உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் கணவனை கட்டிலோடு சேர்த்து கட்டி விட்டு, கணவனின் கை, கால்களை கட்டி வைத்து கொடுமை செய்யும் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை அடித்து உதைத்து கொடுமை செய்த மனைவி கொடூரத்தின் உச்சமாக கணவனி அந்தரங்க உறுப்புகளில் சிக்ரெட்டால் சூடு வைத்துள்ளார். அந்த பெண்ணை தற்பொழுது போலிசார் கைது செய்துள்ளனர்.
உத்திர பிரதேசம் மாநிலம் ப்ஜ்னோர் பகுதியை சேர்ந்தவர் மனன் ஸைது. சமீபத்தில் மெஹர் ஜஹான் என்ற பெண்ணை திருமணம் செய்தார் மனன் ஸைதி. தம்பதிகள் இருவரும் தனிக்குடித்தன் நடத்தி வருகிறார்கள். கணவன் மனன் ஸைதியுடன் அடிக்கடி சண்டை போடும் மெஹர் ஜஹான், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் மனன் ஸைதியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
மனைவி மெஹர் ஜஹானின் கொடுமைகளை தாங்க முடியாத மனன் ஸைது லோக்கல் போலிஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலிசார் கணவன் மனைவியை சமாதானமாக வாழ சொல்லி அறிவுரை கூறி அனுப்புயுள்ளனர். தனது மனைவி மெஹர் ஜஹானின் சுய ரூபம் தெரியாமல் போலிசார் சமாதானம் செய்து வைத்து விட்டார்கள் என நினைத்த மனன் ஸைது, த்னது மனைவி மெஹர் ஜஹானின் ரியல் அந்நியன் அவதாரத்தை ஆதாரத்துடன் நிரூபித்தால்தான் போலிஸிற்கு புரியும் என முடிவு செய்து, தங்கள் வீட்டு படுக்கை அறையில் மனைவிக்கு தெரியாமல் செல்போன் கேமராவில் வீடியோ ரெக்கார்டிங்கை ஆன் செய்து மறைத்து வைத்து விட்டார்.
சம்பவத்தன்று போதை கலந்த பாலை கணவன் மனன் ஸைதுக்கு கொடுத்த மெஹர் ஜஹான், மனன் ஸைது ஆழ்ந்த போதை மயக்கத்தில் இருந்த பொழுது அவரது கை கால்களை கட்டிலில் கட்டி விட்டு, மனன் ஸைதை அடித்து துன்புறுத்த தொடங்கினார்.
மனன் ஸைது மேல் அமர்ந்து அவரது கழுத்தை நெரிப்பது, சிகரெட் புகைத்தபடி கத்தியால் மனன் ஸைதின் அந்தரங்க உறுப்பை சேதப்படுத்துவது, சிகரெட்டால் மனன் ஸைதின் அந்தரங்க உறுப்பில் சூடு வைப்பது என மெஹர் ஜஹானின் டார்ச்சர்கள் அப்படியே வீடியோவில் பதிவாகியுள்ளன.
மெஹர் ஜஹானின் கொடுமைகள் தாங்க முடியாமல் மனன் ஸைத் அலறி துடிக்க, அந்த அலறல் சத்தங்களை சட்டை செய்யாமல் தொடர்ந்து தனது டார்ச்சர்களை செய்கிறார் மெஹர் ஜஹான்.
எல்லாம் முடிந்த பின் மனன் ஸைத்தை விடுதலை செய்திருக்கிறார் மெஹர் ஜஹான். மெஹர் ஜஹான் இல்லாத நேரம் பார்த்து ஒளித்து வைத்த செல்போனில் பதிவாகியிருந்த மொத்த வீடியோ காட்களையும் லோக்கல் போலிசில் ஸ்டேஷனில் கொடுத்து கதறி அழுதுள்ளார் மனன் ஸைது.
வீடியோவை பார்த்து பதறிப் போன போலிசார், மனன் ஸைதின் புகாரை பெற்று பதிவு செய்து கொண்டு, அந்த புகார் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மெஹர் ஜஹானை கைது செய்து தொரந்து விசாரணை நடத்து வருகின்றனர்.
மெஹர் ஜஹானின் டார்ச்சர் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.