நடிகர் நெப்போலியனின் மகன் நிச்சயதார்த்தம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், திருமணம் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்திருமணத்தில் கலந்து கொள்ள நடிகை மீனா மற்றும் கலா மாஸ்டர் உள்ளிட்ட சில திரைப்பட நடிகைகள் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே விமானம் மூலம் ஜப்பான் சென்று விட்டனர்.
நெப்போலியனின் மகன் தனுஷ் தசைச்சிதைவு நோய் காரணத்தால், விமானம் மூலம் ஜப்பான் செல்ல இயலாத நிலையில், சொகுசு கப்பலில் ஏழு நாட்கள் பயணித்து அக்டோபர் மாதமே ஜப்பான் சென்றடைந்தனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை தான் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் நெப்போலியன். அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரை பட்டியை சேர்ந்த 26 வயதான அக்ஷயா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் வீடியோ காலில் நடந்து முடிந்தது. அக்ஷயாவை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கப் போவது தனக்கு மிகுந்த சந்தோஷம் அளிப்பதாகவும் மனநிறைவோடு இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதனை அடுத்து திருமணம் நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஹால்தி, சங்கீத், மெஹந்தி மற்றும் முகூர்த்தம் ஜப்பானில் நடைபெற உள்ளது. இதில் சில நிகழ்வுகளை கலா மாஸ்டரே பொறுப்பேற்று செய்ய உள்ளதாக பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளத்திற்கு பேட்டி அளித்திருந்தார். “கல்யாண பொண்ணு ரொம்ப ஸ்வீட் ,கலையா அழகா இருக்கா. 2024 ல மறக்க முடியாத கல்யாணமா இருக்க போகுது “ என்று கூறியுள்ளார்.
இத்திருமணத்திற்கு நடிகை மீனா, ராதிகா, குஷ்பூ போன்ற 90களில் நடித்த நடிகைகள் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களும் கலந்துகொள்வார்கள். திருமணத்திற்கு வரும் ஒவ்வொருவரையும் விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று அழைத்து வருகின்றார்.
மேலும் குஷ்பூ மற்றும் மீனாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள், கல்யாண நிகழ்வுகளின் ஏற்பாடுகள், விருந்தினர்கள் தங்கும் ஹோட்டல் அறை ஆகியவற்றை பிஹைண்ட் வுட்ஸ் யூட்டியூப் தளத்தில் பதிவிட்டு வருகிறார் கலா மாஸ்டர்.