Monday 23rd of December 2024 - 06:15:55 PM
ரஜினி ரசிகரின் உயிரை பறித்த கடன் செயலி (Loan App) - வட்டியுடன் பணத்தை செலுத்திய பின்னும் நடந்த கொடூரம்.
ரஜினி ரசிகரின் உயிரை பறித்த கடன் செயலி (Loan App) - வட்டியுடன் பணத்தை செலுத்திய பின்னும் நடந்த கொடூரம்.
Rajamani / 10 மே 2024

கடன்  செயலி (Loan App) மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, பின் அந்த கடனை வட்டியுடன் முழுதும் செலுத்திய பின்னும், வட்டி கேட்டு டார்ச்சர் செய்ததுடன், கடன் பெற்றவரின் புகைக்கபடத்தை ஆபாசமாக மார்ஃப்பிங் செய்து அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி கேவலமாக சித்தரித்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துள்ளார்.

சென்னை. புதுப்பேட்டை, நாகப்பன் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (33 வயது). இவர் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை, "நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என தனது செல்போனில் வாட்ஸப் - ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் கோபிநாத். கோபிநாத்தின் வாட்ஸப் ஸ்டேட்டஸை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் பலரும், கோபிநாத்தின் செல்போனை தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், யாருடைய அழைப்பையும் கோபிநாத் எடுக்கவில்லை. என்னெ செய்வதென தெரியாமல் தவித்த நண்பர்களில் சிலர் கோபிநாத்தின் தந்தை மணியை தொடர்பு கொண்டு கோபிநாத்தின் வாட்ஸப் - ஸ்டேட்டஸ் பற்றி தகவல் சொன்னார்கள்.

அதிர்ச்சியடைந்த மணி, மகன் கோபிநாத் தங்கியிருந்த அறைக்கு விரைந்தார். அதற்குள், தகவல் அறிந்த கோபிநாத்தின் நண்பர்கள் சிலரும் அங்கு வந்து விட்டிருந்தனர். 

கோபிநாத்தின் அறை உள்பக்கமாக தாளிடப்பட்டிருக்க, பயத்துடன் அனைவரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே, கோபிநாத் தூக்கில் தொங்கிய நிலையில் இறன்டு போயிருந்தார். அங்கிருந்தவர்கள் எழும்பூர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழும்பூர் போலிஸ், கோபிநாத்தின் உடலை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபிநாத்தின் திடீர் மர்ம தற்கொலைக்கு காரணம் என்ன என போலிசார் விசாரணை செய்தனர். 

சில மாதங்களுக்கு முன் "குயிக் கேஷ்" என்ற கடன் செயலி (Loan App) மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் செயலி நிறுவனம் சொல்லியிருந்த தவணைகளில் தவறாமல் வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்டி, தனது கடன் தொகையை மொத்தமாக திருப்பி செலுத்தி முடித்திருக்கிறார் கோபிநாத். ஆனாலும், "குயிக் கேஷ்" கடன் செயலி நிறுவனத்தினர் கோபிநாத்திற்கு போன் செய்து மேலும் வட்டி செலுத்த வேண்டும் என சொல்லி டார்ச்சர் செய்துள்ளனர்.

தான் முழு கடன் தொகையையும் வட்டியுடன் செலுத்தி விட்டதாக கோபிநாத் தெரிவித்த பின்னரும், "குயிக் கேஷ்: கடன் செயலி நிறுவனத்தினர் தொடர்ந்து கோபிநாத்திற்கு போன் செய்து மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணியாத கோபிநாத்தின் புகைப்படத்தை (கோபிநாத் கடன் பெற்ற பொழுது கொடுத்த புகைப்படம்) ஆபாசமாக சித்தரித்து கோபிநாத்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸாப் மற்றும் மெஸஞ்சர் போன்ற செயலிகள் (Apps) மூலம் அனுப்பி, கோபிநாத்தை அவமானப் படுத்தியுள்ளனர். இதனால் மனம் உடைந்து போன கோபிநாத் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

33 வயதாகும் கோபிநாத் தீவிர ரஜினி ரசிகராவார். கோபிநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிகாந்தின் பாடல்களுக்கு ரஜினிகாந்தை போலவே ந்டனமாடி பதிவிடுவது வழக்கம். ரஜினிகாந்த் போல் அச்சு அசலாக நடனாமாடும் கோபிநாத்திற்கு அவரது ஏரியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள்.

கோபிநாத்தின் உயிரை பறித்த திருட்டு கடன் செயலி நிறுவனத்தை பற்றி போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கடன் செயலிகள் மூலம் நடக்கும் மோசடிகள் பற்றி தமிழக சைபர் க்ரைம் போலிசார் கூறியுள்ளதாவது: பெரும்பாலான கடன் செயலிகள் சீனர்களால் உருவாக்கப்பட்டு "கூகுள் ப்ளே ஸ்டோர்" மூலம் இந்திய மக்களிடம் பரப்பப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனாவை சேர்ந்த ஜியா யமாவ் (38 வயது), யுவான் லூன் (28 வயது) உட்பட நான்கு பேர் பெங்களூருவில் கைது செய்து செய்யப்பட்டனர். இவர்களுடைய தலைவனான சீனாவை சேர்ந்த ஹாங் என்பவன் சிங்கப்பூரில் பதுங்கியிருந்தான். தனது கூட்டாளிகளின் கைது பற்றிய தகவல் அறிந்த ஹாங் தலைமறைவாகி விட்டான்.

இந்த மோசடி கடன் செயலிகள் மூலம் வசூலிக்கப்படும் பணம் மொத்தமும் சீனாவிற்கு முறைகேடாக அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த கடன் செயலிகளின் பின்னணியில் மிகப் பெரிய நிழலுலக நெட்வொர்க் இயங்கி வருகின்றது. அந்த நெட்வொர்க் பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றோம். விரைவில் சரியான முடிவுகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர் தமிழக சைபர் க்ரைம் போலிசார்

டிரண்டிங்
tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் படுகொலை; மாணவர்களுக்குள் நடந்த மோதலில் சோகம்.
உலகம் / 07 மே 2024
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் படுகொலை; மாணவர்களுக்குள் நடந்த மோதலில் சோகம்.

நவ்ஜத் சிங் சந்து நண்பரின் வீட்டிற்கு சென்ற சமயம், அங்கிருந்த நண்பர்களுக்குள் மீண்டும் பிரச்சினை எழு

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி