Monday 23rd of December 2024 - 06:29:41 PM
அன்புடன் ஆவிகள் - உலகின் முன்னணி மனோத்தத்துவ மருத்துவர்களின் நிஜ ஆவி அனுபவம் - அத்தியாயம் -1
அன்புடன் ஆவிகள் - உலகின் முன்னணி மனோத்தத்துவ மருத்துவர்களின் நிஜ ஆவி அனுபவம் - அத்தியாயம் -1

உலக புகழ் பெற்ற நரம்பியல் மருத்துவர் டாக்டர் கென்னத். மருத்துவர் என்பதை விட மருத்துவ மேதை என்றே சொல்ல வேண்டும். இன்றைய பிரபல நரம்பியல் மருத்துவர்களில் பெரும்பாலானவர்களின் ஆதர்ஷ நாயகன், 'காட்பாதர்'. அவர் எழுதி வைத்து விட்டு சென்ற பல மனோதத்துவ புத்தகங்கள் இன்றைய மனோத்தத்துவ மருத்துவர்களுக்கு பெரும் வழிகாட்டியாக உள்ளன. மனோதத்துவ புத்தகங்களை எழுதியவருக்கு ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியில் நாட்டம் ஏற்பட்டதை ஆச்சர்யமாக கருத முடியாது.

ஆம், டாக்டர் கென்னத் ஆவிகள் பற்றி அறிந்து கொள்வதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும், ஆவிகள் பற்றி பல ஆராய்ச்சிகளை செய்தார்.

டாக்டர் கென்னத் வாக்கரின் மிக நெருங்கிய நண்பர் டாக்டர் ரோவல். மிகுந்த பகுத்தறிவாளரான ரோவல், ஆவிகள், பில்லி, சூனியம், என எந்த விதமான மூட நம்பிக்கைகளையும் எள்ளி நகையாடக்கூடியவர். மத வழிபாடுகளிலேயே நம்பிக்கையற்றவர். 

லண்டனில் மிகப்பெரிய மருத்துவமனையான "செயிண்ட் ஃப்ரையாஸ்" மருத்துவமனையில் பணியாற்றி வந்தார் ரோவல். ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியில் இருந்த டாக்டர் கென்னத்திடம் தனக்கு நடந்த அந்த பயங்கரமான சம்பவத்தை விளக்கமாக சொன்னார் ரோவல்.

மதியம் 12 மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ரோவல் தன் வழக்கமான நோயாளிகள் விஸிட்டை முடித்து விட்டு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு அருகில் இருந்த மெடிக்கல் காலேஜிற்கு நடந்து சென்றார்.

மருத்துவமனை மற்றும் மெடிக்கல் காலேஜ் இரண்டையும் இணைக்கும் பாலம் போன்ற வராண்டாவில் நடந்து சென்ற ரோவலுக்கு எதிரில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நர்ஸ் நடந்து வந்தா. வெளிர் நீல நிற புள்ளிகள் போட்ட மருத்துவமனை யூனிபார்ம் அணிந்திருந்தார் அந்த நர்ஸ்.

செயிண்ட் ஃப்ரையாஸ் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாக்டர் ரோவல், அந்த நர்ஸை அதுவரை அந்த மருத்துவானையில் ஒருமுறை கூட சந்தித்ததில்லை. நடந்தபடி அந்த நர்ஸை நெருங்கிய டாக்டர் ரோவல் மரியாதை நிமித்தமாக ஒரு வணக்கத்தை போட்டார். அந்த நர்ஸும் மெல்ல தலையசைத்து  டாக்டர் ரோவலுக்கு மரியாதை செலுத்தி விட்டு நகர்ந்து சென்றார்.

அந்த நர்ஸ் டாக்டர் ரோவலை கடந்து சென்ற சில நொடிகளில்தான் டாக்டர் ரோவலுக்கு ஞாபகம் வந்தது. நர்ஸின் யூனிபார்மில் கைப்பகுதி பழைய மாடலாக இருந்தது. அட இந்த பழைய மாடலையா இந்த நர்ஸ் அணிந்துள்ளார் என உறுதிப்படுத்த வேகமாக திரும்பி நர்ஸை பார்த்த டாக்டர் ரோவலுக்கு அதிர்ச்சி.

