கடந்த சில நாட்களாகா, ஞாயிற்று கிழமை (மே 5-ம் திகதி) நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் தான் பாத்-டப்பில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்களில் அவர் மேலாடையின்றி இருந்ததாகவும், பின் அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அழித்து விட்டார் என்ற தகவல்கள் பரவி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோஷியல் மீடியாக்களில் பெரும் பேசுபொருளாக உள்ளது சமந்தாவின் இன்ஸ்டாகிராம் குளியலறை போட்டோக்கள் பற்றிய பதிவுகள்.
சமந்தா தனது டாப்லெஸ் குளியல் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிரம் ஸ்டோரியில் இருந்து அழித்து விட்டாலும், அந்த இன்ஸ்டாகிராமின் ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் என சொல்லி ஒரு டாப்லெஸ் பாத்டப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
கடந்த ஞாயிற்று கிழமை (மே 5-ம் திகதி) நடிகை சமந்தா தான் நீராவிக் குளியல் எடுத்துக் கொண்டபொழுது எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, அந்த நீராவிக் குளியலால் தனது உடலில் ஏற்பட்ட நன்மைகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தில் நடிகை சமந்தா நீராவிக் குளியல் எடுத்துக் கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற டவல் அணிந்து தனது உடல் முழுதையும் மறைத்திருந்தார் சமந்தா.
ஆனால், சில ஷோஷியல் மீடியா விஷமிகள் நடிகை சமந்தாவின் அரை நிர்வாண குளியல் புகைப்படம் என்று பொய்யான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்த போலி புகைப்படங்கள் பரவுவதை கண்ட சமந்தாவின் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சமந்தாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
சமூகவலை தளங்களில் சமந்தா பெயரில் உலாவிக் கொண்டிருப்பவை போலியான புகைப்படங்கள். சமந்தா போன்ற சிறந்த நடிகையை கொச்சைப் படுத்தாதீர்கள். அவர் மேல் தொடர்ந்து கற்களை வீசுங்கள். ஆனால், அவர் ஏற்கனவஏ தன் மேல் எறியப்பட்ட கற்களை கொண்டு ஒரு மலையையே கட்டி முடித்து விட்டார்.
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சமந்தா. என, சமந்தாவின் ரசிகர்கள் சமந்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் நடிகை சமந்தா இது குறித்து எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் தனது ஷோஷியல் மீடியா பக்கத்தில்
"The real flex is simply allowing yourself to exist with no need to justify or prove yourself"
அதாவது, "உங்களை நியாயப்படுத்தி நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி" என குறிப்பிட்டு, தன் மேல் சுமத்தப்படும் போலி வதந்திகள் பற்றி தான் கவலை பட்டு, தன்னை நிரூபிக்க போராட வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெளிவாக சொல்லியுள்ளார்.