அசால்ட்டாக 100 டிகிரியை தாண்டி, அடித்து துவைக்கும் கோடை வெயிலால் மக்கள் வெளியில் சென்று வேலைகளை பார்ப்பதற்கு பயந்து டரியலாகி வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்து, மொபைல் டேட்டாக்களை காலி செய்து கொண்டிருக்கிறார்கள். நிலமை இப்படியே தொடர்ந்து மக்கள் வேலைக்கு செல்லாமக் வீட்டிலேயே அடைந்து கிடந்தால், அடுத்த மாதம் மொபைல் ரீசார்ச்ஜிற்கு கூட பணம் இல்லாமல் பரிதவிவிக்கும் நிலமை வந்து விடும். இந்த கவலையை விரட்டும் விதமாக பிரபல சோனி நிறுவனம் கூலான மேட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆம், வெயிலில் வெளியில் செல்லும் மக்களை ஜில்லென வைத்திருக்க, சிறியவகை நடமாடும் பாக்கெட் ஏசி-யை அறிமுகப்படுத்தியுள்ளது சோனி நிறுவனம்.
2019ஆம் ஆண்டு ரியான்(Reon) பாக்கெட் என்ற பெயரில் சிறிய செல்போன் வடிவிலான ஏசியை தயாரித்து சந்தைப்படுத்தியது சோனி நிறுவனம், தற்போது ரியான் ஏசி-யின் அடுத்தடுத வெர்ஷன்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது ரியான் பாக்கெட் 5(Reon Pocket 5) என்ற பெயரில் புதிய லேட்டஸ்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது.
பழைய வெர்ஷன்களுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய ரியான் பாக்கெட் 5, இரட்டை சென்சார்களுடன் அதிக குளிரூட்டும் திறனுடன், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உள்ளதாகவும், இந்த கொடூர கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக, தினசரி பயன்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஏசியை கொளுத்தும் கோடை வெயிலில் மட்டுமல்லாது, ஜிலு ஜிலு குளிர்காலத்திலும், கதகதப்பான வெதரில் நம்மை வைத்துக் கொள்ள பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளது சோனி நிறுவனம். ரியான் பாக்கெட் 5 ஏசி-யை கன்றோல் செய்ய, செல்போன் செயலி(Mobile App) ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது சோனி நிறுவனம். செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் ஏசி-யை கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது சோனி நிறுவனம். புளூடூத் வழியாகவும் ரியான் பாக்கெட் 5 ஏசி-யை கட்டுப்படுத்தலாம் என்றும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த ஏசி-யை சோனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே ஆர்டர் செய்து வாங்க முடியும். இதன் விலை இந்திய ரூபாயில், 20 ஆயிரம் மட்டுமே.