அந்த நர்ஸை காணவில்லை. அந்த நர்ஸ் டாக்டரை தாண்ட் சென்று சில விநாடிகள் கூட இருக்காது. அது நீண்ட அகலமான வராண்டா, சில நொடிகளில் எந்த பக்கமும் திரும்பிச் செல்ல வழிகள் இல்லை. வராண்டாவின் இரண்டு பக்கமும் வேலிகளால் அடைக்கப்பட்ட தோட்டங்களே இருந்தன. டாக்டரின் பார்வையில் இருந்து மறைய வேண்டுமென்றால் அந்த நர்ஸ் வராண்டாவின் அடுத்த முனைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் வராண்டாவின் அடுத்த முனைக்கு செல்ல குறைந்தபட்சம் சில நிமிடங்களாவது ஆகும்.

அதிர்ச்சியுடன் டாக்டர் ரோவல் வராண்டா முழுவதும் தேடிப் பார்த்தார். ஆனால், அவரால் அந்த நர்ஸை கண்டுபிடிக்க முடியவில்லை. நேரடியாக சொன்னால் அந்த நர்ஸ் மாயமாக மறைந்து விட்டார்.

டாக்டர் ரோவல் பயப்படவில்லை மாறாக ஆச்சர்யப்பட்டார். என்ன நடந்திருக்கும்? எப்படி இது சாத்தியம்? என தனக்குள் கேள்விகளை எழுப்பிக் கொண்டே, மெடிக்கல் காலேஜில் மாணவர்கள் காத்திருப்பார்கள் என்ற அவசரத்தில் வகுப்பறைக்கு சென்று விட்டார்.

மாணவர்களுக்கு பாடம் முடித்த பின், மதிய உணவை மெடிக்கல் காலேஜிலேயே சாப்பிட்டு விட்டு மீண்டும் நோயாளிகளை பார்வையிட மருத்துவமனைக்கு வந்தார் டாக்டர் ரோவல். வரும் வழியில் அந்த வராண்டா முழுவதும் டாக்டர் ரோவலின் கண்கள் அந்த 50 வயது நர்ஸ் தென்படுகிறாரா என தேடிக் கொண்டே வந்தது. ஆனால், பாவம் ரோவல். அவரது கண்களுக்கு அந்த நர்ஸ் புலப்படவேயில்லை.

தனது அறைக்கு வந்த டாக்டர், ட்யூட்டியில் இருந்த சீனியர் நர்ஸ்கள் அனைவரையும் தன்னுடைய அறைக்கு அழைத்தார். வந்த தன் முன் நின்ற நர்ஸிகளில் அந்த 50 வயது நர்ஸ் இருக்கிறார என தேடிப்பார்த்தார். இல்லை.

உடனே அந்த சீனியர் நர்ஸ்களிடம், தான் வராண்டாவில் சந்த்தித்த நர்ஸின் தோற்றம் பற்றி விளக்கமாக கூறினார். "கிட்டத்தட்ட 50 வயது. சர்று நீளமான மூக்கு. பழைய ஸ்டைல் யூனிபார்ம் அணிந்திருப்பார்..." டாக்டர் ரோவல் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கு கூடியிருந்த நர்ஸ்கள் முகத்தில் மெல்ல இறுக்கம் பரவ தொடங்கியது. நர்ஸ்கள் ஒருவித பதட்டத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, ஏதோ மர்மம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட டாக்டர் ரோவல் தன் வர்ணனையை நிறுத்தி விட்டு, தன் முன் நின்று கொண்டிருந்த நர்ஸ்களை உற்று பார்த்தார்.

"எட்டாம் நம்பர் வார்டு சிஸ்டரை பார்த்தீர்களா டாக்டர்?" என கேட்டார் உதவி தலைமை நர்ஸ்.

குழப்பத்துடன் "என்ன சொல்கிறீர்கள்?" என கேட்டார் டாக்டர் ரோவல்.

ஒவ்வொரு நர்ஸாக தங்கள் அனுபவங்களை சொல்ல தொடங்கினார்கள். சில நர்ஸ்கள் 'அந்த உருவத்தை' பார்த்ததாக சொன்னார்கள்.  எட்டாம் நம்பர் வார்டிற்கு ட்யூட்டிக்கு செல்லவே பல நர்ஸ்கள் பயப்படுகிறார்கள். இரவு பகல் பாராமல், கூட்டம் இல்லையென்றால் எல்லா நேரத்திலும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்கிறது 'அந்த உருவம்'. நாங்கள் யாரும் தனியாக அந்த பக்கம் செல்வதில்லை. என புலம்பி தள்ளினார்கள் மொத்த நர்ஸ்களும்.

நர்ஸ்களின் பதிலால் சற்று குழம்பினாலும் திருப்தியடையாத டாக்டர் ரோவல் தன் சக சீனியர் மருத்துவர்களிடம் 'அந்த உருவத்தை' பற்றி விசார்த்தார். சிலர் 'அந்த உருவத்தை' பார்த்ததாக சொன்னார்கள்.

சரி யார் 'அந்த உருவம்' என்று அறியும் ஆர்வத்தில் செயிண்ட் ஃப்ரையாஸ் மருத்துவமனையில் பல வருடங்கள் பணியாற்றி இப்பொழுது ஓய்வு பெற்றுவிட்ட டாக்டர் ப்ராங்க் என்பவரின் வீட்டிற்கே நேரில் சென்று 'அந்த உருவம்' பற்றி விளக்கம் கேட்டார் டாக்டர் ரோவல்.   

சிறிய பதட்டத்துடனேயே டாக்டர் ப்ராங்க் சொன்னார். "ஆம் நானும் 'அந்த உருவத்தை' ஒருமுறை பார்த்தேன். மாலை 6 மணி சுமாருக்கு வராண்டாவில் தனியே நடந்து சென்று கொண்டிருந்த என்னை நோக்கி வேகமாக வந்த 'அந்த உருவம்' என் கண்ணெதிரே திடீரென மாயமாக மறைந்து போனது. அதே 50 வயது, சற்று நீளமான மூக்கு, பழைய ஸ்டைல் யூனிபார்ம். வராண்டாவில் பரவியிருந்த அந்த மாலை நேர வெயிலில் அந்த நர்ஸின் நிழல் கூட தரையில் தெளிவாக தெரிந்தது. ஆனால், திடீரென மறைந்த அந்த விநாடியை என்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது" சொல்லி முடித்து தன் முகத்தில் வழிந்த வியர்வை துளிகளை துடைத்துக் கொண்டார் டாக்டர் ப்ராங்க்.

நண்பர் டாக்டர் கென்னத்திடம் தனக்கு நடந்த சம்பவத்தை விளக்கி முடித்த ரோவலிடம். அந்த நர்ஸ் யார் என கேட்டார் கென்னத். கென்னத் விளக்கம் கேட்பார் என தெரிந்திருந்தாலும், 'அந்த உருவத்தின்' மேல் ஏற்பட்ட ஈர்ப்பால், அதைப் பற்றி முன்னரே விசாரித்து வைத்திருந்தார் டாக்டர் ரோவல்.

செயிண்ட் ஃப்ரையாஸ் மருத்துவமனையில் பல வருடங்களுக்கு முன் பணியாற்றிய அந்த  நர்ஸை எட்டாம் நம்பர் வார்டில் பணியில் இருந்த பொழுது டாக்டர் ஒருவர் நோயாளியை அந்த நர்ஸ் சரியாக கவனிக்கவில்லை என சொல்லி கடுமையாக திட்டிவிட, மனம் உடைந்த அந்த நர்ஸ் மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

டாக்டர் ரோவல் சொன்ன அந்த நிஜ சம்பவத்தை தனது புகழ்பெற்ற "The Unconcious Mind" என்ற புத்தகத்தில் "Apparations" என்ற அத்தியாயத்தில் விவரித்து எழுதியுள்ளார் டாக்டர் கென்னத் வாக்கர்.

இந்த நர்ஸ் ஆவி ஒரு சாம்பிள்தான். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல், ச்சும்மா முன்னும் பின்னும் நடந்து விளையாட்டு காட்டும் சாதுவான ஆவி. ஆனால், மனிதர்களை கர்ண கொடூரமாக டார்ச்சர் செய்து, சித்து விளையாட்டுகளால் சீரழித்து, கொஞ்சம் கொஞ்சமாக நரகத்தை காட்டிய நிஜ ஆவிகளின் வரலாறு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட கொடூர ஆவிகளின் நிஜ கதைகளை அடுத்தடுத்து தொடர்ந்து பார்ப்போம்.

- தொடரும் -
கதைகளின் தேவதை 

டாக்டர் கென்னத் வாக்கர்

The Unconscious Mind - புத்தகம்

டிரண்டிங்
பூமியின் கடைசி நாடு எது தெரியுமா? இங்கு 23 மணி நேரமும் பகல் தான்.
உலகம் / 13 நவம்பர் 2024
பூமியின் கடைசி நாடு எது தெரியுமா? இங்கு 23 மணி நேரமும் பகல் தான்.

ஹேவர்ஃபெஸ்ட் நகரில், சூரியன் 40 நிமிடங்கள் மட்டுமே மறைகிறது. எனவே, இது நள்ளிரவில் சூரியன் உதிக்கும்

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி