"ஜாபர் சாதிக்கிற்கும் எனக்கும்தான் தொடர்பு, அவரின் குற்றங்கள் மற்றும் அதன் பின்னணிகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை சதேகப்படுங்கள். அது தவறு இல்லை. ஆனால், தீர்ப்பு எழுதாதீர்கள். அதற்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன." என தன் மேல் சுமத்தப்பட்டு வரும் வீண் குற்றச்சாட்டுகளுக்காக மனம் வருந்தி பேசியுள்ளார் தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவரான அமீர்.
தரமான திரைப்படங்களால் தமிழ் சினிமாவின் தரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்ற வெகு சில இயக்குநர்களில் முக்கியமானவர் அமீர். சமீப காலமாக சில தேவையில்லாத ஆதரமற்ற குற்றச்சாட்டுகளில் சிக்கி தவித்து வருகிறார்.
முன்னாள் திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக், போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள போதை பொருள் கடத்தல் வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்களை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஜாபர் சாதிக் இயக்குநர் அமீரின் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் தயாரிப்பாளராக இருந்தார். அந்த அடிப்படையில் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை அமீரின் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தில் முதலீடு செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்தனர். ஆனால், சிலர் சோஷியல் மீடியாக்களில் இயக்குநர் அமீர் போதை பொருள் கடத்தலில் தொடர்புடையவர் என்பது போல் சித்தரித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னையில் நடை பெற்ற 'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது, இந்த படத்தில் நடித்துள்ள அமீர் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர், "ஜாபர் சாதிக்கை எனக்கு பத்து ஆண்டுகளாக தெரியும். எனது 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் தயாரிப்பளார் அவர்தான். அவரை பொது வெளியில் தம்பி என்றே அழைத்து வந்தேன். ஆனால், ஜாபர் சாதிக் மீதான குற்ற பின்னணிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை நான் எங்கு வேண்டுமானாலும் தைரியமாக சொல்வேன். ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்ததால் என் மேல் சந்தேக நிழல் விழுவது இயல்புதான். என்னை சந்தேகப்படுங்கள் அது தவறில்லை. ஆனால், தீர்ப்பு எழுதாதீர்கள். அதற்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன." என ஆதங்கப்பட்டார்.
மேலும் அவர் பேசுகையில், " ராமாயணத்தில் வரும் சீடையும், நானும் உடன் பிறந்தவர்கள் போல உள்ளோம். சீதை அக்னியில் இறங்கி தன் கற்பை நிரூபித்தார். நானும் அதே போன்றதொரு சூழ்நிலையில்தான் உள்ளேன். மத்திய போதஒ பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இரண்டு முறை, 21 மணி நேரங்கள் என்னை விசாரித்துள்ளனர். விசாரணையின் போது அவர்கள் கேட்ட கேள்விகள் என்னை கங்க செய்து விட்டன. அவர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். இனியும் ஒத்துழைப்பு கொடுப்பேன்." என தெரிவித்தார்.
தன் மேல் வீண் பழி சுமத்தும் சவுக்கு சங்கர் போன்றவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக, "தன்னை புலனாய்வு புலியாக சொல்லிக் கொள்ளும் சில 'யூ-டியூபர்கள்' என் மீது அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். என் மேலான சந்தேகங்களை விசாரிப்பது தவறு என சொல்ல மாட்டேன். ஆனால், தீர்ப்பை நீதிமன்றங்கள் எழுதட்டும். நீங்கள் எழுதாதீர்கள். என்னை பற்றி நீங்கள் பரப்பும் தவறான் அவதூறுகளால் என் குடும்பத்திஅன்ர் பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தை சீரழிக்கும் போதை பொருட்களை நான் முற்றிலும் வெறுப்பவன். அது தொடர்பாக, என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியவில்லை. குற்றப் பின்னணி உள்ளவருடன் பழக்கம் ஏற்படுத்தி வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையை நான் தேர்வு செய்யவும் இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் சினிமாவிற்கு வரவில்லை." என பேசினார் இயக்குநர் அமீர்.
சில மாதங்களுக்கு முன் தயாரிப்பளார் ஞானவேல்ராஜா இயக்குநர் அமீர் குறித்து தவறான தகவலை பரப்பியபோது திரை உலகின் முக்கிய இயக்குநர்கள் நடிகர்கள் மொத்தமாக சேர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கு கண்டனங்களை தெரிவித்ததோடு, இயக்குநர் அமீரின் நல்ல குணாதியங்களை மனம் விட்டு பொது வெளியில் பேசியது குறிப்பிடத்தக்கது.