சிறைகள் என்றாலே கொடூரம்தான். அந்த கொடூரத்தை கோரமாக்கி, மரணத்தை விட கொடுமையான தண்டனையை கைதிகள் நித்தம் அனுபவித்து நரக வேதனையுடன் நிமிடங்களை நகர்த்தும் நிலமையை உருவாக்கியவர்கள் ஹிட்லரின் நாஜி படைகள். அதற்கு நிகரான ஒரு சிறையை அமெரிக்க அரசு ரகசியமாக வைத்திருக்கின்றது.
"மிதக்கும் சிறைச்சாலை" என பெயரிடப்பட்டுள்ள அந்த சிறைகள் கப்பல்களில் அமைக்கப்பட்டு கடலில் மிதந்தபடி கைதிகளுக்கு தாங்கள் எங்கு இருக்கிறோம் என தெரியாதபடி இயங்கி வருகின்றது.
அப்படிப்பட்ட மிதக்கும் சிறைகளில் மிக முக்கியமான சிறை, 'ஆஷ்லாண்ட்' அதாவது சாம்ப்ல தளம் என்ற கப்பலில் அமைக்கப்பட்டுள்ளது. 186 மீட்டர் நீளம் கொண்ட ஆஷ்லாண்ட் கப்பல் 16,000 டன் எடையை தாங்கக்கூடியது.
ஆஷ்லாண்ட் கப்பலில் ரகசியமாக கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி 500 அமெரிக்க கடற்படை வீரர்களும் பணி புரிகின்றனர். கடலில் மிதந்தபடி உலகில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கடற் பகுதிகளில் தொடர்ந்து பயணம் செய்யும் இந்த கப்பல், சில நேரங்களில், பல நாட்கள் ஒரே இடத்தில் நிலையாக நிற்கும்.
ஆனால், பாவம் உள்ளே உள்ள கைதிகளுக்கு அவர்கள் கடலில் மிதந்து கொண்டிருக்கிறார்களா கரையில் நின்று கொண்டிருக்கிறார்களா என எதுவுமே தெரியாமல், கிடைப்பதை சாப்பிட்டு, கொடுப்பதை தாங்கிக் கொண்டு வாழ்க்கையை நகர்த்த வேண்டியதுதான் அவர்களின் நிலமை.
2007ம் ஆண்டு காலப்பகுதியில், ஆப்பிரிக்க கடற்பரப்பில் கைதிகளுடன் மிதந்து கொண்டிருந்த 'ஆஷ்லாண்ட்' கப்பல் சோமாலியா, கென்யா, மற்றும் எத்தியோப்பிய நாட்டு கடற்படைகளால் ரகசிய தாக்குதலுக்குள்ளானது. ஆனால், அமெரிக்க கடற்படையின் பாதுகாப்பை அவர்களால் முறியடிக்க முடியவில்லை.
'ஆஷ்லேண்ட்' கப்பலை போலவே "பாட்டன்" மற்றும் "பெலெலியூ" போன்ற ராட்சச கடற்படை கப்பல்களிலும் அமெரிக்கா தனது ரகசிய மிதக்கும் சிறைகளை நடத்தி வருகின்றது.
குறைந்தபட்சம் 26,000 கைதிகள் அமெரிக்காவின் மிதக்கும் சிறைகளில் அடைபட்டு கிடப்பதாக தகவல்கள் சொல்லுகின்றன.
அமெரிக்க தாலிபன் என அழைக்கப்படும் ஜான் வாக்கர் லிந்த், அமெரிக்க போலிசால் கைது செய்யப்பட்டு 20 வருடங்கள் மிதக்கும் சிறையில் தண்டனை அனுபவித்து பின் 2022ம் ஆண்டு மே 23ம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
ஜான் வாக்கர் லிந்த்
அமெரிக்காவின் இந்த கொடூர மிதக்கும் சிறைகள் பற்றிய உண்மைகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வெளிக் கொண்டு வர வேண்டும் என பல மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.