புவோர் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என கூறி ஒரு லிங்க் எஸ்.எம்.எஸ் மூலம் வந்துள்ளது.

இளைஞர் அருண்குமார் அந்த எஸ்.எம்.எஸ் லிங்கை க்ளிக் செய்து, அதில் கேட்கப்பட்டிருந்த விவரங்களை கொடுத்து, அந்த ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். அருண்குமாரின் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட அந்த எஸ்.எம்.எஸ் திருட்டு கும்பல் அருண்குமாரின் செல்போனை தொடர்பு கொண்டு, தாங்கள் ஒரு லிங்க் அனுப்புவதாகவும் அந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்களை (வேலைகள்) முடித்தால், அந்த டாஸ்க்குகளுக்கு ஏற்றபடி பணம் கொடுக்கப்படும் என சொல்லியுள்னர். அருண்குமாரும் சரி என ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

சொன்னபடியே அந்த திருட்டு கும்பல் அருண்குமாரின் செல்போனுக்கு ஒரு லிங்கை அனுப்ப, அருண்குமாரும் மாங்கு மாங்கென நேரம் செலவழித்து அந்த லிங்கில் கொடுக்கப்பட்டிருந்த டாஸ்களை முடித்திருக்கிறார்.

டாஸ்க்களை முடித்த பின் அந்த டாஸ்க்குகளுக்கான சம்பளத்தை பெற அந்த மோசடி கும்பலை தொடர்பு கொண்டுள்ளார் அருண்குமார். செய்த டாஸ்க்குகளுக்கு பணம் கொடுத்த அந்த கும்பல், மேலும் டாஸ்க்குகள் வேண்டுமென்றால் செக்யூரிட்டி டெப்பாஸிட் கட்ட வேண்டும் என்றும், டாஸ்க்குகள் முடிக்கப்பட்ட பின் இரண்டு மடங்காக டெபாஸிட் பணம் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

அந்த மோசடி கும்பலின் வார்த்தைகளை நம்பிய அருண்குமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கட்டி ஆன்லைன் டாஸ்க்குகளை வாங்கியுள்ளார். மொத்த டாஸ்க்குகளையும் முடித்து அனுப்பிய பின், அவற்றிற்கான சம்பளத்தையும் தனது டெபாஸிட் தொகையையும் பெற அந்த மோசடி கும்பலை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார் அருண்குமார்.

ஆனால், அந்த மோசடி கும்பல் அருண்குமாருக்கு பதில் அளிக்காமல், அருண்குமாரின் செல்போன் எண்ணை ப்ளாக் செய்துள்ளனர். பல கட்ட முயற்சிகளுக்கு பின்னும் அந்த மோசடி கும்பலை தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கவே, தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார் அருண்குமார்.

தான் ஏமாற்றப்பட்டு தன்னுடைய பணம் மோசடி செய்யப்பட்டு விட்டது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அருண்குமார்.

அருண்குமாரின் புகாரை பதிவு செய்த போலிசார் விசாரணையில் இறங்கினர்.

அருண்குமார் டாஸ்க்குகளை பெற செக்யூரிட்டி டெபாசிட் பணம் செலுத்திய வங்கி கணக்கின் எண்ணை வைத்து அந்த வங்கி கணக்கின் முகவரியை கண்டுபிடித்தனர் போலிஸ். அந்த முகவரியை அடிப்படையாக வைத்து, அருண்குமாரை ஏமாற்றி மோசடி செய்த மூன்று பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர் போலிஸ்.

செங்குன்றம் பகுதியை சேர்ந்த நல்லம்பட்டி தேஜா (22 வயது), அண்ணாநகர் சாந்தோம் காலனியை சேர்ந்த விஜய் (வயது 24), ஹைதராபாத்தை சேர்ந்த சரஸ்வதி (வயது 23). இந்த மூன்று பேரும் அருண்குமாரை ஏமாற்றி பணம் பறித்த தகவலை விசாரணையின் மூலம் கண்டுபிடித்தனர் போலிஸ்.

இந்த மூன்று பேர் கும்பல் வேறொரு கும்பலிடம் கமிஷனுக்காக வேலை பார்ப்பதும், இந்த மோசடியில் மூளையாக செயல்படும் மெய்ன் மேசடி கும்பல் வட நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதே போன்று ஆன்லைனில் டாஸ்க்குகளை முடித்தால் பணம் கொடுக்கப்படும் என ஆசை வார்த்தை கூறி, கடந்த வாரம், பூந்தமல்லியை சேர்ந்த 64 வயது முத்து கிருஷ்ணன் என்பவரிடம் 1 கோடியே 52 லட்சம் மோசடி செய்ததாக பட்டாபிராமை சேர்ந்த மணிகண்டன் (33 வயது), சதாம் ஹுஸைன் (வயது 30), மற்றும் பெரம்புரை சேர்ந்த சண்முகவேல் (வயது 31) ஆகிய மூன்று பேறை ஆவடி போலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த கும்பல், எர்ணாவூரை சேர்ந்த டில்லிகுமாரி (வயது 33) என்ற பெண்ணை இதே ஆண்லை டாஸ்க் என்ற பெயரில் ஏமாற்றி 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி கும்பல்கள், டாஸ்க்குகள் என்ற பெயரில் கொடுக்கும் வேலைகள்: யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்வது, கமெண்ட் எழுதுவது, அந்த சேனல்களை சப்ஸ்க்ரைப் செய்வது, மேலும் வெப்ஸைட்டுகள் பற்றி ரிவீவ் எழுதுவது மற்றும் சோஷியல் மீடியா பக்கங்களை லைக் ஷேர் செய்வது போன்ற எளிமையான வேலைகள்.

எனவே, மக்கள் இது போன்ற ஆன்லைன் வேலைகள் கொடுப்பதாக சொன்னால், அவர்களுக்கு முன் பணம் கொடுக்காமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  
 

டிரண்டிங்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை. பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.
பொதுவானவை / 30 ஏப்ரல் 2024
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை. பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.

அருப்புக்கோட்டையில் ஒரு கல்லுாரியில் பணியாற்றி வந்தார் நிர்மலாதேவி. கணிதத் துறை பேராசிரியரான நிர்மலா

கணவன் - மனைவி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு. சேலத்தில் மர்ம மரணம்
பொதுவானவை / 09 மே 2024
கணவன் - மனைவி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு. சேலத்தில் மர்ம மரணம்

தகவல் அறிந்த ஸ்டீல் ப்ளாண்ட் போலிசார் ஓம் சக்தி நகருக்கு விரைந்து, நாச்சிமுத்துவின் வீட்டின் கதவை தி

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி