ஒரு நிமிஷம் கற்பனை பண்ணி பாருங்க லண்டன் நகரத்துல ஒரு பரபரப்பான சாலை, ஒரு ஆள் பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருக்கான். திடீர்னு ஒரு மனுஷன் அவனுக்கு பின்னாடி வந்து, கையில இருக்குற குடையால ஒரு சின்ன குத்து குத்துறான். “சாரி”னு சொல்லிட்டு அப்படியே ஓடி டாக்ஸில ஏறி போயிடுறான். அந்த ஆள் முதல்ல “என்னடா இது?”னு நினைச்சாலும், நாலு நாள்ல செத்து போயிடுறான். இது நம்ம ஊரு சினிமா கதை மாதிரி தெரியுதுல்ல? ஆனா இது உண்மையில 1978-ல நடந்துச்சு—அவர் பெயர் ஜார்ஜி மார்க்கோவ், ஒரு பல்கேரிய எழுத்தாளர். அவன கொன்னது சோவியத் யூனியனோட கேஜிபி உளவுத்துறை, ஒரு குடையில இருந்து விஷம் செலுத்தி! கொஞ்சம் ஆழமா பேசலாம் . யாரு இந்த ஜார்ஜி மார்க்கோவ்?
யாரு இந்த ஜார்ஜி மார்க்கோவ்?
ஜார்ஜி மார்க்கோவ் ஒரு பல்கேரிய எழுத்தாளர், பத்திரிகையாளர். 1929-ல பல்கேரியாவில் பிறந்தவர், அங்க கம்யூனிஸ்ட் ஆட்சியில நாவல்கள், நாடகங்கள் எழுதி பேமஸ் ஆனவன். ஆனா அவனுக்கு அந்த ஆட்சி பிடிக்கல ஏன்னா அது மக்களோட சுதந்திரத்த தட்டி பறிச்சுது. 1969-ல அவன் பல்கேரியாவ விட்டு ஓடி, லண்டன்ல குடிஏறினான் . அங்க பிபிசி-ல வேலை பாத்து, ரேடியோ மூலமா பல்கேரிய கம்யூனிஸ்ட் ஆட்சிய சாடினான். நம்ம ஊருல ஒரு ஆள் அரசியல்வாதிய சீண்டினா எப்படி ஆகுமோ, அப்படி தான் மார்க்கோவ் அவங்க நாட்டோட தலைவர் டோடர் ஜிவ்கோவ பேச்சால தாக்கினான். இது கேஜிபி-க்கு புடிக்கல ஏன்னா பல்கேரியா அப்போ சோவியத் யூனியனோட கூட்டாளி.
என்ன நடந்துச்சு?
1978 செப்டம்பர் 7-ம் தேதி, லண்டன் வாட்டர்லூ பாலத்துல மார்க்கோவ் பேருந்துக்காக காத்துகிட்டு இருந்தான். திடீர்னு அவன் தொடையில ஒரு சின்ன ஒரு குத்து விழுந்துச்சு. பின்னாடி திரும்பி பாத்தா, ஒரு ஆள் குடைய தரையில இருந்து எடுக்குறான். “சாரி”னு சொல்லிட்டு, அவன் டாக்ஸில ஏறி ஓடிட்டான். மார்க்கோவ் முதல்ல “என்னடா இது, பூச்சி கடிச்சிருக்குமோ?”னு நினைச்சான். ஆனா அவன் பிபிசி அலுவலகம் போனப்போ, தொடைல ஒரு சின்ன சிவப்பு பரு மாதிரி தெரிஞ்சுது, வலியும் குறையல. அன்னிக்கு ராத்திரி அவனுக்கு காய்ச்சல் வந்து, பேச முடியாம ஆயிடுச்சு. மறுநாள் ஆஸ்பத்திரில சேர்த்தாங்க—நாலு நாள்ல செத்து போயிட்டான்.
குடைல என்ன இருந்துச்சு?
அவனுக்கு பிரேத பரிசோதனை பண்ணப்போ தெரிஞ்சுது , அவன் தொடையில ஒரு சின்ன உலோக பெல்லட் (1.5 மி.மீ அளவு) இருந்துச்சுனு. அதுல ரெண்டு சின்ன துளைகள் அதுக்குள்ள “ரிசின்”னு ஒரு விஷம் இருந்திருக்கலாம்னு நினைக்கிறாங்க. ரிசின் ஒரு பயங்கர விஷம். கொஞ்சம் உள்ள போனாலே இதயம், கல்லீரல் எல்லாம் பாதிக்கும், மாற்று மருந்து இல்ல. அந்த குடை ஒரு சாதாரண குடை இல்ல, அதோட நுனியில ஒரு சின்ன Compressed Air Cylinder வச்சு, அந்த பெல்லட்ட குத்துர மாதிரி வடிவமைத்து இருந்தாங்க . இது கேஜிபி-யோட தொழில்நுட்பம் என்று சொல்றாங்க.
கேஜிபி ஏன் இத பண்ணுச்சு?
கேஜிபி சோவியத் யூனியனோட உளவு அமைப்பு பனிப்போர்க்காலத்துல அவங்களுக்கு எதிரியா பேசுறவங்கள சும்மா விட மாட்டாங்க. மார்க்கோவ் பல்கேரியாவுக்கு எதிரா பிபிசி, ரேடியோ ஃப்ரீ யூரோப்-ல பேசினத பல்கேரிய அரசு விரும்பல. கேஜிபி இதுக்கு ஒரு ஆள அனுப்புச்சு அவன் பேரு "ஃப்ரான்செஸ்கோ குல்லினோ"னு சந்தேகிக்கிறாங்க. “ஏஜென்ட் பிக்காடிலி”னு புனைபெயர் வச்சிருந்த இவன் ஒரு பல்கேரிய உளவாளி. அவன் லண்டனுக்கு வந்து, மார்க்கோவ பின்தொடர்ந்து, அந்த குடையால விஷ பெல்லட்ட செலுத்திட்டு ஓடிட்டான். அவன் அடுத்த நாளே ரோம் போயி, அங்க இருந்து தப்பிச்சு போயிட்டான். 1989-ல பல்கேரிய கம்யூனிஸ்ட் ஆட்சி விழுந்தப்போ, உள்துறை அமைச்சகத்துல இப்படி சில “ஸ்பெஷல் குடைகள்” கிடைச்சுதாம். ஆனா இவன் பிடிபடல 2021-ல அவன் இறந்து போனான்.
நம்ம பக்கத்துல இத பாத்தா, “அடேங்கப்பா, குடையில விஷமா?”னு ஆச்சரியப்படுவோம். நம்ம ஊரு புராண கதைகள்ல “விஷ அம்பு” மாதிரி, இது ஒரு “விஷ குடை”னு சொல்லலாம். சிலர் . கேஜிபி-யோட இந்த தொழில்நுட்பம் நம்ம ஊரு சினிமா வில்லன்களுக்கு கூட ஈடு குடுக்கும்!